Thursday, December 2, 2010
தெரிந்துகொள்வோம்-1 (கருணாநிதி-1)
திருவாரூரிலிருந்து 15 மைலில் உள்ள திருக்குவளை என்ற கிராமத்தில் 1924 ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதி பிறந்தார். இவரின் தந்தை பெயர் முத்துவேலர். தாயார் அஞ்சுகம் அம்மையார். இவருக்கு சண்முகசுந்தரம் பெரியநாயகி என்று இரு தமக்கைகள். குடும்பத்துக்கு ஒரே ஆண்பிள்ளை கருணாநிதிதான்.
இவர் தந்தை முத்துவேலர் நன்றாக கவி எழுதும் ஆற்றல் பெற்றவர். வடமொழி கிரந்தங்களிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர். அத்துடன் மிகுந்த கடவுள் பக்தர். மிக இளமையிலேயே அவருக்கு திருமணம் நடந்தது. அவரை விரும்பி திருமணம் செய்த குஞ்சம்மாள் சில ஆண்டுகளில் காலமானார். இரண்டாவதாக மணந்த வேதம்பாலும் மரணம் அடைய மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டவர் அஞ்சுகம் அம்மையார்.
பள்ளியில் படிக்கும்போதே அரசியலிலும் இலக்கியத்திலும் ஆர்வம் மிகுந்தவராக கருணாநிதி விளங்கினார். அப்போது "மாணவ நேசன்" என்ற கையெழுத்து பிரதியை நடத்தினார். இதுதான் பிற்காலத்தில் முரசொலி என்ற பெயரில் துண்டு வெளியீடாகவும் அதன்பின்னர் வார இதழாகவும் நாளிதழாகவும் வளர்ந்தது.
தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்பை தொடங்கி அப்போது அண்ணாமலை பல்கலைகழக மாணவர்களாக விளங்கிய அன்பழகன் மதியழங்கன் ஆகியோரை அழைத்து மன்றத்தில் பேச செய்தார்.
1942 இல் அண்ணா நடத்தி வந்த திராவிட நாடு ஏட்டில் மூன்றாவது இதழில் கருணாநிதி எழுதிய இளமைபலி என்ற எழுத்தோவியம் பிரசுரமாகியது. இக்கட்டுரை அண்ணாவை வெகுவாக கவர்ந்தது. ஒரு விழாவுக்காக திருவாரூர் வந்திருந்த அண்ணா இந்த ஊரில் கருணாநிதி என்பவர் யார்? அவரை அழைத்து வாருங்கள். நான் பார்க்க வேண்டும் என்றார். சில நிமிடங்களில் கருணாநிதி அவர் முன் பொய் நின்றார். கருணாநிதி ஒரு பெரிய ஆளாக இருப்பார் என்று நினைத்திருந்த அண்ணா ஒரு சிறுவனை பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கினார்.
(தொடரும்....)
Labels:
Political News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment