Friday, September 7, 2012

விழுப்புரம் மாவட்டம் ஒரு பார்வை


விழுப்புரம் மாவட்டம் [Villupuram District],  சுமார் 7,217 சதுர.கி.மீ. பரவியுள்ளது. இது தமிழகத்திம் மிகப்பெரிய மாவட்டம் ஆகும். இதன் தலைமையகம் விழுப்புரம் ஆகும். இம்மாவட்டம் 1993-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி உருவானது. அதற்கு முன்பு இருந்த தென்ஆற்க்காடு மாவட்டம் பிரிக்கப்பட்டுவிழுப்புரம் மாவட்டமும் [Villupuram District] கடலூர் மாவட்டமும் [Cuddalore District] உருவானது.

விழுப்புரம் மாவட்டம் [Villupuram District], தெற்க்கு மற்றும் கிழக்கில் கடலூர் மாவட்டத்தாலும் [Cuddalore District] மேற்க்கில் சேலம் மாவட்டம் மற்றும் தருமபுரி மாவட்டத்தாலும் [Dharmapuri District] வடக்கில் திருவண்ணாமலை மாவட்டம் [Thiruvannamalai District] மற்றும்காஞ்சிபுரம் மாவட்டத்தாலும் [Kanchipuram District] சூல்ப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் [Villupuram District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] இம்மாவட்டத்தில் 29,60,373 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்போது இங்கு 63.8% பேர் படித்தவர்கள், ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 34,63,284 பேர் உள்ளதாகவும், இதில் 17,44,832 ஆண்களும் 17,18,452 பெண்கள் உள்ளனர். இங்கு 72.1% பேர் படித்தவர்கள். 

விழுப்புரம் மாவட்டம் [Villupuram District],  8 தாலூக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது.

* Gingee - செஞ்சி
* Kallakurichi - கள்ளக்குறிச்சி
* Sankarapuram - சங்கராபுரம்
* Tindivanam - திண்டிவனம்
* Tirukoilur - திருக்கோவிலூர்
* Ulundurpet - உளுந்தூர்பேட்டை
* Vanur - வானூர்
* Villupuram - விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தின் [Villupuram District],  முக்கிய ஆறுகள்

* கெடில நதி - Gadilam River
* கோமுகியாறு - Komugi
* சங்கராபரணி ஆறு - Sankarabarani River
* செஞ்சி ஆறு - Gingee river
* பெண்ணையாறு - Pennaiyar river
* மணிமுத்தாறு - Manimuthar River

No comments:

Post a Comment