Tuesday, October 2, 2012

திருவள்ளூர் மாவட்டம் ஒரு பார்வை


திருவள்ளூர் மாவட்டம் [Thiruvallur District], சுமார் 3,424 சதுர.கி.மீ. பரவியுள்ளது. இதன் தலைமையகம் திருவள்ளூர் ஆகும். இம்மாவட்டம் தொண்டைநாடு பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் தமிழகத்தின் வடகிழக்கு மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் வடக்கில் ஆந்த்திரா மாநிலமும் கிழக்கில் வங்காள விரிகுடாவும் தென்கிழக்கில் சென்னை மாவட்டமும்தெற்கில் காஞ்சிபுரம் மாவட்டமும் மேற்கில் வேலூர் மாவட்டமும் உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் [Thiruvallur District], 1997-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி தனி மாவட்டமாக உருவாகியது. அதற்கு முன்பாக திருவள்ளூர் மாவட்டமும் காஞ்சிபுரம் மாவட்டமும் ஒன்றினைந்த செங்கல்பட்டு மாவட்டமாக 1968-ஆம் ஆண்டு ஜூலை 6-ஆம் தேதி முதல் 1997-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி இருந்தது.

திருவள்ளூர் மாவட்டம் [Thiruvallur District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] இம்மாவட்டத்தில் 27,54,756 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்போது இங்கு 76.9% பேர் படித்தவர்கள், ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 37,25,697 பேர் உள்ளதாகவும், இதில் 18,78,559 ஆண்களும் 18,47,138 பெண்கள் உள்ளனர். இங்கு 83.8% பேர் படித்தவர்கள். இம்மாவட்டத்தில் [Thiruvallur District], 11 கலை அறிவியல் கல்லூரிகளும் 1 பல்கலை கழகமும் உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் [Thiruvallur District],  9 தாலூக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது.

* Ambathur - அம்பத்தூர்
* Gummidipoondi - கும்மிடிப்பூண்டி
* Madhavaram - மாதவரம்
* Pallipattu - பள்ளிப்பட்டு
* Ponneri - பொன்னேரி
* Poonamallee - பூந்தமல்லி
* Tiruttani - திருத்தணி
* Thiruvallur - திருவள்ளூர்
* Uthukkotai - ஊத்துக்கோட்டை
திருவள்ளூர் மாவட்டத்தின் [Thiruvallur District], முக்கிய சுற்றுள்ளத்தளங்கள்

* Ennore Port - என்னூர் துறைமுகம்
* Heavy Vehicles Factory, Avadi - கன ஊர்தி தொழிற்சாலை [ஆவடி]
* Madhavaram Milk Colony - மாதவரம் பால் பண்ணை
* Pulicat Lake Bird Sanctuary - பழவேற்காடு பறவைகள் காப்பகம்

திருவள்ளூர் மாவட்டத்தின் [Thiruvallur District], முக்கிய ஊர்கள்

* அம்பத்துர் - Ambattur
* ஆரணி - Aarani
* ஆவடி - Avadi
* உத்திரமேரூர் - Uthiramerur
* எண்ணுர் - Ennore
* சின்னமலை - Little Mount
* சைதாப்பேட்டை - Saidapet
* திருவள்ளூர் - திருவள்ளூர்
* திருவொற்றியூர் - Thiruvottiyur
* நந்தம்பாக்கம் - Nandhampakkam
* பழவேற்காடு - Palaverkadu
* பறங்கிமலை - St. Thomas Mount
* பூண்டி - Poondi
* பூவிருந்தவல்லி - Poonamallee
* போரூர் - Porur
* வில்லிவாக்கம் - Villivakkam
* வேளச்சேரி - Velachery

No comments:

Post a Comment