உயர்ந்த நடிகை அனுஷ்கா அவரது செயலாலும் நம் மனதில் உயர்ந்து நிற்கிறார்.
நடிகை அனுஷ்காவுக்கு பெரிய மனசுங்க. தெலுங்கில் அமலா பாலுக்கு வாய்ப்பு வாங்கித் தருகிறார். தன்னுடன் இருக்கும் திருநங்கைக்கு தான் நடிக்கும் படங்களில் சிறு வேடங்கள் கொடுக்குமாறு இயக்குனரிடம் பரிந்துரை செய்கிறார். ஷூட்டிங்கில் சக நடிகர், நடிகைகளுக்கு யோகா கற்றுத் தருகிறார். இதெல்லாம் நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம் தான்.
தற்போது அனுஷ்காவைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது அவர் தனக்கு நீண்ட காலமாக கார் ஓட்டியவருக்கு ஒரு காரைப் பரிசளித்துள்ளார். என்ன தான் நீண்ட காலமாக டிரைவராக இருந்தாலும் யாரும் காரை பரிசளிப்பதில்லை. ஆனால் அனுஷ்கா சற்றே வித்தியாசமானவராகத் தான் உள்ளார்.
அவர் தற்போது இரண்டாம் உலகம், அலெக்ஸ் பாண்டியன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அனுச்கவுக்கு மனசு பெருசு தான் நமக்கு எதுவும் சொல்லி தரமாற்றரே
ReplyDelete