Friday, December 3, 2010

தெரிந்துகொள்வோம்-2 (கருணாநிதி-2 )


     1944 செப்டம்பர் 13 ஆம் தேதி கருணாநிதிக்கு திருமணம் நடந்தது.  மணமகள் பெயர் பத்மா.  கருணாநிதியின் நாடகங்களில் ஒன்றை பார்த்து பாராட்டிய தந்தை பெரியார், அவர் நடத்தி வந்த குடியரசு வார இதழின் துணை ஆசிரியராக கருணாநிதியை நியமித்தார். 
     1946 - இல் திராவிட கழகத்தின் கொடி உருவாக்கப்பட்டபோது, நடுவில் உள்ள சிவப்பு வண்ணத்துக்கு கருணாநிதி தன் ரத்தத்தை காணிக்கை ஆக்கினார். 
     பெரியாருடன் கூட்டங்களில் கலந்துகொண்டு,  சொற்பொழிவுகள் நடத்தினார்.  இந்த சமயத்தில் கோவை ஜுபிடர் நிறுவனத்தினர் தயாரித்த ராஜகுமாரி படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.  இந்த படத்தில்தான் m .g .r . முதன் முதலாக கதாநாயகனாக நடித்தார். 
     இந்தப்படம் வெளிவந்தபோது, கருணாநிதி தந்தை முதுவேலரின் கண் ஒளி மங்கி இருந்தது எனினும் திரை அரங்கத்திற்கு  சென்று வசனங்களை கேட்டு மகிழ்ந்தார்.  மகனின் ஆற்றலைகண்டு பெருமிதம் கொண்டார்.  இந்த நிகழ்ச்சி நடந்து சில நாட்களுக்கு பின்னர் அவர் காலமானார்.  
     கருணாநிதிக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வரத்தொடங்கின.  மனைவி பத்மாவுடன் கோவையில் குடியேறி அபிமன்யு படத்திற்கு வசனம் எழுதினர்.  ஆனால், படத்தில் அவர் பெயர் விளம்பரபடுதபடவில்லை.  
     திராவிடர் கழகத்தில் சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் திரைப்பட வசனகர்த்தாவாகவும் கருணாநிதி வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் அவர் மனைவி பத்மா கணவரையும் கைக்குழந்தை முத்துவையும் கலங்க வைத்துவிட்டு இயற்கை எய்தினார்.  

No comments:

Post a Comment