தான் கல்யாணமே செய்துகொள்ளப் போவதில்லை என்று பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்துக்கும், ஹாலிவுட் நடிகர் ஆன்டனியோ பண்டாரஸு்க்கும் காதல் என்று பேசப்படுகிறது. மல்லிகாவால் தான் பண்டாரஸின் மனைவி பிரிந்து சென்றார் என்று கூட கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் திருமணம் குறித்து மல்லிகா ஷெராவத் கூறுகையில்,
நான் திருமணமே செய்துகொள்ள மாட்டேன். திருமணம் ஓல்டு பேஷன். சிங்கிளாக இருக்கத் தான் பிடித்திருக்கிறது. எனது ரசிகர்களின் அன்பை எதற்காக நான் இழக்க வேண்டும்?
எந்த மாதிரி கணவர் வேண்டும் என்று நான் யோசித்துப் பார்த்ததே இல்லை. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் படங்களில் நடித்து வருகிறேன். அதனால் பிசியாக இருக்கிறேன் என்றார்.
முன்னதாக கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்ற மல்லிகா ஆன்டனியோ பண்டாரஸுடன் மிகவும் நெருக்கமாகப் பழகியதுடன், நடனமும் ஆடினார். அதன் பிறகு பண்டாரஸுடன் விடுமுறையைக் கழிக்க பாரீஸ் செல்வதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment