Monday, March 14, 2011

புதுக்கட்சி துவங்கபோகிறார் மன்சூர் அலிகான்


தேர்தல் நேரத்தில் எதையாவது பரபரப்பாக செய்பவர் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான். இந்‌தமுறையும் தேர்தலில் நிற்கப்போவதாக அறிவித்துள்ளார். நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் அவர் தனித்து போட்டியிடப்போவதாகவும், தேர்தலுக்கு பிறகு "தமிழ் பேரரசு" என்ற ஒரு அமைப்பை துவங்க இருப்பதாகவும் கூறியுள்ளார் மன்சூர் அலிகான்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, இன்றைய சூழலில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் யாருடன் கூட்டணி வைப்பது, எவ்வளவு தொகுதிகள் பெறுவது என்று தான் கவனம் செலுத்துகின்றனர், மக்களை மறந்து விட்டனர். அப்படியே எதாவது நல்லது செய்யலாம் என்று நினைத்தால் தேர்தல் நெருங்கும்‌ போது செய்வார்கள், பின்னர் மறந்துவிடுவார்கள். இது போன்ற செயல்களைப் பார்த்து பார்த்து எனக்கு மனது வெறுத்துப் போய்விட்டது. எனவே இந்த தேர்தலில் எந்த கட்சியுடனும் சேராமல் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளேன். எந்த தொகுதியில் நிற்பேன் என்பதை இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்பேன்.
ஏற்கனவே 1999ல் பார்லிமென்ட் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு அதிக ஓட்டுகள் வாங்கி இருக்கிறேன். அதன்பின்னர் திருச்சி பார்லிமென்ட் தேர்தலிலும் நின்றேன். அங்கு முக்கிய ஆளும் கட்சி தோற்பதற்கு நான்தான் காரணம் என்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்தமுறை நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். நான் சட்டமன்றத்துக்கு சென்றால் ஆளும் கட்சியின் கால்களில் விழுந்தாவது தொகுதி மக்களின் குறைகளைத் தீர்க்க பாடுபடுவேன்.
தமிழகத்தில் தமிழர் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன. வெளி மாநிலத்தவர்தான் இங்கு ஆதிக்கம் செய்கின்றனர். தேர்தலுக்கு பிறகு தமிழர்களுக்கு உதவுவதற்காக தமிழ் பேரரசு என்ற அமைப்பைத் துவங்க இருக்கிறேன், என்றார். (dinamalar)

No comments:

Post a Comment