Showing posts with label Devotionals. Show all posts
Showing posts with label Devotionals. Show all posts

Saturday, August 11, 2012

Divotionals-1(ஸ்ரீரங்கத்து ராமானுஜர்)

 படியளக்கும் பெருமாள், கனவில் வந்து காலணி கேட்கும் பெருமாள் கோயில் கொண்டிருக்கும் இந்தப் பகுதியில் பக்தர்கள் எளிதாக நடமாட இயலா தபடி மணற் குவியலும் கற்களுமாக நிரம்பியிருந்தன. தெளிவாகச் சொல்வதானால் இந்தப் பகுதிக்கு வரும் வழியே அடைபட்டுக் கிடந்திருக்கிறது.  இதைச் சீர் செய்து, கோயிலின் எல்லாப் பகுதிகளையும் எல்லா பக்தர்களும் சுலபமாக அடையும் வகையில் தடைகளைத் தகர்த்து, நேர்வழி அமைத் துக் கொடுத்திருக்கிறார், இந்த நூற்றாண்டு ராமானுஜர்! ஆமாம், இணை ஆணையராகப் பொறுப்பு மேற்கொண்டு சமீபத்தில் ஓய்வும் பெற்றுவிட்ட  ஜானகிராமன்தான் அவர். காலையில் கோயிலுக்குள் நுழைந்தது முதல், இரவு கவியும் நேரம்வரை கோயிலுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்து ஒவ்வொரு பகுதியையும் மேம்படுத்தியிருக்கிறார் இவர். 

குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு பகுதி, சந்திர புஷ்கரணி. இந்தக் குளத்தை முறையாக தூர்  வாரி, நீர் ஆதாரத்தை வளப்படுத்தியிருக்கிறார். பக்தர்கள் யாரும் உள்ளே வரமுடியாதபடி நிறுத்தப்பட்டிருந்த தடைக் கதவைப் பெயர்த்து குளத்தின்  படிக்கட்டுகளுக்கருகே பொருத்தியிருக்கிறார். இதனால்