Monday, October 20, 2014

இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளி  திருநாள் வாழ்த்துக்கள் 

Tuesday, February 25, 2014

sorry

வணக்கம் நண்பர்களே சிறிது காலமாக உங்களை பிளாக்கர் மூலம் சந்திக்க முடியவில்லை அதற்காக வருந்துகிறேன் .  கூடிய விரைவில் உங்களை சந்திக்கிறேன்........

Thursday, October 17, 2013

கொடிஞ்சி இரட்டையர் கிராமம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொடிஞ்சி கிராமம் இரட்டையர்கள் கிராமம் என்றே பிரபலமாக அழைக்கப்படுகிறது.

இந்த கிராமத்தில் 2008-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் போது பல சுவாரசியமான விஷயங்கள் வெளிவந்தன. அதாவது முதலில் 100 இரட்டையர்கள் என்று கணக்கிடப்பட்டு, 200 இரட்டையர்கள் என்றாகி தற்போது 400 ஜோடி இரட்டையர்களை இந்த கிராமம் கொண்டிருக்கிறது. அதுவும் உலக அளவில் இந்தியா இரட்டையர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் இந்த கிராமம் உலகப் பிரசித்தி பெற்றுவிட்டது.


Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/strange-mysterious-places-india-000020.html

பறவைகள் தற்கொலை செய்யும் இடம்!

ஜதிங்கா எனும் கிராமம் பறவைகளின் தற்கொலை பூமியாக மாறி வருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களில் பறவைகள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்துகொள்கின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

அதாவது இந்த பருவத்தில் ஏற்படும் வானிலை மாற்றம் காரணமாக நிலத்தடி நீரில் உள்ள காந்தப் பண்புகள் மாறி அது பறவைகளின் உடலியல் இயக்கங்களை பாதித்து தற்கொலைக்கு தூண்டுகிறது என்ற ஒருசாரார் நம்புகின்றனர். அதேபோல பறவைகள் கூடு அதிவேக காற்றால் சிதறடிக்கப்பட்டு பறவைகளை ஒரு ஒளியை நோக்கி திருப்பிவிட்டு மூங்கில் கம்புகளை கொண்டு பழங்குடியின மக்கள்தான் அடித்துக்கொள்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.


Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/strange-mysterious-places-india-000020.html

Tuesday, May 28, 2013

கோச்சடையான் டிரைலர் வெளியாகாதது ஏன்?

 நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் தேறிய பின்னர் நடித்து வெளிவர உள்ள படம்; தனது இரண்டாவது மகள் சவுந்தர்யா இயக்குனராக அவதரித்துள்ள படம், ரஜினிகாந்த் நடித்துள்ள முதல் 3டி படம்; இந்தியாவிலேயே முதன்முதலாக மோஷன் கேப்சர்ஸ் தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ள முதல் 3டி படம்; ரஜினி அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வெளிவர இருக்கும் படம் என ஏகப்பட்ட சிறப்பு அம்சங்களுடன் உருவாகியுள்ள படம் கோச்சடையான். இப்படத்தில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷெரப், நாசர், ஷோபனா, ருக்மணி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வருகிறது. 

இந்நிலையில் இப்படத்த‌ின் டிரைலரை சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட திட்டமிட்டு இருந்தனர். இதற்காக ரஜினி உள்ளிட்ட கோச்சடையான் படக்குழுவினர் கேன்ஸ் பட விழாவுக்கு செல்லவிருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அந்த பயணத்தை ரத்து செய்துவிட்டனர். ரஜினியின் உடல்நிலை சரியில்லாததால் கேன்ஸ் பட விழாவை ரத்து செய்துவிட்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் இதனை படத்தின் இணை தயாரிப்பாளர் முரளி மனோகர் மறுத்துள்ளார். மேலும் டிரைலர் ரிலீஸ் ஆகாததற்கான ‌காரணத்தையும் அவர் கூறியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, கோச்சடையான் படத்தின் டிரைலரை பார்த்த ரஜினி, ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்டவர்கள் டிரைலரை இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்யலாம் என்று கூறினார்கள். அவரச ‌கோலத்தில் சரியாக செய்யாமல் இன்னும் கொஞ்சம் பொறுமையாக, அற்புதமாக செய்யலாம் என்று ரஜினி கூறியதால் கடைசி நேரத்தில் கேன்ஸ் படவிழாவை ரத்து செய்துவிட்டோம். இன்னும் சில தினங்களில் கோச்சடையான் படத்தின் மெருகூட்டப்பட்ட டிரைலர் வெளியாகிவிடும். கேன்ஸ் தவிர இன்னும் எத்தனையோ சர்வதேச பட விழாக்கள் இருக்கின்றனர். அதில் டிரைலரை வெளியிடுவோம் என்று கூறியுள்ளார். 
readmore at

Saturday, March 2, 2013

உலகின் மாபெரும் ரயில் கொள்ளையன் 81 வயதில் மரணம்!

உலகின் மாபெரும் ரயில் கொள்ளையன் என்று வர்ணிக்கப்படும் இங்கிலாந்தின் ப்ரூஸ் ரெனால்ட்ஸ் தனது 81வது வயதில் லண்டனில் மரணமடைந்தார். உடல் நலக்குறைவு காரணமாக தனது தந்தை இறந்ததாக ப்ரூஸின் மகன் நிக் ரெனால்ட்ஸ் தெரிவித்துள்ளார். 1963ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஒரு ரயில் கொள்ளைச் சம்பவம் அப்போது உலகையே பரபரப்பில் ஆழ்த்தியது. கிளாஸ்கோவிலிருந்து லண்டன் சென்ற லண்டன் மெயில் ரயிலில் நடந்த பரபரப்பான கொள்ளை அது. அப்போது அந்த ரயிலில் புகுந்த கொள்ளைக் கும்பல் அதிலிருந்து 20 லட்சம் பவுண்டு பணத்தை கொள்ளையடித்து விட்டு துணிகரமாக தப்பியது. அந்தப் பணத்தின் மதிப்பு இப்போது 4 கோடி பவுண்டுகளாகும். இந்தக் கொள்ளைச் சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இங்கிலாந்தே ஆடிப் போனது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தை திட்டமிட்டு நடத்திய கொள்ளைக் கும்பலின் தலைவர்தான் ப்ரூஸ். கொள்ளைச் சம்பவத்திற்குப் பின்னர் 5 வருடம் தலைமறைவாக இருந்தார் ப்ரூஸ். 1968ம் ஆண்டுதான் அவர் சிக்கினார். பின்னர் அவருக்கு 25 வருட சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட அவர் பத்து வருடத்தில் விடுவிக்கப்பட்டார். பிறகு எழுத்தாளராக மாறி பத்திரிகைகளில் எழுதினார். சுயசரிதை எழுதினார். இப்போது மரணமடைந்துள்ளார்.

Read more at:

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, 31வது நாளாக உண்ணாவிரதம்

 பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, 31வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் சசி பெருமாளின் உடல்நிலை, கவலைக்கிடமாக உள்ளது. பூரண மது விலக்கு கோரி, கடந்த, ஜனவரி 30ம் தேதி, சேலத்தை சேர்ந்த காந்தியவாதி சசி பெருமாள், 57, மெரினா கடற்கரையில், காந்தி சிலை அருகில், உண்ணாவிரதம் இருந்தார். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளியே வர முடியாது எனக் கூறி, சிறையிலும் அவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அவரது உடல் நிலை மோசமானது. கடந்த, 19ம் தேதி முதல், ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு ஜாமின் பெற்றனர். கடந்த சில தினங்களுக்கு முன், மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்த அவர், மெரினா கடற்கரையில் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். இதையடுத்து போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
ஆனால், பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை, உண்ணாவிரதத்தை கைவிடுவதில்லை என்ற முடிவுடன், கடந்த 25ம் தேதி மயிலாப்பூர் கீழ அபிராமிபுரத்தில், தியாகி நெல்லை ஜெபமணியின் மகன் வீட்டில், உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். 31வது நாளாக, நேற்றும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அவரது உடல் நிலை மோசம் அடைந்து வருகிறது. டாக்டர்கள், அவ்வப்போது அவரை பரிசோதித்து வருகின்றனர். இந்நிலையில், சசிபெருமாளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு, அரவிந்த் கெஜ்ரிவாலின், "ஆம் ஆத்மி' கட்சியினர், மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் நத்தம் விசுவநாதனை சந்தித்து, மனு கொடுத்தனர்.
read more at: