Showing posts with label others. Show all posts
Showing posts with label others. Show all posts

Friday, September 7, 2012

60,000 நன்றிகள்....

நமது தலம்  ஆரம்பித்து இன்றுடன் வருகையாளர்களின் எண்ணிக்கை 60,000 தை தொட்டுள்ளது என்ற சந்தோசமான விசயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் சந்தோசபடுகிறேன்.
இதுவரை எமக்கு ஆதரவு அளித்த வருகையாலர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும், திரட்டிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை சமர்பிக்கிறேன். 
மேலும் எமக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்துவரும் பதிவுலக நண்பர்களுக்கும் நன்றியினை தெரிவித்துகொள்கிறேன். அதிலும் குறிப்பாக வேலன் அவர்களுக்கும் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் எனது 60,000 நன்றிகள்.

Thursday, September 6, 2012

12 வது இடம் கொடுத்த india-topsites- க்கு நன்றிகள்







எமது தலத்திற்கு செய்திகள் பிரிவில் 12- வது இடம் கொடுத்த india-topsites- க்கு நன்றிகள்.

Monday, September 3, 2012

இறைவனிடம் கையேந்துங்கள்!

     வணக்கம் நண்பர்களே, இவரது பெயர் மாலா.  சிதம்பரத்தில் வசிக்கிறார். திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன.  தலை வலிக்காக மருத்துவமனைக்கு சென்ற இவருக்கு கேன்செர் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதன் பிறகு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.  ஆனால் 4 மாதங்களுக்கு பிறகு கட்டி மீண்டும் வளரத்தொடங்கியது.  இப்பொழுது சிதம்பரம் முத்தையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று எங்களால் எதுவும் செய்யமுடியாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.  கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பில் இருக்கும் இவருக்காக நாம் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும் என்பதற்காக இந்த பதிவினை எழுதுகிறேன்.
இறைவனிடம் கை ஏந்துவோம்.... அவன் இல்லை என்று சொல்லுவதில்லை.....

Saturday, August 25, 2012

நீங்க மனசு வச்சா ஒரு பத்திரிகையாளர் குடும்பத்தை காப்பாத்தலாம்!


 மிகக் கொடிய புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள திரைப்பட பத்திரிகையாளர் திரைநீதி செல்வத்தின் மருமகனின் உயிரைக் காக்க, நல்ல உள்ளங்களிடமிருந்து உதவியை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
இலங்கை கண்டியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த 'செய்தி' பத்திரிகையில் நிருபராக பணிபுரிந்து கொண்டிருந்தவர் திரைநீதி செல்வம். இனக்கலவரத்திற்கு பின் அங்கிருந்து தமிழகத்திற்கு புலம் பெயர்ந்தவர், இங்கு திரைப்பட செய்தி தொடர்பாளராகவும், மனோரமா போன்ற நட்சத்திரங்களுக்கு மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றி வந்தார். விஜயகாந்த் படங்களில் கூட பணியாற்றியுள்ளார்.
நல்லமுறையில் நகர்ந்து கொண்டிருந்த அவரது வாழ்வில் திடீர் புயல். அவரது மகள் தாரணியின் கணவர் எஸ்.சீனிவாசன் (வயது 48) திடீரென கொடிய புற்றுநோயால் தாக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு தன்னாலான முயற்சியால் சுமார் 2 லட்சம் வரை செலவழித்துள்ள அவர் இன்று மிக மிக வறுமை நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
சீனிவாசனுக்கு இரண்டு மூன்று வருடங்களுக்கு தொடர் கீமோ தெரபி சிகிச்சை அளித்தால்தான் அவர் உயிர் பிழைக்க முடியும் என்கிற சூழ்நிலை. ஒவ்வொருமுறை கீமோ தெரபி செய்யும் போதும் ஐம்பதாயிரத்திற்கு குறையாமல் செலவாகும் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த கஷ்டத்தால், சீனிவாசன் மகனின் கல்லூரி படிப்பே முடங்கும் பரிதாபம்.
எனவே அன்புள்ளம் கொண்ட வாசகர்கள் கீழ்காணும் மருத்துவமனை முகவரிக்கே தங்களின் உதவியை காசோலை மூலமாகவோ, நேரடியாகவோ சென்று அளிக்கலாம்.
Film journalist seeks help to save his son in law from cancer
தற்போது அடையார் கேன்சர் இன்ஸ்டியூட்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் எஸ்.சீனிவாசன். அன்புள்ளம் கொண்ட வாசகர்கள் மருத்துவமனைக்கு நேரடியாகவோ சென்றோ, அல்லது வங்கி மூலமோ தங்கள் உதவியை அளிக்கலாம்.
S.SRINIVASAN
CREDIT OF S/B AC OF CANCER INSTITUTE (WIA) A/C NO. 1
ANDRA BANK CI (WIA) EXTN.COUNTER
18, SARDAR PATEL ROAD, CHENNAI 600036
mobile number- 09884054756 / 09381802748

Wednesday, August 15, 2012

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

நாடு....
என்ற இரண்டெழுத்தை காப்பாற்ற 
உயிர்....
என்ற மூன்றெழுத்தை கொடுத்து 
பிரிவினை....
என்ற நான்கெழுத்தை ஒழிக்க 
தியாகிகள் ....
என்ற ஐந்தெழுத்து வீரர்கள் 
நமக்கு வாங்கிகொடுத்த 
ஆறெழுத்து மந்திரம் 
சுதந்திரம்!

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!  மூன்று நாட்களாக எனது பிறந்த தினத்திற்காக வெளியூர் சென்றிருந்ததால் சுதந்திர தின பதிவுகளை எழுதமுடியவில்லை.
பின்குறிப்பு:
காந்தி நாட்டிற்காக வாங்கிகொடுத்த சுதந்திரத்தை 
காந்தி நோட்டிற்காக அடகு வைத்துவிடாதீர்கள் !

Sunday, August 12, 2012

சென்னையில் மாபெரும் பதிவர்கள் சந்திப்பு ஆகஸ்ட் 26



இன்றைய ராசிபலன்


மேஷம் -யோகம்

ரிஷபம் -சாந்தம்
மிதுனம் -உயர்வு
கடகம் - நற்சொல்
சிம்மம் -இன்பம்
கன்னி -ஜெயம்
துலாம் -சாதனை
விருச்சிகம் -முயற்சி
தனுசு -சுகம்
மகரம் -யோகம்
கும்பம் -போட்டி
மீனம் -உற்சாகம்

Friday, August 10, 2012

முகவரி மாற்றம்...

நமது தளம்   இன்று முதல்  blogspot.in முகவரியிலிருந்து  .in முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்.

Monday, August 6, 2012

U.S.A VS INDIA (FACEBOOK IMAGES)


கோரிக்கை வைத்த சிம்பன்சி!


 இங்கிலாந்தில் உள்ள ஒரு விலங்கியல் பூங்காவில் அடைக்கப்பட்டிருந்த சிம்பன்சி, தன்னை வேடிக்கை பார்க்க வந்தவரிடம், இந்தக் கேட்டைத் திறந்து விடுங்கள் என்று 'சைன் பாஷையில்' பேசியது அனைவரையும் வியக்க வைத்தது. அதை விட ஆச்சரியமாக, அந்தக் கதவை எப்படித் திறக்க வேண்டும் என்பதையும் சிம்பன்சி சொல்லிக் கொடுத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனிதனுக்கு மட்டும்தான் ஆறறிவு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால்

Monday, July 30, 2012

மொபைல் வழி பணபரிவர்த்தனை சேவை: தபால் துறையின் புதிய திட்டம்!


மொபைல் மூலமாக பணபரிவர்த்தனைகளை செய்யும் புதிய வசதியினை நமது இந்திய தபால் துறை அறிமுகம் செய்ய இருக்கிறது.
சிறப்பாக செயலாற்றி கொண்டு வரும் இந்திய தபால் துறை மொபைல் போன் மூலமாக பணபரிவர்த்தனைகளை (மணி ஆர்டர்) செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தினை கூடிய விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக இந்திய தபால் துறையின் உயர் அதிகாரி சோபா கோஷி கூறியுள்ளார்.
இந்த மொபைல் வழி பணபரிவர்த்தனை வசதியை, பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகம் செய்ய உள்ளது இந்திய தபால் துறை.
இதனால் தபால் அலுவலகங்களில், பணபரிவர்த்தனைகள் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த வசதியினை

Tuesday, July 24, 2012

சிவன்கோவில்-விக்கிரமங்கலம்: தல வரலாறு

சிவன்கோவில்-விக்கிரமங்கலம்: தல வரலாறு: ஊர் பெயர் :      இந்த ஊரின் பழைய பெயர் விக்கிரம சோழபுரம்  என்பதாகும். விக்கிரம சோழன்  என்ற  பட்ட பெயர் கொண்ட முதலாம் ராஜேந்திர சோழன்  (10...

Monday, July 23, 2012

இலங்கை கிரிக்கெட் அணி தோற்கும்போதெல்லாம் ....


 இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவிடம் எப்போதெல்லாம் தோற்கிறதோ அப்போதெல்லாம் இலங்கை கடற்படை ரவுடிகள், தமிழக மீனவர்களைத் தாக்குவதும், கொல்வதும் வாடிக்கையாகி வருகிறது. இது வேண்டும் என்றே நடக்கிறதா அல்லது தற்செயலானதா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. வேண்டும் என்றே நடக்கும் சம்பவமாக இருந்தால் எதிர்காலத்தில்