Showing posts with label cinema. Show all posts
Showing posts with label cinema. Show all posts

Monday, October 20, 2014

இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளி  திருநாள் வாழ்த்துக்கள் 

Tuesday, May 28, 2013

கோச்சடையான் டிரைலர் வெளியாகாதது ஏன்?

 நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் தேறிய பின்னர் நடித்து வெளிவர உள்ள படம்; தனது இரண்டாவது மகள் சவுந்தர்யா இயக்குனராக அவதரித்துள்ள படம், ரஜினிகாந்த் நடித்துள்ள முதல் 3டி படம்; இந்தியாவிலேயே முதன்முதலாக மோஷன் கேப்சர்ஸ் தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ள முதல் 3டி படம்; ரஜினி அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வெளிவர இருக்கும் படம் என ஏகப்பட்ட சிறப்பு அம்சங்களுடன் உருவாகியுள்ள படம் கோச்சடையான். இப்படத்தில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷெரப், நாசர், ஷோபனா, ருக்மணி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வருகிறது. 

இந்நிலையில் இப்படத்த‌ின் டிரைலரை சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட திட்டமிட்டு இருந்தனர். இதற்காக ரஜினி உள்ளிட்ட கோச்சடையான் படக்குழுவினர் கேன்ஸ் பட விழாவுக்கு செல்லவிருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அந்த பயணத்தை ரத்து செய்துவிட்டனர். ரஜினியின் உடல்நிலை சரியில்லாததால் கேன்ஸ் பட விழாவை ரத்து செய்துவிட்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் இதனை படத்தின் இணை தயாரிப்பாளர் முரளி மனோகர் மறுத்துள்ளார். மேலும் டிரைலர் ரிலீஸ் ஆகாததற்கான ‌காரணத்தையும் அவர் கூறியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, கோச்சடையான் படத்தின் டிரைலரை பார்த்த ரஜினி, ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்டவர்கள் டிரைலரை இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்யலாம் என்று கூறினார்கள். அவரச ‌கோலத்தில் சரியாக செய்யாமல் இன்னும் கொஞ்சம் பொறுமையாக, அற்புதமாக செய்யலாம் என்று ரஜினி கூறியதால் கடைசி நேரத்தில் கேன்ஸ் படவிழாவை ரத்து செய்துவிட்டோம். இன்னும் சில தினங்களில் கோச்சடையான் படத்தின் மெருகூட்டப்பட்ட டிரைலர் வெளியாகிவிடும். கேன்ஸ் தவிர இன்னும் எத்தனையோ சர்வதேச பட விழாக்கள் இருக்கின்றனர். அதில் டிரைலரை வெளியிடுவோம் என்று கூறியுள்ளார். 
readmore at

Saturday, March 2, 2013

"வாழு வாழவிடு" அஜீத்தின் புதிய கோஷம்

இப்போதெல்லாம் அஜீத் யாரை சந்தித்தாலும், விடைகொடுத்து அனுப்பும்போது "வாழுங்கள், வாழ விடுங்கள்" என்று கடைசியாக சொல்லித்தான் அனுப்புகிறாராம். ஆட்டோகிராப் போடும்போதும் "வாழு வாழவிடு" என்று எழுதியே கையெழுத்துப் போடுகிறார்.

அஜீத்தின் அடுத்த படத்தை விஜயா புரொடக்ஷ்ன் நிறுவனம் தயாரிக்கிறது. சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்தப் படத்தில் அஜீத் 5 தம்பிகளுக்கு அண்ணனாக நடிக்கிறார். அவரது தம்பிகளாக நடிக்க நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. இதுவரை விதார்த், பாலா சுஹைல், முனீஸ் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். இதில் முனீஸ் சமீபத்தில் அஜீத்தை சந்தித்து தனது நன்றியை தெரிவித்தார்.

இதுகுறித்து முனீஸ் கூறியதாவது: நான் அவரை சந்தித்து நன்றி கூற விரும்பினேன். "இதற்காக நேரத்தை வீணடிக்க வேண்டாம், படப்பிடிப்பில் சந்திப்போம்" என்று சொன்னார். நான்தான் விடாப்பிடியாக அவரை சந்திக்க நேரம் கேட்டுப்போனேன். என்னை தேர்வு செய்ததே அவர்தான் என்பது அன்றுதான் எனக்குத் தெரியும். நான் அவருக்கு நன்றி சொன்னதும். அவர் எனக்கு சில அறிவுரைகளை கூறினார். அதை என் இதயத்தில் எழுதி வைத்திருக்கிறேன். அவர் சொன்னது இதுதான்.

"கடுமையாக உழைக்க வேண்டும், நாணயமாக வரி கட்ட வேண்டும், மூத்தவர்களை மதித்து நடக்க வேண்டும். மூத்தவர்களுடன் நிறைய நேரம் செலவிட வேண்டும். வருமானத்தின் ஒருபகுதியை இயலாதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் கொடுக்க வேண்டும். அடுத்தவர் வாழ்வில் உன் கருத்தை திணிக்ககூடாது. உன் வாழ்வில் அடுத்தவர் கருத்தை திணிக்க அனுமதிக்ககூடாது. நீ யாருடன் பழக வேண்டும், பணி செய்ய வேண்டும் என்பதை பணம் தீர்மானிக்க கூடாது, உன் மனம் தீர்மானிக்க வேண்டும். வாழு வாழவிடு. இது என் அறிவுரை அல்ல அனுபவம்" இப்படிச் சொல்லி கைகொடுத்து விடைகொடுத்து அனுப்பினார்.

இவ்வாறு முனீஸ் கூறினார். 

read more at:

Friday, March 1, 2013

சலூன் கடை பவர் ஸ்டார்!

பவர் ஸ்டார் சீனிவாசன் வரவிருக்கும் ஒரு படத்தில் சலூன் கடை வைத்திருப்பவராக நடித்துள்ளார். இதில் அவர் எம்எஸ் பாஸ்கருடன் சேர்ந்து காமெடி பண்ணியிருக்கிறாராம். எஸ்.எம்.ஆர். கிரியேஷன்ஸ் சார்பில் புதுச்சேரி ஆர்.பன்னீர் செல்வம் தயாரிக்கும் படம் ‘நாலு பொண்ணு நாலு பசங்க'. இந்த படத்தின் கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி இயக்குகிறார் சிரஞ்சீவி அனீஸ். இந்த படத்தில் காதல் பித்தானாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்க, அவருடன் முக்கிய காமெடி வேடத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன், நெல்லை சிவா, ஆர்த்தி, நான்ஸி, ராமசந்திரன், சுந்தரி, வீரா, ரியாஸ்கான் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று மதுரவாயல் பகுதியில் நடை பெற்றது. காட்சியின் படி ஒரு மரத்தடியில் சலூன் கடை வைத்திருப்பவர் பவர் ஸ்டார். அவரிடம் சேவிங் செய்து கொள்ளும் எம்.எஸ்.பாஸ்கரிடம் தனது காதலின் ஆழத்தை தெரிவித்து, அவளை தன்னுடன் சேர்த்து வைக்க உதவி கேட்பார் பவர் ஸ்டார். அதற்கு எம்.எஸ்.பாஸ்கர், ஐடியா சொல்லுகிறார். இந்தக் காட்சி குறித்து சீனிவாசன் கூறுகையில், "நாலு பொண்ணு நாலு பசங்க படத்துல எம்எஸ் பாஸ்கரோடு நானும் முதல் முறையா சேர்ந்து ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறேன். ரொம்ப ரசித்து நடிக்கிறேன். கலகலப்பான காட்சிகள் நிறைய இருக்கு. அதே போல படப்பிடிப்பும் கலகலப்பா போய்கிட்டு இருக்கிறது. மனசும் மனசும் இணைவது மட்டுமல்ல காதல். நல்ல மனிதர்களை இணைப்பதும் காதல்தான். காதல் பொழுது போக்கு அல்ல. அது சக்தி வாய்ந்த உறவு என்பதை வலியுறுத்தி இந்த படத்தை இயக்குகிறார் இயக்குனர் சிரஞ்சீவி அனீஸ். இந்தப் படத்தை ரசிகர்கள் பார்த்து வெற்றி அடைய வைக்கணும்னு கேட்டுக்கிறேன். நன்றி," என்றார். இவ்வாறு பவர் ஸ்டார் சீனிவாசன் கூறினார்.

Read more at:

கன்னட பவர்ஸ்டார்களை முந்திய தமிழ் பவர் ஸ்டார்

கூகுளில் கோலிவுட் பவர் ஸ்டார் சீனிவாசன் டோலிவுட் மற்றும் சாண்டல்வுட் பவர் ஸ்டார்களை முந்திவிட்டார். டாக்டர் சீனிவாசனுக்கு திடீர் என்று நடிக்க ஆசை வந்து லத்திகா என்ற படத்தை எடுத்து வெளியிட்டார். படத்தை ஓட வைக்க தானே ஒரு தியேட்டரை ஒரு வருடத்திற்கு வாடகைக்கு எடுத்து ஓட்டினார். படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு பிரியாணி கொடுத்தார். மேலும் படத்தின் பாதி டிக்கெட்டை கொண்டு வருபவர்களுக்கு சென்னையில் உள்ள தனது மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையும் அளித்தார். தனக்கு தானே பவர் ஸ்டார் என்று பெயர் வைத்துக் கொண்டு சமூக வலைதளங்களில் பப்ளிசிட்டி தேடினார். இந்த நிலையில் தான் சந்தானத்துடன் சேர்ந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தார். அந்த படத்தில் சந்தானம் பவரை ஓட்டு ஓட்டு என்று ஓட்டி எடுத்தார். விளைவு இன்று பவர் கை நிறைய படங்கள் பிளஸ் புகழ்.

Read more at:

Thursday, February 28, 2013

சமூக சேவை புரியும் ஹன்சிகா : இளம் சாதனையாளர் விருதுக்கு தேர்வு

பிரபல நடிகை ஹன்சிகா இளம் சாதனையாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரைப்பட சாதனைகள், சமூக சேவைகள் இவற்றை பாராட்டி இவருக்கு மார்ச் 1ம் தேதி இந்த விருது வழங்கப்பட உள்ளது. மும்பையைச் சேர்ந்த ஹன்சிகா. இவர் 6 வயதிலிருந்தே இந்திப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமான ஹன்சிகா, தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக உயர்ந்துள்ளார். நடிகையாக இருந்தாலும் சமூக சேவைகள் செய்வதில் ஆர்வமுள்ளவர் ஹன்சிகா. தனது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மும்பை குடிசை பகுதியில் இருந்து ஒரு ஏழைக் குழந்தையை தத்தெடுத்து அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான செலவுகளை ஏற்றுக் கொள்கிறார். இதுவரை 21 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். விரைவில் நிரந்தரமா ஒரு அறக்கட்டளை தொடங்கவும் ஏற்பாடு செய்திருக்கிறார்.

Read more at: 

விஜய்க்காக புதுமாதிரியான கதையை தயார் செய்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வெளியான படம் துப்பாக்கி. இநத படம் வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு, விஜய்யின் கேரியரிலும் மாறுபட்ட படமாகவும் அமைந்தது. அதனால் இனி தான் நடிக்கிற ஒவ்வொரு படமும் அந்த அளவுக்கு பிரமாண்டமான படங்களாகவும், பெரிய வசூலை ஈட்டக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டே புதிய படங்களை கமிட் பண்ணுகிறார் விஜய். அந்த வகையில் தற்போது அவர் நடித்து வரும் தலைவா படமும் 100 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. அதோடு, படத்தை இந்தியில் வெளியிடும் நோக்கத்தில் பாலிவுட் நடிகை ராகினியையும் இப்படத்தில் நடிக்க வைத்துள்ளனர்.

இந்தப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்க இருப்பதாக தற்போது புதிய செய்தி வெளியாகியுள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது இந்தியில் துப்பாக்கியை இயக்கி வரும் நான், அடுத்த படத்தை தமிழில் விஜய்யை வைத்து இயக்குகிறேன். ஆனால் அந்த படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்காது. இதுவரை விஜய் நடிக்காத புதுமையான கதையாகவும், இதுவரை விஜய்யை பார்த்திராத கோணத்தில் ரசிகர்கள் பார்க்கும் மாதிரியான புது மாதிரியான படமாகவும் அது இருக்கும் என்று சொல்லும் முருகதாஸ், அப்படத்தில் பல ஹாலிவுட் டெக்னீசியன்களும் இடம்பெறுவார்கள் என்கிறார்.
source

Monday, January 28, 2013

புலிகள் நடமாடும் அடர்ந்த காட்டில் தங்கிய சூர்யா... விசாரணைக்கு உத்தரவு!

புலிகள் நடமாடும் தேனி - கூடலூர் மலைப் பகுதியில் சூர்யா கலந்து கொண்ட சிங்கம் 2 படப்பிடிப்பு நடந்தது. இது இப்போது சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது. ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் சிங்கம் 2. இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது இதன் படப்பிடிப்பு. மாற்றான் சரியாகப் போகாத வருத்தத்தில் உள்ள ரசிகர்களை, சூர்யாவின் முறுக்கேற்றும் ஸ்டில்கள் உற்சாகம் கொள்ள வைத்துள்ளன. இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேக்கடியில் நடந்தது. அன்று இரவு பெரியாறு புலிகள் சரணாலய பகுதியான முல்லைக்கொடி என்ற இடத்தில் வனத்துறைக்கு சொந்தமான பங்களாவில் தங்கினார். இந்த இடத்துக்கு தேக்கடி படகு நிறுத்த பகுதியில் இருந்து படகு மூலம் சென்று 24 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் ஜீப்பில் செல்ல வேண்டும். நடிகர் சூர்யாவை அப்பகுதியில் தங்க வைப்பதற்கு கேரள வனத்துறையினர் இரவு 8 மணிக்கு மேல் வனத்துறைக்கு சொந்தமான ஜீப்பில் அழைத்துச் சென்றுள்ளனர். கடந்த வருடம் கேரள வனத்துறை அமைச்சர் கணேஷ்குமார் இரவு 8 மணிக்கு மேல் தேக்கடி படகு நிறுத்தத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள லேக் பேலஸ் என்ற இடத்துக்கு சென்றார். இதற்கு அப்போது எதிர்ப்பு கிளம்பியதால் அவர் உடனடியாக திருப்பி அனுப்பப்பட்டார். ஆனால் இப்போது நடிகர் சூர்யாவை 24 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு கேரள வனத்துறையினரே அழைத்துச் சென்றுள்ளனர். புலிகள் உள்ளிட்ட ஆபத்தான வனவிலங்குகள் அதிகம் நடமாடும் ஆபத்தான பகுதிக்கு சூர்யாவை அழைத்துப் போய் தங்க வைத்தது இப்போது விசாரணை வரை போய்விட்டதாம்.

Read more at:

Friday, January 25, 2013

கமலை நினைத்து மனம் கலங்குகிறேன் - ரஜினி அறிக்கை

என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த சில நாட்களாக ‘விஸ்வரூபம்' திரைப்படப் பிரச்சினைகளை அறிந்து மிகவும் வேதனைப்படுகிறேன். கமல் எனது 40 ஆண்டுகால நண்பர். யாருடைய மனதையும் புண்படுத்தும்படியாக நடந்து கொள்ளாதவர் என்பதை நன்கு அறிவேன். இத் திரைப்படம் தணிக்கையான பிறகு தியேட்டர்களில் வெளியிடுவதற்கு முன்பே இஸ்லாமிய சகோதரர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு திரையிட்டு காண்பித்ததிலிருந்தே இஸ்லாமிய சமூகத்தின் மீது கமல் கொண்டுள்ள மதிப்பையும், மரியாதையையும் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. மேலும் கமலஹாசன் இந்த படம் தயாரிக்க சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு என்னென்ன சிரமங்கள் அனுபவித்திருக்கிறார் என்பதை அறியும்போது என் மனம் கலங்குகிறது. கமல் ஒரு சாதாரண கலைஞன் அல்ல. தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு செல்வதற்கு ஒரு காரணமாக உள்ள மகா கலைஞன். இதையெல்லாம் மனதில் கொண்டு இந்த படத்தை முழுசா தடை செய்ய வேண்டும் என்ற கருத்திலிருந்து மாறி, கமல் வந்த பிறகு கலந்து பேசி, கதைக்கு பாதிப்பு வராத வகையில் சரிசெய்து படத்தை வெளியிட உறுதுணையாக இருக்குமாறு மிலாதுநபி வாழ்த்துக்களுடன் இஸ்லாமிய சகோதரர்களை கேட்டுக்கொள்கிறேன். ஜெய்ஹிந்த். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read more at: 

Thursday, January 24, 2013

16 வயது பெண்ணை முத்தக்காட்சியில் நடிக்க வைப்பதா? - மணிரத்னத்துக்கு பார்த்திபன் எதிர்ப்பு

காதல் என்ற பெயரில் 16 வயது மைனர் பெண், உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது போன்ற காட்சியில் நடிக்க வைத்திருப்பது தவறு என மணிரத்னத்துக்கு இயக்குநர் பார்த்திபன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ‘கடல்' படத்தில் இளம் புதுமுகங்கள் கவுதமும் துளசியும் உதட்டோடு உதடு பதித்து முத்தக் காட்சியில் நடிக்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் காட்சிகள் மீடியாவில் வலம் வருகின்றன. இதற்கு இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தக் காட்சி குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "உதட்டோடு உதடு முத்தக் காட்சி, இளம் வயதினரை தவறாக காட்டுவதோடு, குழந்தைகளிடத்தில் உண்டாகும் பகுத்தறிவுக்கு பொருந்தாத காதல் உணர்வை தோற்றுவித்துவிடும். உதாரணமாக, எனது ‘அழகி' படத்தில் 10 வயது குழந்தைகள் காதல் செய்தால் எப்படி இருக்கும் என்றெல்லாம் கூட காட்சி இருந்தது. குழந்தைகளை காதலர்களாக காட்டுகிற காட்சிகள் பரவாயில்லை. அவை அறியாமையுடன் கூடியவையாக இருக்கும். ஆனால் தனிப்பட்ட முறையில் குழந்தைகளை அவ்விதம் காட்டுவதை நான் எதிர்க்கிறேன்," என்றார். ஆனால் சம்பந்தப்பட்ட 16 வயது ஹீரோயின் துளசியின் அம்மா, முன்னாள் நடிகை ராதாவோ, "காட்சிக்கு தேவையென்றால் ஹீரோயின்களை இயக்குநர்கள் கதைக்கேற்ப கவர்ச்சியாக காட்டுவதில் தவறில்லை," என்று கூறியுள்ளார்.

Read more at: 

விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு 2 வாரம் தடை- 144 தடை உத்தரவு பிறப்பிப்பு - கமல் அதிர்ச்

கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்துக்கு மிகப் பெரிய சிக்கல் வந்துள்ளது. இஸ்லாமிய அமைப்புகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து விஸ்வரூபம் படத்தை 2 வாரங்களுக்கு திரையிட தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் படத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தாமல் இருப்பதற்காக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரும் பொருட் செலவில் உருவாகியுள்ள கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. சமீபத்தில் இப்படம் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்குப் போட்டுக் காட்டப்பட்டது. அதைப் பார்தத் இஸ்லாமிய அமைப்பினர் படத்தில் இஸ்லாமும், இஸ்லாமியர்களு் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக குமுறல் வெளியிட்டுள்ளனர். திருக்குரானை தீவிரவாதிகளின் கையேடு போல காட்டியுள்ளதாகவும், மதுரை, கோவை போன்ற நகரங்கள் தீவிரவாதிகளின் புகலிடம் போல காட்டப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எனவே படத்தை வெளியிட விட மாட்டோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

Read more at: 

Wednesday, January 9, 2013

இளையராஜாவை அவமதிப்பதா.. எஸ்ஜே சூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறிய பிரகாஷ்ராஜ்!

இசைஞானி இளையராஜாவை அவமதிப்பது போல காட்சிகள் இருந்ததால் இசை படத்தில் நடிக்க மறுத்து வெளியேறிவிட்டார் பிரகாஷ் ராஜ். இளையராஜாவுடன் சமீப காலமாக மிக நெருக்கமாக இருந்து வருகிறார் பிரகாஷ் ராஜ். பிரகாஷ்ராஜ் தமிழில் முதன் முறையாக இயக்கிய தோனி படத்துக்கு இளையராஜாதான் இசையமைத்தார். அதுமட்டுமல்ல, கடந்த ஆண்டு இளையராஜா சென்னையில் நடத்திய பிரமாண்ட இசை நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் இருந்தார் பிரகாஷ்ராஜ். பிரகாஷ் ராஜ் அடுத்து இயக்கும் உன் சமையலறையில் படத்துக்கும் இசைஞானிதான் இசை. இந்த நிலையில் எஸ்ஜே சூர்யா இயக்கும் இசை படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் பிரகாஷ் ராஜ். ஆனால் கதையை முழுசாகக் கேட்டபிறகு விலகிவிட்டார். காரணம் இளையராஜா - ஏ ஆர் ரஹ்மானின் இசைப் போட்டியை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியுள்ளாராம் எஸ்ஜே சூர்யா. பல காட்சிகள் இளையராஜாவை அவமதிப்பது போலிருப்பதால், இந்தப் படமே எனக்கு வேண்டாம் என்று கூறி ஒதுங்கிக் கொண்டாராம். மரியாதை தெரிந்த மனிதர்!

Read more at:

Monday, January 7, 2013

ஷங்கர் என் தம்பி, சிம்பு என் தம்பி... - பவர் ஸ்டார்

ஷங்கர் என் தம்பி, சிம்பு என் தம்பி... இப்படி இன்னும் நிறைய தம்பிகள் உருவாகி வருகின்றனர் என்றார் பவர் ஸ்டார் எனப்படும் சீனிவாசன். சந்தானம் முதன்முறையாக ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற படத்தை இயக்குனர் ராம நாராயணனுடன் இணைந்து தயாரித்து ஹீரோவாகவும் நடித்துள்ளார். அவருடன் பவர் ஸ்டார் சீனிவாசனும், புதுமுகம் சேதுவும் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று தேவி திரையரங்கில் நடைபெற்றது. சந்தானம் முதன்முறையாக ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற படத்தை இயக்குனர் ராமநாராயணனுடன் இணைந்து தயாரித்திருக்கிறார். இப்படத்தில் சந்தானத்துடன் பவர் ஸ்டார் சீனிவாசனும், புதுமுகம் சேதுவும் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று தேவி திரையரங்கில் நடைபெற்றது. இயக்குநர் ஷங்கர் நடிகர் சிம்பு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சாதாரண நிகழ்ச்சியாக ஆரம்பித்த இந்த இசை வெளியீடு, பவர் ஸ்டார் மற்றும் அவரது ரசிகர்களால் பரபரப்பாகிவிட்டது. அவர் பேரை யார் உச்சரித்தாலும் திரையரங்கில் ஒரே விசில் சத்தமும், கைதட்டலுமாக அரங்கம் அதிர்ந்தது. சீனிவாசன் (அதாங்க பவர் ஸ்டார்) பேசுகையில், அனைவருக்கும் இந்த லட்டு திகட்டாத லட்டாக இருக்கும். அந்தளவுக்கு எல்லோரும் சந்தோஷமாக நடித்திருக்கிறோம். திரையுலகில் நான் மீண்டும் முத்திரை பதிக்க வாய்ப்பளித்த அருமை தம்பி சந்தானத்துக்கு ரொம்ப நன்றி. இந்தப் படத்தில் நான்தான் நடிக்க வேண்டும் என்று தம்பி அன்புக் கட்டளையின் பேரில் நடித்திருக்கிறேன். தயாரிப்பாளர் ராமநாரயாணன் என்னை அழைத்து என்னிடம் ஒப்பந்தம் போட அவ்வளவு தயக்கம் காட்டினார். ஒரு அரைமணி பேச்சுவார்த்தைக்கு பின் நீங்கள் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னார். அதன்பிறகு என் அன்பு, ஆசை, அருமைத் தம்பி சங்கர் சாரை நான் ரொம்ப பாராட்ட வேண்டும். அவருடைய ‘ஐ' படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இது கனவா? நனவா? என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் உண்மையிலேயே நடிக்க வாய்ப்பு கொடுத்தார். ஒரு முறையாவது நான் அவருடன் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். ஆனால் என் தம்பி ஷங்கர் அவர்கள், "அண்ணே நான் உங்களுடன் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும். நான் உங்களுடைய ரசிகன்" என்று சொன்னவுடன், உண்மையிலேயே நான் பிறவிப் பலனை அடைந்துவிட்டேன். அதேபோல், இன்னொரு தம்பி சிம்பு அவர்கள் என்னுடன் இப்படத்தில் நடிக்கிறார். எனக்கு இந்த படத்தின் மூலம் நிறைய தம்பிமார்கள் கிடைத்துள்ளார்கள், என்றார். சந்தானம் தனது பேச்சில் முடிந்தவரை சீனிவாசனை வார, வழக்கம்போல அது சீனிவாசனுக்கே சாதகமாக முடிந்தது.

Read more at: 

ரஜினி வேடத்தில் தனுஷ், கமல் வேடத்தில் சிம்பு

ரஜினி, கமல் நடித்த இளமை ஊஞ்சல் ஆடுகிறது படத்தின் ரீமேக்கில் தனுஷ், சிம்பு மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்கவிருக்கிறார்களாம். ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா ஆகியோரை வைத்து ஸ்ரீதர் எடுத்த சூப்பர் ஹிட் படம் இளமை ஊஞ்சல் ஆடுகிறது. 1978ல் ரிலீஸான இந்த படம் பட்டி தொட்டி எல்லாம் கலக்கியது. இந்நிலையில் இப்படத்தை தற்போது ரீமேக் செய்யவிருக்கின்றனர். ரீமேக்கில் ரஜினி கதாபாத்திரத்தில் அவரது மருமகன் தனுஷ், கமல் வேடத்தில் சிம்பு மற்றும் ஸ்ரீபிரியா கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடிக்க உள்ளார்களாம். ஆனால் இது குறித்து நடிகர்கள் யாரும் வாய் திறக்கவில்லை. எலியும், பூனையுமாக இருந்த தனுஷும், சிம்புவும் திடீர் என்று நண்பர்களாகினர். சிம்பு தனது பிறந்தநாள் விழாவுக்கு தனுஷை அழைத்திருந்தார். இதன் மூலம் அவர்களுக்கிடையே இருந்த பகை மறைந்துவிட்டது என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரே படத்தில் நடிக்கவிருக்கின்றனர். அவர்கள் இருவரும் தற்போது பிசியாக இருப்பதால் கையில் உள்ள படங்களை முதலில் முடித்துவிட்டு இந்த படத்தில் நடிப்பார்கள் என்று தெரிகிறது.
Read more at: 

Saturday, January 5, 2013

சூப்பர் ஸ்டாருக்கு போட்டினா அது நான் தான்: 'பவர் ஸ்டார்'

சூப்பர் ஸ்டாரு்ககு போட்டினா அது இந்த பவர் ஸ்டார் தான் என்று தனக்குத் தானே பட்டம் வைத்துக் கொண்ட நடிகர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் சந்தானத்துடன் சேர்ந்து நடித்துள்ள கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். படத்தின் ட்ரெய்லரே இவ்வளவு காமெடியாக உள்ளது என்றால் படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இது தவிர பவர்ஸ்டார் ஷங்கரின் ஐ படத்தில் நடிக்கிறார். அதில் அவர் எந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சிட்டி ரோபோ கதாபாத்திரம் போன்று நடிக்கிறார். இந்நிலையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சூப்பர் ஸ்டாருக்கு போட்டினா அது பவர் ஸ்டார் தான். சந்தானம் எனது தம்பி மாதிரி. அடுத்த ஜென்மத்தில் அவர் எனக்கு தம்பியாக பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனந்த தொல்லையின் ரிலீஸை வரும் ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளேன் என்றார்.

Read more at: 

Thursday, December 27, 2012

2012ல் செஞ்சுரி அடித்து நா.முத்துக்குமார் சாதனை

பாடலாசிரியர் நா.முத்துகுமார் கடந்த ஆண்டு 103 பாடல்கள் எழுதி பாடல் உலகில் செஞ்சுரி அடித்துள்ளார். கவியரசர் கண்ணதாசன் தொடங்கி இன்றுவரை இதுவரை யாரும் செய்திராத மிகப்பெரிய சாதனை இது. இந்த ஆண்டு 34 படங்களில் 103 பாடல்களை எழுதியிருக்கிறார். இதில் ஒரு கல் ஒரு கண்ணாடி, வேட்டை, நீதானே என் பொன் வசந்தம், டோனி, பில்லா 2, தாண்டவம், விண்மீன்கள், படம் பார்த்து கதை சொல், அம்புலி ஆகிய படங்களின் முழு பாடல்களையும் நா.முவே எழுதியுள்ளார். அந்த வகையிலும் சாதனை படைத்துள்ளார். 

அவர் எழுதிய 103 பாடல்களில் 40 பாடல்கள் ஹிட்டாகி உள்ளன. குறிப்பாக நீதானே என் பொன் வசந்தம், ஒரு கல் ஒரு கண்ணாடி, வேட்டை, தாண்டவம், துப்பாக்கி, வழக்கு எண் 18/9, நண்பன் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. தற்போது 83 படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறார். அதுவும் சாதனையே.

மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் நா.முத்துகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
read more at

புதிய தலைப்பை யோசியுங்கள்- இயக்குநருக்கு விஜய் போட்ட உத்தரவு

தனது அடுத்த படத்துக்கு எந்த பழைய படத்தின் தலைப்பும் வேண்டாம். புதிய தலைப்பை யோசித்து வையுங்கள் என்று இயக்குநர் விஜய்க்கு நடிகர் விஜய் கண்டிப்பாக சொல்லிவிட்டாராம். இயக்குநர் விஜய்யும் நடிகர் விஜய்யும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. பொதுவாக விஜய் படங்கள் முதலில் தலைப்பு அறிவிக்கப்படும். அடுத்துதான் படப்பிடிப்பு ஆரம்பிக்கும். எனவே சீக்கிரமே தலைப்பை அறிவிக்கும் முயற்சியில், பல்வேறு தலைப்புகளை யோசித்து வந்தனர். முதலில் தலைவன் என்ற தலைப்பை அறிவித்தனர். ஆனால் அதை ஜெஜெ டிவி பாஸ்கரன் தன் படத்துக்கு வைத்து, துப்பாக்கியுடன் போஸெல்லாம் கொடுத்திருந்தார். இதனால் ரஜினியின் படத்தலைப்பான தங்கமகன் என்ற பெயரைச் சூட்ட முடிவு செய்தனர். ஆனால் இது அறிவிப்பாக வரும் முன்னரே ஏக எதிர்ப்பு. இந்தத் தலைப்புக்கு சொந்தக்காரரான சத்யா மூவீசும் முதலில் சம்மதித்து, பின் மறுத்துவிட்டது. ரஜினியின் வேறு படத் தலைப்புகளை வைக்கலாமா... தர்மத்தின் தலைவன் தலைப்பை எடுக்க அனுமதி கோரலாமா என்றெல்லாம் யோசித்தனராம். ஆனால், இது நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பைக் கிளப்பும் என்பதால், வேண்டாம் என விட்டுவிட்டார்களாம். 'ஆனது ஆச்சு.. ஷூட்டிங் முடியறதுக்குள்ளவாவது ஒரிஜினல் தலைப்பு சொல்லுங்க, அது போதும்' என்று கூறிவிட்டாராம் விஜய்.

Read more at:

Thursday, December 20, 2012

நித்யஸ்ரீயின் கணவர் தற்கொலை! நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி!!

 பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீ மகாதேவனின் கணவர் மகாதேவன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொ‌லை செய்து கொண்டார். கணவரின் தற்கொலை செய்தி அறிந்து நித்யஸ்ரீயும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு ‌தற்கொலைக்கு முயன்றுள்ளார். மறைந்த கர்நாடக இசை மேதை டி.கே.பட்டமாளின் பேத்தி நித்யஸ்ரீ மகாதேவன். இசை குடும்பத்தில் இருந்து வந்த இவருக்கும் இசை மீது அளவுக்கு அதிகமான மோகம். அதனாலேயே இவரும் கர்நாடக இசையை கற்று தேர்ந்து பிரபலமானார். பல்வேறு மேடைகளில் கர்நாடக இசையை பாடியுள்ளார். சினிமாவிலும் நிறைய படங்களில் பாடியிருக்கிறார். அதுமட்டுமல்லாது 100க்கும் மேற்பட்ட ஆல்பங்களையும் உருவாக்கியுள்ளார். இந்தியாவில் உள்ள முக்கிய சபாக்களிலும் பாடியுள்ளார். இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுக்க தனது இனிமையான குரலால் அனைவரையும் மயக்கியவர் நித்யஸ்ரீ மகாதேவன். இவருக்கும் மகாதேவன் என்பவருக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தனுஸ்ரீ, தேஜாஸ்ரீ என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் இன்று மதியம் 12.50 மணியளவில் நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள ஆற்றுப்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதற்கிடையே நித்யஸ்ரீயும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது நித்யஸ்ரீ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தனது கணவரை பார்க்க வேண்டும் என்று பிடிவாதமாக வீடு திரும்பி இருக்கிறார். தற்போது மகாதேவனின் உடலை கைப்பற்றி உள்ள போலீசார் சென்னை ராயப்பேட்டை மருத்துமனையில் வைத்துள்ளனர்.

குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னை காரணமாக மகாதேவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
source

இந்தியாவின் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் ரஜினி! - தெலுங்கு இணையதளம்


இந்தியாவின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்று ஆன்லைன் வாக்குப் பதிவு மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
இந்த வாக்குப் பதிவை ஒரு தெலுங்கு இணையதளம் நடத்தியுள்ளது.
இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் சூட்டப்பட்டவர் ஒரே ஒருவர்தான். அவர் ரஜினிகாந்த்!
இன்றைக்கு இந்தி, மலையாளம், கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் முன்னணி நடிகர்களை சூப்பர் ஸ்டார் என விளித்துக் கொள்கிறார்கள். கிட்டத்தட்ட இப்போது சூப்பர் ஸ்டார் என்பது சினிமாவின் உச்ச அந்தஸ்தைக் குறிக்கும் பதவி போலாகிவிட்டது.
இந்த நிலையில் இந்திய சினிமாவில் இன்று சூப்பர் ஸ்டார் யார் என்பது குறித்து ஆன்லைனில் ஒரு வாக்குப் பதிவு நடத்தப்பட்டது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் உள்ள ரஜினிகாந்த், பாலிவுட்டின் அமிதாப் பச்சன், அமீர்கான், ஷாரூக்கான், சல்மான்கான், கமல்ஹாஸன் உள்பட 9 முதல்நிலை நடிகர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.
இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 66 சதவீத வாக்குகளை பெற்று இந்தியாவின் ஒரே சூப்பர் ஸ்டார் என்று நிரூபித்துள்ளார்.
மற்ற நடிகர்கள் இவருக்கு அருகில்கூட வரமுடியவில்லை. ஷாருகான் 11 சதவீத வாக்குகளையும், கமல்ஹாசன் 9 சதவீத வாக்குகளையும், அமீர்கான் 5 சதவீத வாக்குகளையும், சல்மான்கான் 4 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர். இந்திய ரசிகர்களால் பிக் பி என்று செல்லமாக அழைக்கப்படும் அமிதாப்பச்சானுக்கு 3 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Thursday, December 6, 2012

விஜய் படத் தலைப்பு தங்கமகன்... ரஜினி ரசிகர்கள் கடுப்பு!


இயக்குநர் விஜய்யும் நடிகர் விஜய்யும் இணையும் புதிய படத்துக்கு தங்கமகன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, ரஜினி ரசிகர்களை கொதிப்புள்ளாக்கியுள்ளது.

துப்பாக்கி படத்துக்குப் பிறகு, ஏஎல் விஜய் இயக்கத்தில், அமலா பால் ஜோடியாக நடித்து வருகிறார் விஜய்.
இந்தப் படத்துக்கு ஆரம்பத்தில் வைக்கப்பட்ட தலைப்பு தலைவன். ஆனால் இந்தத் தலைப்பை சசிகலாவின் அக்காள் மகன் பாஸ்கரன் தன் படத்துக்கு வைத்துவிட்டார். இந்த தலைவன் தலைப்புக்கு முன்போ பின்போ ஏதாவது
ஒரு வார்த்தையை சேர்த்துப் பயன்படுத்திக் கொள்ள இயக்குநர் விஜய் திட்டமிட்டபோது, 'வேணாம் மச்சான் வேணாம் பெரிய இடத்துப் பொல்லாப்பு,' என விஜய் தரப்பில் பலமாக எடுத்துச் சொன்னார்களாம்.
விளைவு... தங்கமகன் என்ற தலைப்பை பிடித்துக் கொண்டார்களாம் (ஏற்கெனவே ஒரு விஜய் படத்துக்கு அழகிய தமிழ்மகன் என பெயர் வைத்திருந்தார்கள்).
இந்தத் தலைப்பு ரஜினி - பூர்ணிமா நடிப்பில், ஏ ஜெகன்னாதன் இயக்கி சத்யா மூவீஸ் தயாரித்த சூப்பர் ஹிட் படத்துடையது. விஜய் கால்ஷீட்டுக்காக நப்பாசையுடன் காத்திருக்கும் சத்யா மூவீஸும் இதற்கு அனுமதி அளித்துவிட்டதாகத் தெரிகிறது.
விஷயம் செய்தியாக வெளியில் வந்ததும், மகா கடுப்பில் இருக்கிறார்கள் ஏற்கெனவே விஜய் படங்களை செமையாக ஓட்டும் ரஜினி ரசிகர்கள்.