Showing posts with label Thagaval Kalanchiyam. Show all posts
Showing posts with label Thagaval Kalanchiyam. Show all posts

Thursday, October 17, 2013

கொடிஞ்சி இரட்டையர் கிராமம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொடிஞ்சி கிராமம் இரட்டையர்கள் கிராமம் என்றே பிரபலமாக அழைக்கப்படுகிறது.

இந்த கிராமத்தில் 2008-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் போது பல சுவாரசியமான விஷயங்கள் வெளிவந்தன. அதாவது முதலில் 100 இரட்டையர்கள் என்று கணக்கிடப்பட்டு, 200 இரட்டையர்கள் என்றாகி தற்போது 400 ஜோடி இரட்டையர்களை இந்த கிராமம் கொண்டிருக்கிறது. அதுவும் உலக அளவில் இந்தியா இரட்டையர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் இந்த கிராமம் உலகப் பிரசித்தி பெற்றுவிட்டது.


Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/strange-mysterious-places-india-000020.html

பறவைகள் தற்கொலை செய்யும் இடம்!

ஜதிங்கா எனும் கிராமம் பறவைகளின் தற்கொலை பூமியாக மாறி வருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களில் பறவைகள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்துகொள்கின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

அதாவது இந்த பருவத்தில் ஏற்படும் வானிலை மாற்றம் காரணமாக நிலத்தடி நீரில் உள்ள காந்தப் பண்புகள் மாறி அது பறவைகளின் உடலியல் இயக்கங்களை பாதித்து தற்கொலைக்கு தூண்டுகிறது என்ற ஒருசாரார் நம்புகின்றனர். அதேபோல பறவைகள் கூடு அதிவேக காற்றால் சிதறடிக்கப்பட்டு பறவைகளை ஒரு ஒளியை நோக்கி திருப்பிவிட்டு மூங்கில் கம்புகளை கொண்டு பழங்குடியின மக்கள்தான் அடித்துக்கொள்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.


Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/strange-mysterious-places-india-000020.html

Tuesday, October 16, 2012

கடலூர் மாவட்டம் ஒரு பார்வை



ஈரோடு மாவட்டம் - Erode District Map














கடலூர் மாவட்டம் [Cuddalore District], 3,564 சதுர.கி.மீ. பரவியுள்ளது. கடலூர் இம்மாவட்டத்தின் தலைமையகம் ஆகும். வடக்கில் விழுப்புரம் மாவட்டமும், கிழக்கில் வங்காள விரிகுடாவும் [Bay Of Bengal], தெற்கே நாகப்பட்டினம் மாவட்டமும், மேற்கே பெரம்பலூர் மாவட்டமும் உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் [Cuddalore District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 22,85,395 பேர் உள்ளதாகவும், இதில் 71.85% படித்தவர்களகவும் உள்ளனர் [இது மாநிலத்தின் மொத்த சராசரி காட்டிலும் குறைவு.], மாநிலத்திலே அதிக முந்திரி உற்பத்தி [52%] செய்கிற மாவட்டமாகும்.

கடலூர் மாவட்டம் [Cuddalore District], 6 தாலூக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது.  அவையாவன :
· Chidambaram - சிதம்பரம்
· Cuddalore - கடலூர்
· Kattumannarkoil - காட்டுமன்னார்கோவில்
· Panruti - பன்ரொட்டி
· Titakudi - திட்டக்குடி
· Vriddachalam - விருதாச்சலம்

கடலூர் மாவட்டத்தில் [Cuddalore District], மிகவும் புகழ் பெற்ற நெய்வேலி பழுப்பு நிறகரிச்சுறங்கம் [Neyveli Lignite Corporation - NLC] மற்றும் அன்னாமலை பல்கலைக்கழகம் உள்ளது. 4 நதிகள் உண்டு, அவையாவன :

· Kollidam - கொள்ளிடம்
· Manimuktha - மணிமுக்தா
· Ponnaiyar - போன்னி
· Vellar - வெள்ளர்

Monday, October 15, 2012

வைர கிரகம் கண்டுபிடிப்பு... இன்னுமொரு ஆகாய ஆச்சர்யம்!


 நாம் வாழும் பூமியை விட பெரிதான வைரங்கள் நிறைந்த புதிய நட்சத்திர கிரகத்தை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து கண்டுபிடித்துள்ளனர்.
நமது வான்வெளியில் ஏராளமான நட்சத்திரக் கூட்டங்கள் நிறைந்துள்ளன. ஆனால் அவை அளவில் சிறியவை. ஆனால் இப்போது நமது பூமி கிரகத்தை விட பெரிய அளவிலான வைரங்கள் நிறைந்த புதிய கிரகத்தை அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.
மற்ற நட்சத்திரங்கள் தண்ணீர், கிரானைட் கொண்ட கலவைகளாகவும், கிரானைட் கலவைகளாகவும், இரும்பு, தாதுக்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாகவும் உள்ளன. ஆனால் இப்போது கண்டறியப்பட்டுள்ள நட்சத்திரத்தில் கிராபைட் எனப்படும் கனிமத்துடன் வைரம் நிறைந்த கிரகமாக இது உள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
55 கேன்க்ரி என பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகத்தின் சுற்றளவு பூமியைவிட 2 மடங்கு பெரிதானதும் என்றும் தெரியவந்துள்ளது. அதைப் போலவே அடர்த்தியோ 8 மடங்கு அதிகமானது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பூமிக்குள் புதைந்து கிடக்கும் படிமப்பாறைகளை போல் உறுதியானதாகவும் இந்த கிரகம் இருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
பிரான்சில் உள்ள நிறுவனம் ஒன்று, இந்த கிரகத்தின் மூன்றில் ஒரு பகுதி, அதாவது, பூமியை போன்ற சுற்றளவு கொண்ட பகுதி முழுவதுமே வைரமாக இருக்கக்கூடும் என மதிப்பிட்டுள்ளது.
இந்த புதிய கண்டுபிடிப்பானது விஞ்ஞானிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒரு பார்வை


தருமபுரி மாவட்டம் [Dharmapuri District], தமிழகத்தில் 1965-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி உதயமானது, இந்த மாவட்டத்தின் தலைமையகம் தருமபுரி. இம்மாவட்டம் தமிழகத்தின் மொத்த பரப்பளவில் 3.46% அளவுள்ளது. அதவது, 4497.77 சதுர.கி.மீ. பரவியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் [Dharmapuri District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 28,56,300 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, இம்மாவட்டத்தின் வடக்கில் கிருஷ்ணகிரி மாவட்டமும், கிழக்கில் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டமும் தெற்கிள் சேலம் மாவட்டமும் மேற்கில் கர்ணடகத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டமும் உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் [Dharmapuri District], 5 தாலூக்காகளக பிரிக்கப்பட்டுளது. அவையாவன :

* Dharmapuri      - தருமபுரி
* Palacode      - பாலக்கோடு
* Pennagaram      - பென்னாகரம்
* Harur      - ஹருர்
* Pappireddipatti - பாப்பிரெட்டிபட்டி

Sunday, October 14, 2012

கரூர் மாவட்டம் ஒரு பார்வை


கரூர் மாவட்டம் [Karur District], காவிரி மற்றும் அமரவதி நதி அண்டையில் அமைந்துள்ளது. இதன் தலைமையகம் மற்றும் முக்கிய நகரம் கரூர். 2001-ஆம் ஆண்டு மக்கள் கணக்கேடுப்பின்படி [Census] 9,35,686 பேர் உள்ளதாகவும், இதில் 33.27% பேர் நகர்புறவாசிகள். இங்கு 81.74% படித்தவர்கள். இம்மாவட்டம் ஜவுளி மற்றும் பேருந்து [Bus body buildings] பாகங்கள் பூட்டுவதில் மிகவும் பெயர் பெற்ற மாவட்டமாகும்.

கரூர் மாவட்டம் [Karur District], தமிழகத்தின் மையத்தில் அமைந்துள்ளது. வடக்கில் நாமக்கல் மாவட்டமும் தெற்கில்திண்டுக்கல் மாவட்டமும் கிழக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும் மேற்கில் ஈரோடு மாவட்டமும் உள்ளது. இம்மாவட்டம் தமிழகத்தின் தலைநகர் ஆகிய சென்னையில் இருந்து 371 கி.மீ. தொலைவில் உள்ளது.
கரூர் மாவட்டத்தில் [Karur District] 5 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள், 158 கிராம ஊராட்சிகள் மற்றும் 203 வருவாய்க் கிராமங்களும் உண்டு.
கரூர் மாவட்டத்தின் [Karur District], 8 துனை வட்டங்கள் :
  • Aravakurichi - அரவக்குறிச்சி
  • K.Paramathy - கே. பரமத்தி
  • Kadavur - கடவூர்
  • Karur - கரூர்
  • Krishnarayapuram - கிருஷ்னராயபுரம்
  • Kulithalai - குளித்தலை
  • Thanthoni - தாந்தோணி
  • Thogaimalai - தோகைமலை

கரூர் மாவட்டம் [Karur District], 5 வட்டங்களாக (தாலுக்கா) பிரிக்கப்பட்டுளது. அவையாவன :

* Aravakurichi Taluk    - அரவக்குறிச்சி வட்டம்
* Kadavur Taluk         - கடவூர் வட்டம்
* Karur Taluk             - கரூர் வட்டம்
* Krishnarayapuram Taluk  - கிருஷ்னராயபுரம் வட்டம்
* Kulithalai Taluk        - குளித்தலை வட்டம்

சாலை வசதிகள்:

கரூர் வழியாக 2 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளது.
  1. தேசிய நெடுஞ்சாலை 7 [NH-7 (North South Corridor (Kashmir to Kanyakumari)) Varanasi - Kanyakumari] காஷ்மீர் - கன்னியாகுமரி & வாராணசி - கன்னியாகுமரிமற்றும்
  2. தேசிய நெடுஞ்சாலை 67 [NH-67 (Nagapattinam - Trichy - Karur - Coimbatore)] நாகப்பட்டினம் - திருச்சிராப்பள்ளி - கரூர் - கோயம்புத்தூர்

தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களான
* Erode - ஈரோடு
* Tiruppur - திருப்பூர்
* Pollachi - பொள்ளாச்சி
* Namakkal - நாமக்கல்
* Dindigul - திண்டுக்கல்
* Theni - தேனி
* Palani - பழநி
* Karaikudi - காரைக்குடி
* Kumbakonam - கும்பகோணம்
* Pondicherry etc.,.

ஆகியவற்றுடன் நேரடியாக இனைக்கப்பட்டுள்ளது.

Saturday, October 13, 2012

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரு பார்வை


கிருஷ்ணகிரி மாவட்டம் [Krishnagiri District], தமிழகத்தின் மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் தலைமையகம் கிருஷ்ணகிரி [Krishnagiri] ஆகும். இங்கு, கருப்பு நிற கிரெனைட் அதிக கிடைக்கின்றது மற்றுமல்லது, கிருஷ்னதேவராயர் அரசாட்சி புரிந்தார், அதனால் இப்பெயர் வந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு [Krishnagiri District], பண்டைய வரலற்றுச் சிறப்பு உண்டு. 2004-ஆம் ஆண்டு வரை, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தின் அங்கமாக இருந்தது. 2004-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் [Krishnagiri District], தமிழக்த்தின் 30-ஆம் மாவட்டமாக உருவக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் [Krishnagiri District], சுமார் 5143 ச.கி.மீ. பரப்பளவு கொண்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் [Krishnagiri District], கிழக்கில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டமும், மேற்கில் கர்ணடக மாநிலமும் [State of Karnataka], வடக்கில் ஆந்திர பிரதேஷ் மாநிலமும் [State of Andhra Pradesh], தெற்கெ தருமபுரி மாவட்டமும் உள்ளது. இம்மாவட்டம், கடல் மட்டத்தில் இருந்து, சுமார் 300 மீ. முதல் 1400 மீ. உயர்த்தில் உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் [Krishnagiri District] 5 தாலுக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது.

* Krishnagiri - கிருஷ்ணகிரி
* Pochampalli - பொச்சம்பள்ளி
* Uthangarai - ஊத்தாங்கரை
* Hosur - ஒசூர்
* Denkanikottai - தேன்கனிகோட்டை

அடிப்படையாக, இம்மாவட்டம் மலை மற்றும் மலைகளால் சூலப்பட்ட இடம்மாகும். சம்மான இடங்களில், தென்பெண்னாறு மூழம் நீர் பாசனம் பெருகிறது. மாவட்டத்தின் கிழக்கில் அனல் காற்று வீசும், ஆனால் மேற்கி குளிர்ந்த இதமான சூலல் நிலவும். வருடத்திற்கு சுமார் 830மி.மீ. மழை பொழிகிறது.

பருவகாலங்கள் - Seasons


மார்ச் - ஜூன் - கோடை காலம் - March to June is Summer Season
ஜூலை - நவம்பர் - மழை காலம் - July - November is the Rainy Season
டிசம்பர் - பிப்ரவரி - குளிர் காலம் - December - February is Winter Season

Wednesday, October 10, 2012

நாகப்பட்டினம் மாவட்டம் ஒரு பார்வை


நாகப்பட்டினம் மாவட்டம் [Nagapattinam District], தமிழகத்தின் கடலோர தென்மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் தலைமையகம் நாகப்பட்டினம் [Nagapattinam] ஆகும். நாகப்பட்டினம் மாவட்டம் [Nagapattinam District], இதற்கு முன் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஓர் அங்கமாக இருந்தது. 15 அக்டோபர் 1991-ஆம் ஆண்டு, தனி மாவட்டமாக உருவக்கப்பட்டது. இம்மாவட்டம், திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டத்துடன் தனது எல்லைகளை பகிர்ந்துள்ளது. 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் [Nagapattinam District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 14,88,839 பேர் உள்ளதாகவும், இதில் 22.18% பேர் நகர்புறவாசிகள். இங்கு 76.89% பேர் படித்தவர்கள், இது மாநிலத்தின் சராசரி அளவாகும்.

நாகப்பட்டினம் மாவட்டம் [Nagapattinam District] 8 தாலூக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது.

* Kilvelur - கீழ்வேலூர்
* Kutthalam - குத்தாலம்
* Mayiladuthurai - மயிலாடுதுறை
* Nagapattinam - நாகப்பட்டினம்
* Sirkazhi - சீர்காழி
* Tharangambadi - தரங்கம்பாடி
* Thirukkuvalai - திருக்குவளை
* Vedaranyam - வேதாரண்யம்

இதில், மயிலாடுதுறை [Mayiladuthurai] மற்றும் திருக்குவளை [Thirukkuvalai] தவிர, மற்ற அனைத்து 6 தாலூக்காகளும் கடலோர தாலூக்காக்களாகும். இம்மாவட்டம், வங்காளவிரிகுடாவின் [Bay of Bengal] கிழக்கு கரையை தனது எல்லையாக கொண்டுள்ளது. தரங்கம்பாடிக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையே சிறிய மாவட்டமாகிய காரைக்கால் உள்ளது, காரைக்கால் மாவட்டம், யூனியன் பிரதேசமாகிய புதுச்சேரின் [Pondicherry/Puducherry] ஆட்சிக்கு உட்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் [Nagapattinam District], மிகவும் பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா கோயில் [Velankanni Church] உள்ளது.

Thursday, October 4, 2012

பெரம்பலூர் மாவட்டம் ஒரு பார்வை


பெரம்பலூர் மாவட்டம் [Perambalur District], இந்தியாவின் தமிழக மாவட்டம் ஆகும். இதன் தலைமையகம் பெரம்பலூர். இம்மாவட்டம் சுமார் 1,752 சதுர.கி.மீ. பரவியுள்ளது. 

பெரம்பலூர் மாவட்டத்தில் [Perambalur District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 4,93,646 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்போது இங்கு 66.1% பேர் படித்தவர்கள், ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 5,64,511 பேர் உள்ளதாகவும், இதில் 2,81,436 ஆண்களும் 2,83,075 பெண்கள் உள்ளனர். இங்கு 74.7% பேர் படித்தவர்கள்,

பெரம்பலூர் மாவட்டம் [Perambalur District], 1995-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ஆம் தேதி, திருச்சிராபள்ளி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இம்மாவட்டம் வடக்கில் கடலூர் மாவட்டம் [Cuddalore District], தெற்கில் திருச்சிராபள்ளி மாவட்டம் [Tiruchirappalli District], கிழக்கில் தஞ்சாவூர் மாவட்டம் [Thanjavur District], மேற்க்கில் நாமக்கல் மாவட்டம் மற்றும் திருச்சிராபள்ளி மாவட்டத்தால் சூழப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் [Perambalur District], சாகுபடிக்கு காவிரி ஆறு மிகவும் இன்றியமையாதது ஆகும். இங்கு, முக்கிய பயிர்களான நெல், கடலை, கரும்பு, கம்பு மற்றும் முந்தரி அதிகமாக பயிர் செய்யப்படுகிறது. தற்போது, தமிழக தேவையில், 27% சோளத்தையும் 50% சின்ன வெங்காயத்தையும் பெரம்பலூர் மாவட்டம்[Perambalur District] உற்பத்தி செய்கிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் [Perambalur District], இலங்கை அகதிகள் முகாம் துறைமங்களத்தில் உள்ளது. இம்முகாமில் 70 குடும்பமும் மொத்தம் 280 பேரும் இங்கு தங்கி உள்ளனர். இம்மாவட்டத்தில், அரசு தலைமை மருத்துவமனையும் ஒன்று பெரம்பலூரிலும், தாலூக்கா மருத்துவமனைகள் வேப்பந்தட்டை ஒன்று, மற்றோன்று கிருஷ்னபுரத்திலும் உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் [Perambalur District], 3 வட்டங்களாக [தாலுக்கா] பிரிக்கப்பட்டுள்ளது.
  • Kunnam Taluk - குன்னம் வட்டம்
  • Perambalur Taluk - பெரம்பலூர் வட்டம்
  • Veppanthattai Taluk - வேப்பந்தட்டை வட்டம்

பெரம்பலூர் மாவட்டம் [Perambalur District], சிறப்பு பொருளாதார மண்டலத்தை 5000 ஏக்கர் பரப்பளவில் [சுமார் 20 சதுர.கி.மீ] உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சமாக் அனைத்து உயர் தொழில் நுட்பங்களை கொண்டுள்ளதாக அமையும். இதற்கு SREI Infrastructure Finance Ltd, தமிழ்நாடு தெழில் முன்னேறாக் கழகத்துடன் [TIDCO] இனைந்து இதை உருவாக்கவுள்ளது. இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் கடலூர், புதுச்சேரி மற்றும் சென்னை துறைமுகம், இரயில் நிலையம் மற்றும் திருச்சிராபள்ளி சர்வதேச விமான நிலையத்துடனும் இனைக்கப்படும். இப்போதெ, தேசியமையமாக்கப்பட்ட முன்னனி வங்கிகளாகிய,

* Axis Bank
* Bank of Baroda
* Canara Bank
* HDFC Bank
* ICICI Bank
* IOB [Indian Overseas Bank]
* SBI [State bank of India]
தங்களது கிளைகளை பெரம்பலூரி ஆரம்பித்துள்ளது.

Wednesday, October 3, 2012

புதுக்கோட்டை மாவட்டம் ஒரு பார்வை


புதுக்கோட்டை மாவட்டம் [Pudukkottai District], இதன் தலைமையகம் புதுகை எனப்படும் புதுக்கோட்டை. புதுக்கோட்டை மாவட்டம் [Pudukkottai District] 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ஆம் தேதி உருவானது. இம்மாவட்டம் திருச்சிராபள்ளி மாவட்டம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாலுக்காக்களை கொண்டு உருவாகி உள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் [Pudukkottai District], சுமார் 4663 சதுர.கி.மீ. பரவியுள்ளது. இம்மாவட்டத்தின் வடகிழக்கில்தஞ்சாவூர் மாவட்டமும் தென்கிழக்கில் வங்காள விரிகுடாவின் பாக்கு நீரிணையும் தென்மேற்க்கில் இராமநாதபுரம் மாவட்டம்மற்றும் சிவகங்கை மாவட்டமும் மேற்க்கிலும் வடமேற்க்கிலும் திருச்சிராபள்ளி மாவட்டமும் உள்ளது. இம்மாவட்டத்தில் சுமார் 39 கி.மீ. கரையோரப் பகுதியாகும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் [Pudukkottai District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] இம்மாவட்டத்தில் 14,59,601 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்போது இங்கு 71.1% பேர் படித்தவர்கள், ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 16,18,725 பேர் உள்ளதாகவும், இதில் 8,03,337 ஆண்களும் 8,15,388 பெண்கள் உள்ளனர். இங்கு 77.8% பேர் படித்தவர்கள். 

புதுக்கோட்டை மாவட்டம் [Pudukkottai District], 11 தாலுக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது.

* Alangudi - ஆலங்குடி
* Aranthangi - அறந்தாங்கி
* Avadaiyarkoil - ஆவுடையார்கோயில்
* Gandarvakottai - கந்தர்வகோட்டை
* Illuppur - இலுப்பூர்
* Karambakudi - கரம்பக்குடி
* Kulathur - குளத்தூர்
* Manamelkudi - மணமேல்குடி
* Ponnamaravathi - பொன்னமராவதி
* Pudukkottai - புதுக்கோட்டை
* Thirumayam - திருமயம்

புதுக்கோட்டை மாவட்டத்தின் [Pudukkottai District], முக்கிய சுற்றுள்ளத்தளங்கள்

* Avudaiyarkoil - ஆவுடையார்கோயில்
* Avur - ஆவூர்
* Chithannavasal - சித்தன்னவாசல்
* Kudumbalur - கொடும்பாளூர்
* Kudumiyanmalai - குடுமியான்மலை
* Kattubawa Pallivasal - காட்டுபாவா பள்ளிவாசல்
* Thirukokarnam - திருக்கோகர்ணம்
* Thirumayam - திருமயம்
* Viralimalai - விராலிமலை

திருநெல்வேலி மாவட்டம் ஒரு பார்வை


திருநெல்வேலி மாவட்டம் [Thirunelveli District], சுமார் 2634 சதுர.கி.மீ. பரவியுள்ளது. இதன் தலைமையகம் நெல்லை எனப்படும் திருநெல்வேலி ஆகும். இம்மாவட்டத்தின் வடக்கில்விருதுநகர் மாவட்டமும் கிழக்கில் வங்காள விரிகுடா மற்றும்தூத்துக்குடி மாவட்டமும் தெற்கில் கன்னியாகுமரி மாவட்டமும் மேற்கில் கேரள மாநிலமும் உள்ளது. இம்மாவட்டத்தில் சுமார் 35 கி.மீ. கரையோரப் பகுதியாகும். இம்மாவட்டத்தின் தனி சிறப்பு “ஐவகை நிலங்கள்” இவை அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 

* குறிஞ்சி - மலை
* முல்லை - வனம் / காடு
* மருதம் - வயல்வெளி
* நெய்தல் - கடற்கரை
* பாலை - பாலை நிலம் / பாலைவனம்

திருநெல்வேலி மாவட்டம் [Thirunelveli District], 1790-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. அது, தற்ப்போது உள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகளையும் கொண்டு அமைந்திருந்தது. அக்டோபர் 2008-இன் படி திருநெல்வேலி மாவட்டம் [Thirunelveli District], விழுப்புரம் மாவட்டத்திற்கு பிறகு தமிழகத்தின் இரண்டாவது பெரிய மாவட்டம் ஆகும்.

திருநெல்வேலி மாவட்டம் [Thirunelveli District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] இம்மாவட்டத்தில் 27,03,492 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்போது இங்கு 76.2% பேர் படித்தவர்கள், ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 30,72,880 பேர் உள்ளதாகவும், இதில் 15,18,595 ஆண்களும் 15,54,285 பெண்கள் உள்ளனர். இங்கு 82.9% பேர் படித்தவர்கள். 

திருநெல்வேலி மாவட்டம் [Thirunelveli District], 11 தாலூக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது. 

* Alangulam - ஆலங்குளம்
* Ambasamuthiram - அம்பாசமுத்திரம்
* Nanguneri - நாங்குநேரி
* Palayamkottai - பாளையங்கோட்டை
* Radhapuram - இராதாபுரம்
* Sankarankovil - சங்கரன்கோவில்
* Shenkottai - செங்கோட்டை
* Sivagiri - சிவகிரி
* Thenkasi - தென்காசி
* Thirunelveli - திருநெல்வேலி
* Veerakeralamputhur - வீரகேரளம்புதூர்

திருநெல்வேலி மாவட்டத்தின் [Thirunelveli District], முக்கிய சுற்றுள்ளத்தளங்கள்

* திருக்குறுங்குடி - Thirukurungudi
* மணிமுத்தாறு அருவி - Manimutharu Falls
* குற்றாலம் அருவி - Courtallam Falls
* பாபநாசம் அருவி - Papanasam Falls
* கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் - Koonthankulam Bird Sanctuary
* அரியகுளம் பறவைகள் சரணாலயம் - Ariyakulam Bird Sanctuary
* களக்காடு புலிகள் சரணாலயம் - Kalakad Wildlife Sanctuary
* முண்டந்துறை புலிகள் சரணாலயம் - Mundanthurai Wildlife Sanctuary
* மாஞ்சோலை - Manjolai Hill Station

Tuesday, October 2, 2012

சமாதானத்தின் தூதுவன்


இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே அகிம்சையை கற்றுக்கொடுத்த, இந்தியாவின் தேசத்தந்தை என அழைக்கபடும் காந்தியடிகளின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்று உலகுக்கு தேவைப்படுவது, காந்தியடிகள் பின்பற்றிய "அகிம்சை' தான். மகாத்மா காந்தி, 1869 அக்., 2ம் தேதி, குஜராத்தின் போர்பந்தரில் பிறந்தார். 1883ல் தனது 13 வயதில் காந்தி, கஸ்தூரிபாய் என்பவரை திருமணம் செய்தார். பள்ளிக்கல்வியை முடித்தபின், உயர்கல்விக்காக 1888ல் லண்டன் சென்றார். அங்கு பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியா திரும்பினார். சில காலம் மும்பையில் வக்கீலாக பணியாற்றினார். 

தென் ஆப்ரிக்காவில் 21 ஆண்டுகள்:

பின் 1893ல், வேலைக்காக தென்னாப்பிரிக்கா சென்றார். அப்போது அங்கு ஆங்கிலேயர்களின் நிறவெறி மற்றும் இனப்பாகுபாடு அதிகமாக இருந்தது. வெள்ளையர் அல்லாத காரணத்தால், காந்தியடிகளும் பலமுறை பாதிக்கப்பட்டார். அங்குள்ள இந்தியர்களையும், கறுப்பின மக்களையும் ஒன்றினைத்து "சத்யாகிரகம்' எனும் அறவழிப் போராட்டம் மூலம் அம்மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதன் பின், இந்தியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற ஆங்கிலேய அரசு முன்வந்தது. தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்களின் நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தியடிகள் 21 ஆண்டுகளுக்குப் பின், 1915ல் நாடு திரும்பினார். 

இந்திய சுதந்திர போராட்டம்:

இந்தியா ஆங்கியேர்களிடம் அடிமைப்பட்டு கிடந்தது. நாடு முழுவதும் ஆங்கிலேயர்களை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். இதைக்கண்ட காந்தி காங்., கட்சியில் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டார். 1920ல் காங்., கட்சியின் தலைவராகவும் இருந்தார். ரவிந்திரநாத் தாகூர், கோபாலகிருஷ்ண கோகலே, நேரு, ஜின்னா, வல்லபாய் படேல், அம்பேத்கார் உள்ளிட்ட பல தலைவர்களுடன் இணைந்து சுதந்திர போரட்டத்தை நடத்தினார். நாடு முழுவதும் பயணம் செய்து மக்களிடம் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியதில் காந்தியின் பங்கு முக்கியமானது. சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு போன்ற அறப் போராட்டங்களின் மூலம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினார். இறுதியில் 1947 ஆக., 15ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. 

இறுதி வரை போராட்டம்:

இந்தியா சுதந்திர தினத்தை கொண்டாடிய வேளையில் காந்தியோ இந்தியா - பாக்., பிரிவினையை கண்டு மனம் வருந்தினார். உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். இறுதியில் 1948 ஜன., 30ம் தேதி, காந்தியடிகள் வழிபாடு முடிந்து வெளியே வந்த போது, நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது பிறந்த தினம், உலக அகிம்சை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 

வாய்மையே வெல்லும்:

மகாத்மா காந்தி ஒன்றும் வசீகரத்தோற்றம் உடையவரில்லை, கையில் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தியதில்லை. ஆனாலும் ஆங்கிலேய அரசு அவரைக் கண்டு பயந்தது. இந்திய மக்கள் அனைவரும் அவரது கட்டளைக்கு கீழ்படிந்தனர். ஏனெனில் அவரது நேர்மை மற்றும் துணிவு. இவர் நினைத்திருந்தால் செல்வந்தராகவே வாழ்ந்திருக்கலாம். ஆனால் விவசாயிகள் அரை ஆடை அணிந்திருந்ததைப் பார்த்து, தானும் அரையாடை மனிதனாக மாறினார். இதுதான் இவரை மகாத்மாவாக மாற்றியது. "வாய்மையே வெல்லும்' என்ற வரிக்கு ஏற்ப கடைசி வரை, உண்மையாகவே வாழ்ந்தார். நாட்டு மக்களும் இதனை பின்பற்ற வேண்டும். 

திருவள்ளூர் மாவட்டம் ஒரு பார்வை


திருவள்ளூர் மாவட்டம் [Thiruvallur District], சுமார் 3,424 சதுர.கி.மீ. பரவியுள்ளது. இதன் தலைமையகம் திருவள்ளூர் ஆகும். இம்மாவட்டம் தொண்டைநாடு பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் தமிழகத்தின் வடகிழக்கு மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் வடக்கில் ஆந்த்திரா மாநிலமும் கிழக்கில் வங்காள விரிகுடாவும் தென்கிழக்கில் சென்னை மாவட்டமும்தெற்கில் காஞ்சிபுரம் மாவட்டமும் மேற்கில் வேலூர் மாவட்டமும் உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் [Thiruvallur District], 1997-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி தனி மாவட்டமாக உருவாகியது. அதற்கு முன்பாக திருவள்ளூர் மாவட்டமும் காஞ்சிபுரம் மாவட்டமும் ஒன்றினைந்த செங்கல்பட்டு மாவட்டமாக 1968-ஆம் ஆண்டு ஜூலை 6-ஆம் தேதி முதல் 1997-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி இருந்தது.

திருவள்ளூர் மாவட்டம் [Thiruvallur District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] இம்மாவட்டத்தில் 27,54,756 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்போது இங்கு 76.9% பேர் படித்தவர்கள், ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 37,25,697 பேர் உள்ளதாகவும், இதில் 18,78,559 ஆண்களும் 18,47,138 பெண்கள் உள்ளனர். இங்கு 83.8% பேர் படித்தவர்கள். இம்மாவட்டத்தில் [Thiruvallur District], 11 கலை அறிவியல் கல்லூரிகளும் 1 பல்கலை கழகமும் உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் [Thiruvallur District],  9 தாலூக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது.

* Ambathur - அம்பத்தூர்
* Gummidipoondi - கும்மிடிப்பூண்டி
* Madhavaram - மாதவரம்
* Pallipattu - பள்ளிப்பட்டு
* Ponneri - பொன்னேரி
* Poonamallee - பூந்தமல்லி
* Tiruttani - திருத்தணி
* Thiruvallur - திருவள்ளூர்
* Uthukkotai - ஊத்துக்கோட்டை
திருவள்ளூர் மாவட்டத்தின் [Thiruvallur District], முக்கிய சுற்றுள்ளத்தளங்கள்

* Ennore Port - என்னூர் துறைமுகம்
* Heavy Vehicles Factory, Avadi - கன ஊர்தி தொழிற்சாலை [ஆவடி]
* Madhavaram Milk Colony - மாதவரம் பால் பண்ணை
* Pulicat Lake Bird Sanctuary - பழவேற்காடு பறவைகள் காப்பகம்

திருவள்ளூர் மாவட்டத்தின் [Thiruvallur District], முக்கிய ஊர்கள்

* அம்பத்துர் - Ambattur
* ஆரணி - Aarani
* ஆவடி - Avadi
* உத்திரமேரூர் - Uthiramerur
* எண்ணுர் - Ennore
* சின்னமலை - Little Mount
* சைதாப்பேட்டை - Saidapet
* திருவள்ளூர் - திருவள்ளூர்
* திருவொற்றியூர் - Thiruvottiyur
* நந்தம்பாக்கம் - Nandhampakkam
* பழவேற்காடு - Palaverkadu
* பறங்கிமலை - St. Thomas Mount
* பூண்டி - Poondi
* பூவிருந்தவல்லி - Poonamallee
* போரூர் - Porur
* வில்லிவாக்கம் - Villivakkam
* வேளச்சேரி - Velachery

Sunday, September 30, 2012

திருவண்ணாமலை மாவட்டம் ஒரு பார்வை

திருவண்ணாமலை மாவட்டம் [Thiruvannamalai District], சுமார் 6191 சதுர.கி.மீ. பரவியுள்ளது. இதன் தலைமையகம் திருவண்ணாமலை ஆகும். இம்மாவட்டம் 1989-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி, அன்றய வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தின் [Thiruvannamalai District], வடக்கில் வேலூர் மாவட்டமும் [Vellore District], தெற்கில்விழுப்புரம் மாவட்டமும் [Villupuram District], கிழக்கில் காஞ்சிபுரம் மாவட்டமும் [Kanchipuram District], மேற்க்கில் தருமபுரி மாவட்டம்[Dharmapuri District] மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டமும் [Krishnagiri District] உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் [Thiruvannamalai District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] இம்மாவட்டத்தில் 21,86,125 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்போது இங்கு 67.4% பேர் படித்தவர்கள், ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 24,68,965 பேர் உள்ளதாகவும், இதில் 12,38,688 ஆண்களும் 12,30,277 பெண்கள் உள்ளனர். இங்கு 74.7% பேர் படித்தவர்கள். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் [Thiruvannamalai District], 18 அணைகள் உள்ளது, அதில் மிகவும் பிரபளமான 2

* செய்யாறு அணை - Cheyyar Dam
* சாத்தனுர் அணை - Sathanur Dam

திருவண்ணாமலை மாவட்டத்தில் [Thiruvannamalai District], 400 க்கும் மேற்பட்ட பால் உற்த்தியாளர்கள் சங்கங்கள் உள்ளது. தினமும் இம்மாவட்டம் 1,50,000 லிட்டர் பால் உற்பத்தி செய்கிறது. சென்னை மாவட்டத்தின் [Chennai District] மொத்த பால் தேவையில், இது 80 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. 

திருவண்ணாமலை மாவட்டம் [Thiruvannamalai District], 7 தாலூக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது. 

* Arani - ஆரணி
* Chengam - செங்கம்
* Cheyyar - செய்யாறு
* Polur - போளூர்
* Thandarampattu - தண்டராம்பட்டு
* Thiruvannamalai - திருவண்ணாமலை
* Vandavasi - வந்தவாசி
source

Friday, September 28, 2012

ஈரோடு மாவட்டம் ஒரு பார்வை


ஈரோடு மாவட்டம் [Erode District], தமிழகத்தின் வடமாவட்டம் ஆகும். இதன் தலைமையகம் ஈரோடு. 1996 வரை ஈரோடு மாவட்டம், பெரியார் மாவட்டம் எனப்பட்டது. அப்போது அது கோயம்பத்தூர் [Coimbatore District] மாவட்டத்தின் ஒரு அங்கமாக இருந்தது. ஈரோட்டில் தந்தை பெரியார் [E.V.Ramasamy] மற்றும் கணிதவியல் வல்லுநர் ராமாணுஜம் [Ramanujan] பிறந்த இடமாகும்.

ஈரோடு மாவட்டத்தில் [Erode District] 25,81,500 பேர் இருப்பதாக மக்கள் தொகை கணக்கு எடுப்பு 2001 தெரிவிக்கிறது. இதில் 75.51%  பேர் படித்தவர்கள். இன்னும் இந்த விகிதம் உயர்ந்து கொண்டு இருக்கிறது.
ஈரோடு [Erode District] மாவட்டத்தின் வடக்கில் கர்நாடகத்தின் சாம்ராஜ் மாவட்டம் [Chamarajanagar district], கிழக்கில் காவிரி  ஆறு. காவிரி ஆற்றின் கரை ஓரமாக இருப்பது சேலம், நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டம். திருப்பூர் மாவட்டம் தெற்கு பக்கமும், கோயம்பத்துர் மற்றும் நீலகிரி மாவட்டம் மேற்கு பக்கமும் உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் [Erode District] மூன்று பெரிய ஆறுகள் உள்ளது. காவிரி ஆற்றின் கிளை ஆறுகளகிய பவானி ஆறு, நொய்யல் ஆறு மற்றும் அமராவதி ஆறு. முக்கியமாக பாலாறு வடக்கிலும், வடமலைக்கரை ஓடை மற்றும் உப்பாறு தென்பகுதியிலும் உள்ளது. பாலாறு ஈரோடு மாவட்டத்திற்கும் கர்நாடகத்திற்கும் வடக்கில் எல்லையாக அமைந்துள்ளது. பவானிசாகர் அனை விவசாயத்திற்க்கு மிகவும் இன்றியமையாததாகும்.
ஈரோடு மாவட்டம் [Erode District] 5 தாலுக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது.

* Erode - ஈரோடு
* Gobichettipalayam - கோபிசெட்டிபாளையம்
* Bhavani - பவானி
* Perundurai - பெருந்துரை
* Sathyamangalam - சத்தியமங்கலம்

தமிழ்நாட்டில், ஈரோடு 5-வது பெரிய மாநகராட்சி ஆகும்.

ஈரோடு மாவட்டத்தில் [Erode District] 4 நகராட்சிகள் உண்டு.

* Gobichettipalayam - கோபிசெட்டிபாளையம்
* Bhavani - பவானி
* Punjai Puliampatti - புஞ்சை புளியம்பட்டி
* Sathyamangalam - சத்தியமங்கலம்