ஐ.பி.எல்., லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டெக்கான் சார்ஜர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்த்தியது. "ஆல்-ரவுண்டராக' அசத்திய பால் வல்தாட்டி(4 விக்கெட் + 75 ரன்கள்), பஞ்சாப் அணியின் வெற்றிக்கு மீண்டும் ஒரு முறை பக்கபலமாக இருந்தார்.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று
ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பஞ்சாப் கேப்டன் கில்கிறிஸ்ட் "பீல்டிங்' தேர்வு செய்தார்.இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று
டெக்கான் அணியின் துவக்க வீரான சன்னி சோகல்(7) ஏமாற்றினார். பின் கேப்டன் சங்ககரா, சிகர் தவான் இணைந்து பொறுப்பாக ஆடினர். பிரவீண் குமார், மெக்லாரன் ஓவர்களில் பவுண்டரிகளாக பறக்க விட்ட சங்ககரா, அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினார். மறுபக்கம் விக்ரம்ஜித் மாலிக் பந்தை சிக்சருக்கு அனுப்பி அசத்தினார் தவான். பியுஸ் சாவ்லா சுழலில் சங்ககரா(35) சிக்கினார்.
வல்தாட்டி அசத்தல்:
இதற்கு பின் வல்தாட்டி "வேகத்தில்' மிரட்டினார். கடந்த போட்டியில் சென்னை அணிக்கு எதிராக சதம் கடந்து அசத்திய இவர், இம்முறை பந்துவீச்சில் பட்டையை கிளப்பினார். முதலில் தவானை(45) வெளியேற்றினார். அடுத்து சிப்லியை(14) அவுட்டாக்கினார். மெக்லாரன் வீசிய 18வது ஓவரில் டுமினி(18), கோனி(0) நடையை கட்ட, ரன் வேகம் குறைந்தது.
கடைசி கட்டத்தில் டேனியல் கிறிஸ்டியன் அதிரடியாக ஆடினார். மெக்லாரன் ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். போட்டியின் 19வது ஓவரை வீசிய வல்தாட்டி மீண்டும் அசத்தினார். கிறிஸ்டியன்(30), மிஸ்ராவை(0) அடுத்தடுத்து அவுட்டாக்கினார். டெக்கான் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. ரவி தேஜா(10), ஸ்டைன்(1) அவுட்டாகாமல் இருந்தனர்.
பஞ்சாப் அணி சார்பில் வல்தாட்டி அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார்.
அதிரடி ஆட்டம்:
சவாலான இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் கில்கிறிஸ்ட், வல்தாட்டி இணைந்து அதிரடி துவக்கம் தந்தனர். ஸ்டைன் வீசிய முதல் ஓவரில் இருவரும் தலா ஒரு பவுண்டரி அடித்து, ரன் வேட்டையை துவக்கினர். கோனி வீசிய போட்டியின் 5வது ஓவரில் வல்தாட்டி 4 பவுண்டரி, ஒரு சிக்சர் சேர்த்து மொத்தம் 23 ரன்கள் அள்ளினார். மறுபக்கம் கோனி, கிறிஸ்டியன் ஓவர்களில் கில்கிறிஸ்ட் தன் பங்குக்கு சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். மிஸ்ரா பந்தை சிக்சருக்கு அனுப்பிய கில்கிறிஸ்ட் அரைசதம் எட்டினார். இதே போல டுமினி பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்த வல்தாட்டி 35 பந்துகளில் அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்த நிலையில் கில்கிறிஸ்ட்(61) அவுட்டானார்.
சுலப வெற்றி:
தொடர்ந்து வாணவேடிக்கை காட்டிய மகாராஷ்டிராவை சேர்ந்த 27 வயது வீரரான வல்தாட்டி, மிஸ்ரா ஓவரில் ஒரு இமாலய சிக்சர், பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தையும் சிக்சருக்கு தூக்க முயன்ற இவர், இஷாந்த் சர்மாவின் கலக்கல் "கேட்ச்சில்' 75 ரன்களுக்கு(8 பவுண்டரி, 5 சிக்சர்) வெளியேறினார். அடுத்து வந்த அபிஷேக் நாயர், கிறிஸ்டியன் ஓவரில் 2 பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். பஞ்சாப் அணி 17.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து, தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பெற்றது. அபிஷேக் நாயர்(13), தினேஷ் கார்த்திக்(3) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை மீண்டும் ஒரு முறை வல்தாட்டி வென்றார்.
----------
சச்சினுடன்...
ஐ.பி.எல்., தொடரில் இம்முறை அதிக ரன் எடுத்துள்ளவர்களின் பட்டியலில் முதலிடத்தை மும்பை கேப்டன் சச்சினுடன் பகிர்ந்து கொண்டார் வல்தாட்டி. இருவரும் 3 போட்டிகளில் தலா 201 ரன்கள் எடுத்துள்ளனர். இரண்டாவது இடத்தில் கோல்கட்டா அணியின் காலிஸ்(3 போட்டி, 187 ரன்கள்) உள்ளார்.
ஸ்கோர் போர்டு
டெக்கான் சார்ஜர்ஸ்
சோகல்(கே)கார்த்திக்(ப)ஹாரிஸ் 7(5)
தவான்(கே)சன்னி(ப)வல்தாட்டி 45(36)
சங்ககரா(கே)மெக்லாரன்(ப)சாவ்லா 35(28)
டுமினி(கே)சாவ்லா(ப)மெக்லாரன் 18(16)
சிப்லி(கே)மார்ஷ்(ப)வல்தாட்டி 14(12)
கிறிஸ்டியன்(ப)வல்தாட்டி 30(14)
கோனி(ப)மெக்லாரன் 0(1)
ரவி தேஜா-அவுட் இல்லை- 10(6)
மிஸ்ரா-எல்.பி.டபிள்யு.,(ப)வல்தாட்டி 0(1)
ஸ்டைன்-அவுட் இல்லை- 1(2)
உதிரிகள் 5
மொத்தம்(20 ஓவரில் 8 விக்.,) 165
விக்கெட் வீழ்ச்சி: 1-13(சோகல்), 2-88(சங்ககரா), 3-91(தவான்),4-112(சிப்லி), 5-129(டுமினி), 6-137(கோனி), 7-156(கிறிஸ்டியன்), 8-156(மிஸ்ரா).
பந்துவீச்சு: பிரவீண் 4-0-29-0, ஹாரிஸ் 4-0-31-1, மெக்லாரன் 3-0-33-2, மாலிக் 2-0-13-0, நாயர் 1-0-10-0, சாவ்லா 2-0-17-1, வல்தாட்டி 4-0-29-4.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
கில்கிறிஸ்ட்(கே)ரவி தேஜா(ப)மிஸ்ரா 61(46)
வல்தாட்டி(கே)இஷாந்த்(ப)மிஸ்ரா 75(47)
நாயர்-அவுட் இல்லை- 13(10)
கார்த்திக்-அவுட் இல்லை- 3(5)
உதிரிகள் 14
மொத்தம்(17.4 ஓவரில் 2 விக்.,) 166
விக்கெட் வீழ்ச்சி: 1-136(கில்கிறிஸ்ட்), 2-151(வல்தாட்டி).
பந்துவீச்சு: ஸ்டைன் 3-0-24-0, இஷாந்த் 4-0-23-0, கோனி 2-0-35-0, மிஸ்ரா 4-0-28-2, கிறிஸ்டியன் 2.4-0-28-0, டுமினி 2-0-21-0.
No comments:
Post a Comment