ஐ.பி.எல்., கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று சாதனை படைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நேற்று நடந்த பைனலில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முரளி விஜய், அஷ்வினின் அபார ஆட்டம் சென்னை அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல், "டுவென்டி-20' தொடர் நடந்தது. நேற்று சென்னையில் நடந்த பைனலில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை
எதிர்கொண்டது. இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. "டாஸ்' வென்ற சென்னை கேப்டன் தோனி சற்றும் தயங்காமல் "பேட்டிங்' தேர்வு செய்தார்.
"சிக்சர்' மழை:
சென்னை அணிக்கு முரளி விஜய், மைக்கேல் ஹசி இணைந்து "சூப்பர்' அடித்தளம் அமைத்தனர். பெங்களூரு பந்துவீச்சை துவம்சம் செய்த விஜய், அரவிந்த் பந்தை சிக்சருக்கு விரட்டி அதிரடியை துவக்கினார். மறுபக்கம் மிகவும் "பிசி'யாக இருந்த ஹசி, முன்னணி வீரரான ஜாகிர், முகமது பந்துகளில் தலா ஒரு சிக்சர் விளாசினார். தொடர்ந்து கெய்ல், வெட்டோரி சுழலில் விஜய் சிக்சர் அடிக்க, சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். பின் மிதுன் ஓவரில் 2 பவுண்டரி அடித்த விஜய் 29 பந்துகளில் அரைசதம் எட்டினார். தனது வாணவேடிக்கையை தொடர்ந்த இவர், அரவிந்த் வீசிய போட்டியின் 12வது ஓவரில் இரண்டு இமாலய சிக்சர்கள் அடித்தார். மறுபக்கம் வெட்டோரி பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஹசி அரைசதம் கடந்தார். முகமது வீசிய போட்டியின் 15வது ஓவரில் ஹசி, விஜய் தலா ஒரு சிக்சர் அடித்தனர். இதே ஓவரில் இன்னொரு சிக்சர் அடிக்க பார்த்த, ஹசி(63) பரிதாபமாக அவுட்டானார்.
நழுவிய சதம்:
அடுத்து வந்த கேப்டன் தோனி ரன்வேகம் குறையாமல் பார்த்துக் கொண்டார். இவர், கெய்ல் ஓவரில் இரண்டு சிக்சர்கள் அடித்தார். அரவிந்த் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தை தூக்கி அடித்த விஜய், சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இவர் 52 பந்தில் 95 ரன்கள்(4 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார். இரண்டாவது பந்தில் தோனி(22) அவுட்டானார். அடுத்த பந்தை ரெய்னா தடுத்து ஆட, அரவிந்தின் "ஹாட்ரிக்' வாய்ப்பு தகர்ந்தது. நான்காவது பந்தில் ரெய்னா சிக்சர் அடித்து அசத்தினார்.
கெய்ல் வீசிய கடைசி ஓவரில் ஆல்பி மார்கல்(2) முதலில் வெளியேறினார். அடுத்த பந்தில் ரெய்னா(8) போல்டானார். கடைசி பந்தில் பிராவோ சிக்சர் அடித்து, 200 ரன்களை கடக்க உதவினார். சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. பிராவோ(6) அவுட்டாகாமல் இருந்தார்.
அஷ்வின் ஜாலம்:
கடின இலக்கை விரட்டிய பெங்களூரு அணி, சென்னை கிங்ஸ் விரித்த "சுழல்' வலையில் அப்படியே சிக்கியது. முதல் ஓவரிலேயே அஷ்வின் பயங்கர "ஷாக்' கொடுத்தார். இவரது சுழலில் "அதிரடி' கெய்ல் "டக்' அவுட்டாக, சென்னை ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். இத்தொடர் முழுவதும் அசத்திய கெய்ல், மிக முக்கியமான பைனலில் கோட்டை விட்டதால், அரங்கில் அமர்ந்திருந்த பெங்களூரு அணியின் உரிமையாளர் மல்லையா அதிர்ச்சியில் உறைந்தார்.
சொதப்பல் ஆட்டம்:
அடுத்து வந்தவர்களும் சொதப்பலாக ஆடினர். தொடர்ந்து அகர்வாலை(10) வெளியேற்றிய அஷ்வின் இன்னொரு "அடி' கொடுத்தார். ஜகாதி சுழலில் டிவிலியர்ஸ்(18), பாமர்ஸ்பச்(2) சிக்கினர். போராடிய விராத் கோஹ்லி(35), ரெய்னா பந்தில் அவுட்டாக, பெங்களூரு கதை முடிந்தது. மீண்டும் பந்துவீச வந்த அஷ்வின், கேப்டன் வெட்டோரியை(0) வெளியேற்றினார். ஜாகிர் 21 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய சவுரப் திவாரி(42*) ஆறுதல் அளித்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 147 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
இவ்வெற்றியின் மூலம் ஐ.பி.எல்., கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வெல்லும் முதல் அணி என்ற சாதனையை சென்னை கிங்ஸ் அணி படைத்தது.
ஆட்ட நாயகன் விருதை முரளி விஜய் வென்றார்.
"ஆரஞ்ச் கேப்' கெய்ல்
நான்காவது ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணியின் கெய்ல், 608 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் முதலிடம் பெற்று, இதற்கான "ஆரஞ்ச்' தொப்பியை தட்டிச் சென்றார். இத்தொடரில் அதிக ரன்கள் எடுத்த "டாப்-10' வீரர்கள் விவரம்:
பெயர்/அணி போட்டி ரன்கள்
1. கெய்ல்(பெங்களூரு) 12 608
2. கோஹ்லி (பெங்களூரு) 16 557
3. சச்சின் (மும்பை) 16 553
4. மார்ஷ் (பஞ்சாப்) 14 504
5. ஹசி (சென்னை) 14 492
மலிங்கா அபாரம்
பவுலிங்கில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் மும்பையின் மலிங்கா (28) முதலிடத்தை பெற்று, இதற்காக "பர்பிள் கேப்' பரிசை பெற்றார். இவ்வரிசையில் "டாப்-5' வீரர்கள் விவரம்:
பெயர்/அணி போட்டி விக்.,
1. மலிங்கா (மும்பை) 16 28
2. முனாப் படேல் (மும்பை) 15 22
3. அரவிந்த் (பெங்களூரு) 13 21
4. அஷ்வின் (சென்னை) 16 20
5. அமித் மிஸ்ரா (டெக்கான்) 14 19
இதுவரை சாம்பியன்கள்
ஆண்டு சாம்பியன் எதிரணி
1. 2008 ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ்
2. 2009 டெக்கான் சார்ஜர்ஸ் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
3. 2010 சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ்
4. 2011 சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
சாதனை ஜோடி
ஐ.பி.எல்., வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் (159) சேர்த்த ஜோடி என்ற பெருமையை, சென்னை அணியின் முரளி விஜய், மைக் ஹசி பெற்றது. இதற்கு முன் கில்கிறிஸ்ட்-லட்சுமண் இணைந்து, மும்பை அணிக்கு எதிராக 155 ரன்கள் (2008) எடுத்து இருந்தனர்.
விஜய்க்கு சூப்பர் "விசில்' அடிங்க...
சென்னை அணியின் சாம்பியன் கனவுக்கு தமிழக வீரர்களான முரளி விஜய், அஷ்வின் கைகொடுத்தனர். பேட்டிங்கில் அசத்திய முரளி விஜய் 95 ரன்கள் விளாசினார். இவர், ஐ.பி.எல்., தொடரின் பைனலில் அதிக சிக்சர் (6) அடித்தவர் என்ற சாதனை படைத்தார். முன்னதாக 2008 பைனலில், ராஜஸ்தானின் யூசுப் பதான் (எதிரணி-சென்னை), 4 சிக்சர் அடித்திருந்தார்.
இதே போல சுழலில் அசத்திய அஷ்வின் 3 விக்கெட் வீழ்த்தி, அணிக்கு விரைவான வெற்றியை தேடி தந்தார். பெங்களூரு அணி, அன்னிய வீரரான கெய்லை நம்பி ஏமாந்தது. ஆனால், சென்னை அணி மண்ணின் மைந்தர்களை நம்பி சந்தித்தது.
தோனியின் சாதனை பயணம்
தோனியின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. இவரது தலைமையில், இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்ற முக்கிய சாம்பியன் பட்டங்கள்...
ஆண்டு/மாதம் வென்ற கோப்பை
1. 2007/ஆகஸ்ட் "டுவென்டி-20' உலக கோப்பை
2. 2010/ஏப்ரல் ஐ.பி.எல்., "டுவென்டி-20' கோப்பை
3. 2010/செப்டம்பர் ஐ.பி.எல்., சாம்பியன்ஸ் லீக் கோப்பை
4. 2011/ஏப்ரல் உலக கோப்பை (50 ஓவர்)
5. 2011/மே ஐ.பி.எல்., "டுவென்டி-20'
ஸ்கோர்போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஹசி(கே)மிதுன்(ப)முகமது 63(45)
விஜய்(கே)வெட்டோரி(ப)அரவிந்த் 95(52)
தோனி(கே)கோஹ்லி(ப)அரவிந்த் 22(13)
ரெய்னா(ப)கெய்ல் 8(5)
மார்கல்(கே)கோஹ்லி(ப)கெய்ல் 2(4)
பத்ரிநாத்-அவுட் இல்லை- 0(0)
பிராவோ-அவுட் இல்லை- 6(1)
உதிரிகள் 9
மொத்தம் (20 ஓவரில், 5 விக்.,) 205
விக்கெட் வீழ்ச்சி: 1-159(மைக் ஹசி), 2-188(முரளி விஜய்), 3-188(தோனி), 4-199(மார்கல்), 5-199(ரெய்னா).
பந்து வீச்சு: ஜாகிர் கான் 4-0-30-0, அரவிந்த் 3-0-39-2, கெய்ல் 4-0-34-2, சையது முகமது 3-0-39-1, வெட்டோரி 4-0-34-0, அபிமன்யு மிதுன் 2-0-22-0.
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
அகர்வால்(ப)அஷ்வின் 10(5)
கெய்ல்(கே)தோனி(ப)அஷ்வின் 0(3)
கோஹ்லி-எல்.பி.டபிள்யு(ப)ரெய்னா 35(32)
டிவிலியர்ஸ்-எல்.பி.டபிள்யு(ப)ஜகாதி 18(12)
பாமர்ஸ்பச்(கே)+(ப)ஜகாதி 2(3)
திவாரி-அவுட் இல்லை- 42(34)
வெட்டோரி(கே)+(ப)அஷ்வின் 0(1)
மிதுன்(கே)போலிஞ்சர்(ப)பிராவோ 11(8)
ஜாகிர்(கே)ஹசி(ப)போலிஞ்சர் 21(21)
சையது-அவுட் இல்லை- 2(2)
உதிரிகள் 6
மொத்தம் (20 ஓவரில், 8 விக்.,) 147
விக்கெட் வீழ்ச்சி: 1-1(கிறிஸ் கெய்ல்), 2-16(அகர்வால்), 3-48(டிவிலியர்ஸ்), 4-62(பாமர்ஸ்பச்), 5-69(விராத் கோஹ்லி), 6-70(வெட்டோரி), 7-92(அபிமன்யு மிதுன்), 8-130(ஜாகிர் கான்).
பந்து வீச்சு: அஷ்வின் 4-0-16-3, மார்கல் 3-0-24-0, போலிஞ்சர் 3-0-28-1, ஜகாதி 4-0-21-2, ரெய்னா 4-0-39-1, பிராவோ 2-0-15-1.

No comments:
Post a Comment