""மதுரை மேயர், தி.மு.க., கவுன்சிலர்கள் அழகிரியின் "கொலு பொம்மைகள்'. இவர்களால் மக்களுக்கு எவ்வித பயனும் ஏற்படவில்லை,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா கூறினார்.மதுரை மேயருக்கு போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் கவியரசுவை ஆதரித்து ஜீவாநகரில் பிரேமலதா பேசியதாவது:மதுரையில் தி.மு.க.,வை சேர்ந்த மேயர், கவுன்சிலர்கள் 15 ஆண்டுகள்
இருந்துள்ளனர். இவர்களால் மக்கள் எவ்வித முன்னேற்றமும் அடையவில்லை.அழகிரியை நினைத்தால் நவராத்தி விழா தான் ஞாபகத்துக்கு வருகிறது. மேயர், தி.மு.க., கவுன்சிலர்கள் அழகிரியின் "கொலு பொம்மைகள்'. நான் தேர்தலுக்காக ஓட்டு கேட்டு வந்தேன் என நினைக்க வேண்டாம். நான், மதுரையின் மருமகள். உங்கள் வீட்டுப்பிள்ளையாக வந்துள்ளேன்.தி.மு.க.,வை ஒழிக்க வேண்டும் என்பதற்காக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் விஜயகாந்த் கூட்டணி வைத்தார். அழையா விருந்தாளியாக செல்ல விரும்பாததால் அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து இப்போது வெளியேறினார். விவேகானந்தர் 100 இளைஞர்களை கேட்டார். கிடைக்கவில்லை. விஜயகாந்த் பின்னால் இன்று பல கோடி இளைஞர்கள் உள்ளனர். அந்த தைரியத்தில் தனி ஆளாக இருந்து வெற்றிகளை குவித்து வருகிறார் என்றார்.thanks dinamalar
No comments:
Post a Comment