Monday, October 3, 2011

நிறைய பேரு என்னை காதலிச்சாங்க...

ஹைதராபாத் பக்கத்துல உள்ள நெல்லூர்தான் சொந்த ஊர். ஆனா, நான் பொறந்து வளர்ந்தது எல்லாமே ஹைதராபாத்துல
தான். அடிக்கடி நெல்லூருக்கு பாட்டி வீட்டுக்குப்போவேன். எங்க குடும்பத்துலேயே நான்தான் அழகு. அதனால எல்லாருக்கும் நான் செல்லப் பிள்ளை. நான் பண்ற சேட்டையெல்லாம்

தாங்கிக்குவாங்க. ஒண்ணாங்கிளாஸ்லேருந்து அஞ்சாங் கிளாஸ் வரைக்கும் நெல்லூர்ல படிச்சேன். 
அப்புறம் ஹைதராபாத்தோட அவுட்டோரான கிருஷ்ணாபுரத்துல உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயால படிச்சேன். இது சென்ட்ரல் கவர்மெண்ட் ஸ்கூல். இதுல சேரணும்னா மெடிக்கல் காலேஜ்ல சேர்ற மாதிரி நிறைய எண்ட்ரன்ஸ் எக்ஸாம் வச்சுதான் சேர்ப்பாங்க. நடுகாட்டுல இருக்குற கோட்டை மாதிரி இந்தப் பள்ளிக்கூடம் இருக்கும். உள்ளேயே ஹாஸ்டலும் இருந்திச்சு. வாரத்துக்கு ஒருநாள்தான் பெத்தவங்ககூட பிள்ளைய பார்க்க முடியும். அம்புட்டு கண்டிப்பு. வெளியில என்ன நடக்குன்னே தெரியாது. படிப்பு, சாப்பாடு, விளையாட்டு, தூக்கம்... இதுதவிர அங்கு வேற எதுவும் கிடையாது. 
6ம் வகுப்புலேருந்தே நான்தான் டிஸ்ட்ரிக் பர்ஸ்ட். அதனால அங்க இருந்த டீச்சர்ஸ் அம்புட்டு பேருக்கும் நான் செல்லப் பிள்ளை. வாரத்துக்கு ஒரு டீச்சர் என்னை அவுங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயி அவுங்க புள்ள மாதிரி கவனிச்சுக்குவாங்க. எனக்கு ஸ்ரீலதா, பிந்துன்னு ரெண்டு திக் ஃபிரண்ட் இருந்தாங்க. எங்க மூணு 
பேரையும் சேர்த்து ‘த்ரீ ரோஸஸ்’னு எல்லோரும் செல்லமா கூப்பிடுவாங்க. என்னோட துணிகளை நான்தான் துவைச்சுக்கணும், என்னோட தேவைகளை நான்தான் கவனிச்சிக்கணும். சொந்த கால்ல நிக்ற தைரியத்தை கொடுத்தது இந்த ஸ்கூல்தான்.
படிப்பு தவிர ஸ்போர்ட்சுல நல்ல இன்ட்ரஸ்ட் இருந்திச்சு. கோகோ, கபடி, அதலட்ஸ் எல்லாத்துலேயும் இருந்தேன். ஆனாலும் நான் ஜெயிக்கறது ஹை ஜம்ப்லதான். அப்புறம் அதை மட்டும் எடுத்துக்கிட்டு பண்ணினேன். நேஷனல் வரைக்கும் போயி வெள்ளி கோப்பையை கொண்டு வந்தேன். டெல்லிக்கு விளையாடப் போறப்போ எங்கம்மா ரொம்ப பயந்தாங்க. ‘கீழ விழுந்து கால் முறிஞ்சுட்டா என் பொண்ணை யார் கட்டிக்குவா’னு ஸ்கூல்ல வந்து கேட்டாங்க. ‘உங்க மகள் மூலமா எங்களுக்கு ஒரு கப் வரப்போவுது. அதை நாங்க மிஸ் பண்ண முடியாது. அவளுக்கு எது நடந்தாலும் நாங்க பொறுப்புன்னு எழுதி வேணாலும் தர்றோம்’னு ஸ்கூல்ல சொன்னாங்க. அதுபோலவே வெள்ளி கப்போட 
ஸ்கூலுக்கு திரும்பினேன். மறுநாள் ப்ரேயர்ல எல்லா டீச்சர்சும் என்னை பாராட்டி பேசினதையும். எல்லா ஸ்டூடண்ட்சும் எழுந்து நின்னு கை தட்டினதையும் இன்னிக்கும் மறக்க முடியல. 
பிளஸ் 1, பிளஸ் 2 செயின்ட் தாமஸ் ஸ்கூல்ல படிச்சேன். விளையாட்டை தூக்கி மூட்டை கட்டி வச்சிட்டு சீரியசா படிக்க ஆரம்பிச்சேன். எப்ப பார்த்தாலும் 
புத்தகமும் கையுமா அலைஞ்சேன். ஸ்கூல் ஃபங்ஷனுக்கு வந்த தெலுங்கு டைரக்டர் என்னை பார்த்ததும், அப்புறம் நான் நடிக்கப் போனதும் தனி கதை. லீவுல நடிச்சிக்கிட்டே படிச்சேன். அப்புறம் கொட்டி உமன் காலேஜ்ல டிகிரி முடிச்சேன். அதுக்கப்புறம் ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சிருந்தேன். 
நான் சீரியசா படிச்சிக்கிட்டிருந்தாலும் எப்பவும் என்னை யாராவது ஒருத்தர் லவ் பண்ணிக்கிட்டே இருந்தாங்க. லவ்வை ஃப்ரப்போஸ் பண்ணுவாங்க. நான் கத்துற கத்துல இந்தப் பொண்ணு வேலைக்கு ஆவாதுன்னு ஒதுங்கி போயிடுவாங்க. ஒரு லவ்வர்ஸ் டே அன்னிக்கு காலேஜ்லேருந்து வீட்டுக்கு போயிட்டிருந்தப்போ ஒருத்தன் வழி மறிச்சு ‘ஐ லவ் யூ’ சொன்னான். ‘அதுக்கென்ன’னு திருப்பிக் கேட்டேன். ஒரு ரோஜாப் பூவை கொடுத்துட்டு ‘நீங்களும் என்னை லவ் பண்ணணும்’னு சொன்னான். ‘அது முடியாது’னு மறுத்துட்டேன். உடனே என் கைய புடிச்சுக்கிட்டு கெஞ்ச ஆரம்பிச்சிட்டான். நான் வழக்கம்போல கத்த ஆரம்பிச்சேன். கூட்டம் கூடிடுச்சு. ஓடிவந்தவங்க அவனுக்கு தர்ம அடி கொடுத்தாங்க. கடைசில நான்தான் அவனை காப்பாத்தி அனுப்பி வச்சேன். அதுக்கு பிறகு நான் இருக்குற திசை பக்கமே அவன் வரலை.
இப்படித்தான் செயின் ஜான்ல போஸ்ட் கிராஜுவேட் பண்ணும்போது ஒருத்தன் லவ் ஃப்ரபோஸ் பண்ணினான். நாம கத்தினா இவனும் அடிவாங்குவான்னு பேசாம வீட்டுக்கு போயிட்டேன். அண்ணன்கிட்ட விஷயத்தை சொன்னேன். அவன் நேரா அந்த பையன் படிக்குற காலேஜ் போயி பிரின்சிபல்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணிட்டான். பிரின்சிபல் அவனை கூப்பிட்டு செமத்தியா சாத்தியிருக்கார். அண்ணன் வந்து எங்கிட்ட சொன்னப்போ நான் அவன்கிட்ட கோவிச்சுக்கிட்டேன். ‘அவனை யாரும் அடிக்கக் கூடாதுன்னுதான் உங்கிட்ட சொன்னேன். நீயும் அடிவாங்கி கொடுத்திருக்கியே’னு சொன்னேன். அப்புறம் ஒரு நாள் அவனை சந்திச்சு சாரி கேட்டேன். ‘எனக்கு சினிமால நிறைய சாதிக்கணும். அதனால காதல் கல்யாணத்துல இன்ட்ரஸ்ட் இல்ல’னு சொன்னேன். அவனும் சரின்னு ஒதுங்கிட்டான். 
நடிக்க வர்றதுக்கு முன்னாடி ஆண்கள்கிட்ட பேசுறதே பாவம்னுதான் நினைச்சிட்டிருந்தேன். அப்படித்தான் வளர்க்கப்பட்டேன். அப்புறம் சினிமாவுக்கு வந்த 
பிறகுதான் எல்லாமே புரிய ஆரம்பிச்சுது. என்னை காதலிச்சவங்களையும், அடிவாங்கினவங்களையும் நினைச்சு வருத்தப்பட்டேன். ஒரு வேளை நல்ல காதலையும் மிஸ் பண்ணியிருப்போமோனு தோணும். வாழ்க்கை நாம விரும்பறபடி அமையறதில்ல. அமையற வாழ்க்கையை விரும்ப ஆரம்பிக்கிறோம். ஆடிட்டராகணும்னு நினைச்சேன். சம்பந்தமே இல்லாம நடிகையாயிட்டேன். ஆண்களோடு பேசுவதே பாவம்னு நினைச்சேன். ஆண்களை கட்டிப்பிடிச்சு நடிக்கறேன். 
நிறைய காதலை மிஸ் பண்ணினேன், ஆனா, சிவபாலாஜிங்ற நல்ல காதலனை கடைசில கண்டுபிடிச்சேன். அவரே கணவராகவும் ஆனார். வாழ்க்கை ரொம்ப வேடிக்கையா இருக்குல்ல...thanks dinakaran

No comments:

Post a Comment