Monday, July 30, 2012

மொபைல் வழி பணபரிவர்த்தனை சேவை: தபால் துறையின் புதிய திட்டம்!


மொபைல் மூலமாக பணபரிவர்த்தனைகளை செய்யும் புதிய வசதியினை நமது இந்திய தபால் துறை அறிமுகம் செய்ய இருக்கிறது.
சிறப்பாக செயலாற்றி கொண்டு வரும் இந்திய தபால் துறை மொபைல் போன் மூலமாக பணபரிவர்த்தனைகளை (மணி ஆர்டர்) செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தினை கூடிய விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக இந்திய தபால் துறையின் உயர் அதிகாரி சோபா கோஷி கூறியுள்ளார்.
இந்த மொபைல் வழி பணபரிவர்த்தனை வசதியை, பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகம் செய்ய உள்ளது இந்திய தபால் துறை.
இதனால் தபால் அலுவலகங்களில், பணபரிவர்த்தனைகள் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த வசதியினை
கேரளா, பீஹார், புது டில்லி, பஞ்சாப் போன்ற இடங்களில் முதலில் அறிமுகம் செய்ய இருக்கிறது தபால் துறை.
கேரளாவில் இடுக்கி, அலுவா, பத்தனம்திட்டா ஆகிய பகுதிகளில் உள்ளிட்ட மொத்தம் 30 அலுவலகங்களில் இந்த மொபைல் பணபரிவர்த்தனை திட்டம் அறிமுகமாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால் மொபைலில் பணபரிவர்த்தனை செய்யும் விளக்கம் ஏதும் இன்னும் சரிவர வெளியாகவில்லை. இந்த வசதியில் ரூ. 5,000 வரை மொபைல் மூலமாகவே பணபரிவர்த்தனை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டும் அல்லாது இன்னும் ஒரு சந்தோஷமான தகவலும் வெளியாகி உள்ளது. நமது நாட்டில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட உள்ளது. இப்போதே நிறைய தபால் அலுவலகங்கள் கணினி மயமாக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் இந்த வசதி இன்னும் மேம்படுத்தப்பட உள்ளது.
நமது நாட்டில் ரேஷன் கடைக்கு அடுத்தபடியாக கூட்டம் அதிகமாக இருக்கும் இடம் என்று தபால் துறை அலுவலகங்களை கருதலாம். ஆனால் இது போன்று தபால் அலுவலகங்கள் கணினி மயமாக்கப்பட்டால் நிச்சயம் அது எல்லோரது நேரத்தினையும் நிச்சயம் மிச்சயப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.(thanks thatstamil.com)

1 comment:

  1. சிறப்பான தகவலுக்கு நன்றி நண்பரே !

    பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

    ReplyDelete