Thursday, September 6, 2012

வேலூர் மாவட்டம் ஒரு பார்வை


வேலூர் மாவட்டம் [Vellore District],  சுமார் 5920.18 சதுர.கி.மீ. பரவியுள்ளது. இதன் தலைமையகம் வேலூர் ஆகும். இம்மாவட்டத்தின் வடகிழக்கில் திருவள்ளூர் மாவட்டமும்[Thiruvallur District] தென்கிழக்கில் காஞ்சிபுரம் மாவட்டமும்[Kanchipuram District] தெற்கில் திருவண்ணாமலை மாவட்டமும்[Thiruvannamalai District] தென்மேற்கில் கிருஷ்ணகிரி மாவட்டமும்[Krishnagiri District] வடக்கு மற்றும் வடமேற்கிலும் ஆந்திரப் பிரதேஷ் மாநிலத்தின் சித்தூர் மாவட்டமும் உள்ளது.

வேலூர் மாவட்டம் [Vellore District],  2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census], இம்மாவட்டத்தில் 34,77,317 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்போது இங்கு 72.4% பேர் படித்தவர்கள், ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 39,28,106 பேர் உள்ளதாகவும், இதில் 19,59,676 ஆண்களும் 19,68,430 பெண்கள் உள்ளனர். இங்கு 79.6% பேர் படித்தவர்கள். 

வேலூர் மாவட்டம் [Vellore District],  9 வட்டங்களாக (தாலுக்கா) பிரிக்கப்பட்டுள்ளது.

* Ambur Taluk - ஆம்பூர் வட்டம்
* Arakkonam Taluk - அரக்கோணம் வட்டம்
* Arcot Taluk - ஆற்காடு வட்டம்
* Gudiyattam Taluk - குடியாத்தம் வட்டம்
* Katpadi Taluk - காட்பாடி வட்டம்
* Tirupattur Taluk - திருப்பத்தூர் வட்டம்
* Vaniyambadi Taluk - வாணியம்பாடி வட்டம்
* Vellore Taluk - வேலூர் வட்டம்
* Walajapet Taluk - வாலாஜாபேட்டை வட்டம்

வேலூர் மாவட்டத்தின் [Vellore District],  முக்கிய சுற்றுலாத்தலங்கள்

* அமிர்திகாடு - Amirthi Forest
* ஏலகிரிமலை - Elagiri/Yelagiri Hills
* காவலூர் தொலைநோக்கி மையம் - Kavalur Observatory
* முத்துமண்டபம் - Muthumandapam
* வேலூர் கோட்டை - Vellore Fort
* ஜவ்வாது மலை - Javadhu Malai
வேலூர் மாவட்டத்தின் [Vellore District], முக்கிய ஆறுகள்
  • Agaram Aru River - அகரம் ஆறு
  • Goddar River -  கொடாறு
  • Kallar River -  கல்லாறு
  • Koundinya Nathi - கௌண்டின்ய நதி
  • Malattar River - மலட்டாறு
  • Naga Nathi River - நாகா நதி
  • Palar River - பாலாறு
  • Pambar River -  பம்பர் ஆறு
  • Ponnaiyar River -  தென்பெண்ணை ஆறு

1 comment:

  1. வேலூர் மாவட்டத்தின் தகவல்களுக்கு நன்றி...

    ReplyDelete