"களவாணி, வாகை சூடவா ஆகிய படங்களை இயக்கிய சற்குணம், அடுத்து தனுஷை வைத்து, "சொட்ட வாளக்குட்டி என்ற படத்தை இயக்குகிறார். காதல் கலந்த, முழுநீள "காமெடி கதையில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு, நவம்பரில் துவங்குகிறது. இப்படத்துக்காக, சில மாதங்களாக நாயகி தேர்வு நடத்தி வரும் சற்குணத்திடம், "எந்த நடிகையை முடிவு செய்துள்ளீர்கள் எனக் கேட்டபோது, "இந்த கதைக்கு, தனுசுடன் ஹன்சிகா நடித்தால், நல்ல ஜோடிப் பொருத்தமாக இருக்கும் என்பதால், அவரிடம் பேசி வருகிறேன். ஆனால், ஹன்சிகா இன்னும் தன் முடிவை சொல்லவில்லை. ஒரு வாரம் அவகாசம் கேட்டிருக்கிறார். அதன்பின் தான், அவர் நடிப்பாரா, இல்லையா என்பது தெரியும் என்கிறார்.
source
source

No comments:
Post a Comment