Monday, September 24, 2012

நீலகிரி மாவட்டம் ஒரு பார்வை


நீலகிரி மாவட்டத்தின் [Nilgiris District], பெரும் பகுதி மலைகலே. இதன் தலைமையகம் உதகமண்டலம். பிரபலமாக ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. இதன் தொடர் மலைகள் தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடக எல்லைகளாக பரவி உள்ளது. நீலகிரி என்னும் மலை, மேற்குத் தொடர்ச்சி மலையின் தொடர் ஆகும். இம்மலைத்தொடர்களின் உச்சம் தொட்டபெட்டா, இது சுமார் 2,623 மீ. உயரம் ஆகும். 

நீலகிரி மாவட்டம் [Nilgiris District], 2,452  சதுர.கி.மீ. பரவியுள்ளது. இம்மாவட்டம், மலைப்பாங்கான இடம் மட்டுமல்லாது, இது சுமார் கடல் மட்டத்தில் இருந்து 2000 முதல் 2600 மீ. உயரத்தில் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் தனது வடக்கு எல்லையை கர்நாடக மாநிலத்தின் மைசூரையும் கேரள மாநிலத்தின் வயநாடு [Wayanad District] மாவட்டத்துடனும், மேற்க்கில் கேரள மாநிலத்தின் மலப்புரம் [Malappuram District] மற்றும் பாலக்காடு [Palakkad District] மாவட்டத்துடனும், தெற்கில் தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்துடனும் [Coimbatore District], கிழக்கில் தமிழகத்தின் ஈரோடு மாவட்டமும் [Erode District] கர்நாடகத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டமும் உள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் [Nilgiris District], முக்கிய நகரங்கள் கோத்தகிரி, குன்னூர், கூடலூர் மற்றும் அரவங்காடு ஆகும். குன்னூரின் மிகவும் பிரபளமான “Lamb's Rock” மற்றும் சிம்ஸ் பூங்கா [Sims park] உள்ளது. சிம்ஸ் பூங்காவில் [Sims park] வருடம் தோறும் கோடை காலத்தில் [மே மாதம் கடைசி வாரம்] பழக்கண்காட்சி மற்றும் பூக்கண்காட்சி நடைபெறும். இந்தப் பூங்கா கோத்தகிரி செல்லும் பாதையில் அமைந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் [Nilgiris District], 6 தாலுக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது.

* Coonoor - குன்னூர்
* Gudalur - கூடலூர்
* Kotagiri - கோத்தகிரி
* Kundah - குந்தா
* Pandalur - பந்தலூர்
* Udhagamandalam - உதகமண்டலம்

நீலகிரி மாவட்டத்தில் [Nilgiris District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 7,62,141 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 7,35,071 பேர் உள்ளதாகவும், இதில் 3,60,170 ஆண்களும் 3,74,901 பெண்கள் உள்ளனர். இங்கு 80.01% பேர் படித்தவர்கள், 

நீலகிரி மாவட்டத்தில் [Nilgiris District], செழித்து வளருக்கூடியவைகள், உருலைக்கிளங்கு, முட்டைகேஸ், கேரட், டீ மற்றும் காப்பி செடிகள் மற்றும் சில வகை பழங்கள் ஆகும்.  குறிப்பாக பந்தலூர் தாலுக்காவில் நெல் மற்றும் இஞ்சி அதிகமாக விளைகின்றது. இம்மாவட்டத்தில் கப்பல் துறைமுகமோ [Harbour], விமான நிலையமோ [Airport] கிடையாது. இம்மாவட்டத்தில், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையும் ஒன்றும், தாலுக்கா மருத்துவமனைகள் ஐந்தும் உள்ளது.

1 comment:

  1. மிக்க நன்றி... அடிக்கிற வெயிலுக்கு உதகமண்டலம் செல்ல வேண்டும்...

    ReplyDelete