Tuesday, September 4, 2012

தஞ்சாவூர் மாவட்டம் ஒரு பார்வை

தஞ்சாவூர் மாவட்டம் [Thanjavur District], மத்திய தமிழகத்தில் உள்ளது. இது சோழநாடு ஆகும். இதன் தலைமையகம் தஞ்சை எனப்படும் தஞ்சாவூர். 

தஞ்சாவூர் மாவட்டத்தில் [Thanjavur District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] இம்மாவட்டத்தில் 22,16,138 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்போது இங்கு 75.5% பேர் படித்தவர்கள், ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 24,02,781 பேர் உள்ளதாகவும், இதில் 11,83,112 ஆண்களும் 12,19,669 பெண்கள் உள்ளனர். இங்கு 82.7% பேர் படித்தவர்கள். 

தஞ்சாவூர் மாவட்டம் [Thanjavur District], சுமார் 3396.57 சதுர.கி.மீ. பரவியுள்ளது. இம்மாவட்டத்தின் வடகிழக்கில் நாகப்பட்டினம் மாவட்டமும் கிழக்கில் திருவாரூர் மாவட்டமும் தெற்கில் வங்காள விரிகுடாவின் பாக்கு நீரிணையும் மேற்க்கில்புதுக்கோட்டை மாவட்டமும் வடக்கில் திருச்சிராபள்ளி மாவட்டத்தின் கெல்லிடம் ஆறும் பெரம்பலூர் மாவட்டமும் உள்ளது. இம்மாவட்டத்தில் சுமார் 45 கி.மீ. கரையோரப் பகுதியாகும்.

தஞ்சாவூர் மாவட்டம் [Thanjavur District], காவிரி ஆற்றின் கறையில் அமைந்துள்ளது மட்டுமல்லாமல் தமிழகத்தில் வளம்மிகுந்த மாவட்டமாகவும் திகழ்கின்றது. ”சோழ நாடு சோறுடைத்து” என்று பாடிய ஒளவையாரின் வாக்குப்படி, இம்மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்குகின்றது. இம்மாவட்டத்தில் நெல் மட்டுமள்ளது, கருப்பு மற்றும் தென்னையும் அதிகம் சாகுபடி செய்கின்றனர். தமிழகதில் அதிகம் தேங்காய் [தென்னை] உர்ப்பத்தி செய்வது இந்த தஞ்சாவூர் மாவட்டம் [Thanjavur District] ஆகும்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் [Thanjavur District], முக்கிய ஆறுகள்

* அரசலாறு
* காவிரி
* கொள்ளிடம்
* பாம்பாறு

தஞ்சாவூர் மாவட்டத்தில் [Thanjavur District], 25 கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் ஒரு பல்கலைகழகமும் உள்ளது. இம்மாவட்டத்தில் தஞ்சாவூர் விமானநிலையம் ஒன்று உள்ளது. இருபது இரயில் நிலையங்களும் உள்ளது, ஆனால் கப்பல் துறைமுகம் இங்கு இல்லை.

தஞ்சாவூர் மாவட்டம் [Thanjavur District], 8 தாலுக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது.

* Kumbakonam - கும்பகோணம்
* Orathanadu - ஒரத்தநாடு
* Papanasam - பாபநாசம்
* Pattukkottai - பட்டுக்கோட்டை
* Peravurani - பேராவூரணி
* Thanjavur - தஞ்சாவூர்
* Thiruvaiyaru - திருவையாறு
* Thiruvidaimarudur - திருவிடைமருதூர்

1 comment:

  1. இன்று தஞ்சாவூரா... நெற்களஞ்சியம்... நன்றி...

    ReplyDelete