Monday, November 15, 2010

தி.மு.க விற்கு தொலைதொடர்பு துறை அமைச்சர் பதவி கிடையாது-காங்கிரஸ்

     ஊழல் ராஜா பதவி விலகியதை அடுத்து அந்த பதவியை மீண்டும் எப்படியாவது தங்களுக்கே வாங்கிவிடவேண்டும் என்று தி.மு.க முயற்சித்தது.  அந்த பதவியை தி.மு.க விற்கு வழங்காவிட்டால் தி.மு.க அளித்துவரும் ஆதரவை நிருத்திவிடுமோ என்ற பயம் காங்கிரசுக்கு ஏற்பட்டது.  அனால் காங்கிரசுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு தர தயாராக இருப்பதாக ஜெயலலிதா அறிவித்தார்.  அந்த தைரியதிலோ என்னவோ தி.மு.க விற்கு அந்த பதவியை தர முடியாது என்றும் ஏற்கனவே அமைச்சர் பொறுப்பு வகிக்கும்  கபில் சிபல்  அந்த பதவியை கூடுதலாக கவனிப்பார் என்றும் காங்கிரஸ் தடாலடியாக அறிவித்திருக்கிறது.  இது தி.மு.க விற்கும் காங்கிரசுக்கும   இடையிலான உறவை பாதிக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.  இதனால் தமிழகத்தில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக அரசியல் திருப்பங்கள் நிகழலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.  இதுவரை கருணாநிதி காங்கிரஸ் கூட்டணியில் தான் எதிர்பார்த்த அனைத்தையும் அவர்களை வற்புறுத்தியாவது  கலைஞர் பெற்றுவந்தார்.  ஆனால் காங்கிரஸின் இந்த முடிவு அவருக்கு பெருத்த ஏமாற்றம் கொடுத்திருக்கும்.  தேர்தல் நெருங்கும் இந்த வேலையில் ராஜா விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பதால் தி.மு.க வின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.  

No comments:

Post a Comment