Saturday, March 2, 2013

உலகின் மாபெரும் ரயில் கொள்ளையன் 81 வயதில் மரணம்!

உலகின் மாபெரும் ரயில் கொள்ளையன் என்று வர்ணிக்கப்படும் இங்கிலாந்தின் ப்ரூஸ் ரெனால்ட்ஸ் தனது 81வது வயதில் லண்டனில் மரணமடைந்தார். உடல் நலக்குறைவு காரணமாக தனது தந்தை இறந்ததாக ப்ரூஸின் மகன் நிக் ரெனால்ட்ஸ் தெரிவித்துள்ளார். 1963ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஒரு ரயில் கொள்ளைச் சம்பவம் அப்போது உலகையே பரபரப்பில் ஆழ்த்தியது. கிளாஸ்கோவிலிருந்து லண்டன் சென்ற லண்டன் மெயில் ரயிலில் நடந்த பரபரப்பான கொள்ளை அது. அப்போது அந்த ரயிலில் புகுந்த கொள்ளைக் கும்பல் அதிலிருந்து 20 லட்சம் பவுண்டு பணத்தை கொள்ளையடித்து விட்டு துணிகரமாக தப்பியது. அந்தப் பணத்தின் மதிப்பு இப்போது 4 கோடி பவுண்டுகளாகும். இந்தக் கொள்ளைச் சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இங்கிலாந்தே ஆடிப் போனது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தை திட்டமிட்டு நடத்திய கொள்ளைக் கும்பலின் தலைவர்தான் ப்ரூஸ். கொள்ளைச் சம்பவத்திற்குப் பின்னர் 5 வருடம் தலைமறைவாக இருந்தார் ப்ரூஸ். 1968ம் ஆண்டுதான் அவர் சிக்கினார். பின்னர் அவருக்கு 25 வருட சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட அவர் பத்து வருடத்தில் விடுவிக்கப்பட்டார். பிறகு எழுத்தாளராக மாறி பத்திரிகைகளில் எழுதினார். சுயசரிதை எழுதினார். இப்போது மரணமடைந்துள்ளார்.

Read more at:

1 comment:

  1. Awesome things here. I'm very glad to see your post. Thank you so much and I am having a look ahead to touch you. Will you kindly drop me a e-mail?

    Feel free to surf to my web-site hair loss causes

    ReplyDelete