Saturday, March 2, 2013

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, 31வது நாளாக உண்ணாவிரதம்

 பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, 31வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் சசி பெருமாளின் உடல்நிலை, கவலைக்கிடமாக உள்ளது. பூரண மது விலக்கு கோரி, கடந்த, ஜனவரி 30ம் தேதி, சேலத்தை சேர்ந்த காந்தியவாதி சசி பெருமாள், 57, மெரினா கடற்கரையில், காந்தி சிலை அருகில், உண்ணாவிரதம் இருந்தார். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளியே வர முடியாது எனக் கூறி, சிறையிலும் அவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அவரது உடல் நிலை மோசமானது. கடந்த, 19ம் தேதி முதல், ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு ஜாமின் பெற்றனர். கடந்த சில தினங்களுக்கு முன், மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்த அவர், மெரினா கடற்கரையில் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். இதையடுத்து போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
ஆனால், பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை, உண்ணாவிரதத்தை கைவிடுவதில்லை என்ற முடிவுடன், கடந்த 25ம் தேதி மயிலாப்பூர் கீழ அபிராமிபுரத்தில், தியாகி நெல்லை ஜெபமணியின் மகன் வீட்டில், உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். 31வது நாளாக, நேற்றும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அவரது உடல் நிலை மோசம் அடைந்து வருகிறது. டாக்டர்கள், அவ்வப்போது அவரை பரிசோதித்து வருகின்றனர். இந்நிலையில், சசிபெருமாளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு, அரவிந்த் கெஜ்ரிவாலின், "ஆம் ஆத்மி' கட்சியினர், மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் நத்தம் விசுவநாதனை சந்தித்து, மனு கொடுத்தனர்.
read more at:

No comments:

Post a Comment