Wednesday, October 13, 2010

28 ஆண்டுகளுக்குப்பின்...

28 ஆண்டுகளுக்குப்பின்...
டெஸ்ட் அரங்கில் ஆஸ்திரேலியா 28 ஆண்டுகளுக்குப் பின் படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த 1982 ம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-3 என இழந்தது. அதற்குப் பின், தற்போது இந்தியாவுக்கு எதிராக 2 போட்டிள் கொண்ட தொடரை 0-2 என அப்படியே இழந்துள்ளது. 
* இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின், அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல் முறை. இப்பெருமை பெற்ற முதல் இந்திய கேப்டனானார் தோனி. 
------------

"டாப்-5' பேட்ஸ்மேன்கள்
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டெஸ்ட் தொடரில், அதிக ரன் சேர்த்த "டாப்-5' பேட்ஸ்மேன்கள்: 
வீரர் போட்டி ரன் சதம் அரைசதம்
சச்சின் (இந்தியா) 2 403 1 2
வாட்சன் (ஆஸி.,) 2 271 1 2
பாண்டிங் (ஆஸி.,) 2 224 0 3
பெய்ன் (ஆஸி.,) 2 183 0 2
முரளி விஜய் (இந்தியா) 1 176 1 0
---------------
"டாப்-5' பவுலர்கள்
டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றி "டாப்-5' பவுலர்கள்: 
வீரர் போட்டி விக்கெட்
ஜாகிர் (இந்தியா) 2 12
ஹர்பஜன் (இந்தியா) 2 11
ஓஜா (இந்தியா) 2 9
ஜான்சன் (ஆஸி.,) 2 8
ஹில்பெனாஸ் (ஆஸி.,) 2 6
----------
தொடர்ந்து முதலிடம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி, 130 புள்ளிகளுடன் ரேங்கிங் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. இத்தொடர் துவங்குவதற்கு முன் 113 புள்ளிகளுடன் 4 வது இடத்திலிருந்தது ஆஸ்திரேலிய அணி. ஆனால் படுதோல்வியின் காரணமாக 110 புள்ளிகளுடன் 5 வது இடத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த 2003 ம் ஆண்டு ஐ.சி.சி., டெஸ்ட் ரேங்கிங் பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த 7 ஆண்டுகளில் முதன் முதலாக ஆஸ்திரேலியா 5 வது இடத்தை பெற்றுள்ளது. டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் "டாப்-5' அணிகள்: 
ரேங்கிங் அணி புள்ளிகள்
1 இந்தியா 130
2 தென் ஆப்ரிக்கா 119
3 இங்கிலாந்து 115
4 இலங்கை 112
5 ஆஸ்திரேலியா 110
--------------
15 ஆண்டுக்குப் பின்...
பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் 15 ஆண்டுகளுக்குப் பின், டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி. இதற்கு முன் கடந்த 1995 ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், வெற்றி பெற்றிருந்தது. 
---------
நிறைவேறாத கனவு
 பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற்றதில்லை. இந்தக் குறையை, இந்த முறை பாண்டிங் நீக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. 
* பார்டர்-கவாஸ்கர் கோப்பை கடந்த 1996-97 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை 9 முறை நடந்துள்ளது. இதில், அதிகபட்சமாக இந்தியா 5 முறை கோப்பை வென்றுள்ளது. ஆஸ்திரேலியா 3 முறை வென்றுள்ளது. ஒரு முறை தொடர் "டிராவில்' முடிந்துள்ளது. 
------
இது அணியின் வெற்றி: சச்சின்
பெங்களூரு டெஸ்டின் வெற்றி குறித்து மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கூறியது: இத்தொடர் சிறப்பானதாக அமைந்தது. இந்திய அணியில் இடம் பெற்ற அனைத்து வீரர்களும், வெற்றிக்காக போராடினர். மொகாலியில் நடந்த முதல் டெஸ்டின் வெற்றிக்கு லட்சுமண், இஷாந்த் சர்மா வித்திட்டனர். பெங்களூரு டெஸ்டில் புஜாரா, முரளி விஜய், பிரக்யான் ஓஜா, ஜாகிர், ஹர்பஜன், ஸ்ரீசாந்த் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். கடைசி நாளில் 200 ரன்களை "சேஸ்' செய்வது என்பது சற்று சிரமமான காரியம். எத்தனை சதம் அடித்தேன் என்பதை நான் எண்ணுவதில்லை. எல்லா போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி ரன் குவிக்கவே விரும்புகிறேன். இவ்வாறு சச்சின் தெரிவித்தார். 
-------
பவுலிங் சூப்பர்: தோனி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி குறித்து இந்திய கேப்டன் தோனி கூறியது: கேப்டனாக இந்த போட்டியில் நான் ஒன்றும் சாதிக்க வில்லை. டாஸ் கூட ஜெயிக்க வில்லை. ஆனால் இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு அசத்தினர். முதல் டெஸ்டில் இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீசினார். பெங்களூரு டெஸ்டிலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அசத்தினர். பேட்டிங்கில் சச்சின் கலக்கினார். தவிர, இளம் வீரர்களான புஜாரா, ரெய்னா, முரளி விஜய் உள்ளிடோரும் சிறப்பாக செயல்பட்டனர். இவ்வாறு தோனி தெரிவித்தார். 

No comments:

Post a Comment