Friday, October 22, 2010

3வது ஒரு நாள் ஆட்டத்திலும் மழை விளையாடும்?

 கோவாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் ஆட்டத்தில், மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடகிழக்கு பருவ மழை கோவாவில் இன்னும் நீடிக்கிறது. அக்டோபர் மாதத்தில் மட்டும் இதுவரை 191.7 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் இன்னும் 48 மணி நேரத்துக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
இதனால் கடைசி ஆட்டம் நடைபெறுவது கேள்விக்குறியாகி உள்ளது.
முத்தரப்பு ஒரு நாள் தொடரில் கொச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. விசாகப்பட்டினத்தில் புதன்கிழமை நடந்த 2வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா வென்று, 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
கோவாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் வென்றால் மட்டுமே ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்ய முடியும்.
வீரர்கள் வலைப்பயிற்சி: இதற்கிடையே கோவா சென்றுள்ள இந்திய, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் வெள்ளிக்கிழமை வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். எனினும், மாலையில் மழை குறுக்கிட்டதால் பயிற்சி தடைபட்டது.

No comments:

Post a Comment