Saturday, December 1, 2012

நாய் ரேஸில் பந்தயம் கட்டி 'பெயர்' வாங்கிய ரிக்கி 'பன்டர்' பான்டிங்!


 தனது கடைசி டெஸ்ட் போட்டியில் ரிக்கி பான்டிங் சதம் அடிப்பாரா என்று பலரும் 'பெட்' கட்டி வருகின்றனர். ஆனால் ரிக்கி பான்டிங்கே ஒரு காலத்தில் பெட் கட்டி கலக்கியவர்தான்...ஆனால் கிரிக்கெட்டில் அல்ல, நாய்ப் பந்தயத்தில்!.
ரிக்கி பான்டிங் என்பது அவரது பெயர். ஆனால் அவரைச் செல்லமாக ஆஸ்திரேலிய அணியினர் 'பன்டர்' என்று அழைப்பார்கள். இந்த 'பன்டர்' என்பதற்கு என்ன அர்த்தம் என்பது நிறையப் பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இதன் பின்னணி சுவாரஸ்யமானது.
ஷான் வார்ன்தான் ரிக்கிக்கு இந்தப் பெயரை முதலில் வைத்தவர். அது ஏன் என்பதற்கான காரணம் இதோ...
நாய்ப் பந்தயத்தில் நிறைய ஆர்வம் கொண்டவர் ரிக்கி. இவரிடம் பல வேட்டை நாய்கள் உள்ளன. வேட்டை நாய்களுக்கான பந்தயத்தில் ரிக்கியும் முன்பு ஆர்வமாக கலந்து கொள்வார். எந்த நாய் ஜெயிக்கும் என்ற பெட் (punt) கட்டுவதிலும் அவர் கலந்து கொள்வார். இப்படி பெட் கட்டியவர் என்பதால்தான் அவருக்கு அதை வைத்து பன்டர் என்று செல்லப் பெயரிட்டார் வார்ன்.
அதை அப்படிய சக ஆஸ்திரேலிய வீரர்களும் கூப்பிட ஆரம்பித்தனர். ரசிகர்கள் கூப்பிட ஆரம்பித்தனர். பின்னர் மற்ற நாட்டு வீரர்களும் பயன்படுத்த ஆரம்பித்தனர். ரிக்கியும் அதைக் கண்டுகொள்ளவில்லை.
20 வருடமாக இந்த வேட்டை நாய் ரேஸில் ஆர்வம் காட்டி வருகிறாராம் ரிக்கி. இதை தான் பெரிதும் விரும்புவதாகவும் அவர் கூறுகிறார். கிரிக்கெட் ஆடாதபோதெல்லாம் வேட்டை நாய்களுடன்தான் இருப்பாராம் ரிக்கி. இப்போதும் கூட ரிக்கியிடம் நிறைய வேட்டை நாய்கள் உள்ளனவாம். இனி ஓய்வுக்குப் பின்னர் நாயும், பெட்டுமாக ரிக்கி பிசியாக இருப்பார் என்று நம்பலாம்.
இவர் வேட்டை நாய்களுக்குக் கூட கிரிக்கெட் பெயரையே வைத்துள்ளார். ஒரு நாயின் பெயர் பர்ஸ்ட் இன்னிங்ஸ். இன்னொரு நாயின் பெயர் டவுன் தி பிட்ச் என்பதாகும்.

No comments:

Post a Comment