Saturday, October 2, 2010

அமைதியை விதைப்போம்

      இன சண்டைகள், சாதி பிரச்சினைகள், உள்நாட்டு கலவரம், வெளிநாட்டு கலவரம், நவீன அணு ஆயுதங்கள் உருவாகுவதற்கான  போட்டா  போட்டி என அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் காரியங்கள் எங்கும் பெருகிவருகின்றன.  எங்கு பார்த்தாலும் கலவரம், போட்டி, பொறாமை என நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்பதே புரியவில்லை.  இந்த நிலை கண்டிப்பாக மாற வேண்டும்.  நமது மனநிலையும் மாற வேண்டும்.  மாவோயிஸ்ட், நக்சலைட் போன்றவை உருவாவதற்கு நமது அரசியல் கட்சிகளே காரணம் என்பதை மறுக்க முடியாது.  தவறு முற்றிலும் அரசாங்கத்துடையது.  அப்பாவி மக்கள், போலீஸ் காரர்கள் அவர்களுக்கு எதிரிகள் அல்ல.  அதை ஏனோ அவர்கள் உணர முடியவில்லை.  அப்பாவி மக்களை கடத்துவதலோ, கொள்வதினாலோ அவர்கள் நினைப்பது நடந்துவிடும் என்ற கருத்து சரியல்ல.   நியாமும் அல்ல.  காரணமானவர்களை விட்டு விட்டு அப்பாவி மக்களை கொன்றுகுவிக்கும் இவர்களுக்கும் தவறான அரசியல் வாதிகளுக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இருக்கப்போவதில்லை.  எந்த பிரச்சினையும் மக்கள் ஆதரவுடன் நடந்தால் தான் வெற்றிபெற முடியும்.  இதுவரை  அப்படித்தான் வெற்றி பெற்று இருக்கின்றது.  இவர்கள் மக்களை எதிர்த்து போராடுகிறர்கள அல்லது அரசாங்கத்தை எதிர்த்து போராடுகிறர்கள எனபது கேள்விகுறி ஆகிவிட கூடாது.  மாவோயிஸ்ட்களும், நக்சளிட்டுகளும் மனிதர்களே. எனவே இதுபோன்ற விசயங்களில் அவர்கள் கவனமாக செயல்பட வேண்டும்.  அவர்களின் கோரிக்கைகள்  மக்களை அடைய செய்ய அவர்கள் முயல வேண்டும்.  அது சரியான கோரிக்கைகளாக இருந்தால் மக்கள் ஆதரவுடன் போராடும் பட்சத்தில் அவர்களுக்கு வெற்றிகிட்டும்.  அமைதியை நிலைநாட்டிய காந்தியடிகள் பிறந்த நாட்டில் இவர்கள் இவ்வாறு  அப்பாவி மக்களை கொன்றுகுவிப்பதை யாரும் ஏற்றுகொள்ள மாட்டார்கள் என்பதே உண்மை.  எனவே அவர்கள் இதனை புரிந்துகொண்டு,  போராடும் உக்தியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.  இல்லை என்றல் மக்கள் ஆதரவு அவர்களுக்கு கிடைக்காது.  அரசியல்வாதிகளும் பிரச்சினையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.  இனியாவது அமைதியை விதைப்போம்.  அப்போதுதான் அன்பு என்ற பயிர் விளையும்.

No comments:

Post a Comment