Friday, October 1, 2010
சச்சின் என்ற சிங்கம்
இந்திய கிரிக்கெட் அணியை தலைநிமிர்ந்து நிற்க வைத்தவர் நமது அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர். இந்திய கிரிக்கெட் அணி இன்று பேறும், புகழும் ஈட்டி இருக்கிறது என்றால் அந்த பெருமை சச்சினையே சேரும். கிரிக்கெட்டில் விளையாட ஆரம்பித்த அன்று தொடங்கி இன்று வரை அவருக்கு வயது 16 தான். இவரை வசை பாடிய பல பந்துவீச்சாளர்கள் இன்று இருக்கும் இடம் தெரியவில்லை. இந்த வயதிலும் மற்ற வீரர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார். இவரின் இந்த சாதனையை பார்த்துதான் இவருக்கு இந்திய விமான படையின் கௌரவ கேப்டன் பதவி அளிக்கப்பட்டது. ஒரு நாள் ஆட்டங்களில் 200 ரன்கள் எடுக்க முடியாது என்ற நிலையை மாற்றி அந்த மைல் கல்லை எட்டிய முதல் மனிதனாக இன்று உலா வருகிறார். விளையாட்டில் மட்டும் அல்லாமல் சொந்த வாழ்கையிலும் அவர் ஒரு சிறந்த மனிதனாகவே விளங்கி வருகிறார். தானும் சரியான வழியில் சென்று மற்றவர்களையும் வழி நடத்தும் அவருடைய பங்கு சிறப்பானது. அவர் விளையாடும் அணைத்து ஆட்டங்களிலும் சாதனை அவரை தேடி வருகிறது. இந்த கிரிக்கெட் ஜாம்பவான் மென்மேலும் பலவருடங்களுக்கு சிறப்பாக ஆடவேண்டும் என்று வாழ்த்துவோம். _அன்பு
Labels:
cricket news
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment