Monday, October 11, 2010

சாதனைக்கு பெருமை சேர்க்கும் சச்சின்

  • சாதனையால் பெருமை அடைந்தவர்கள் பலர் இந்த புவியில் உண்டு. ஆனால் அந்த சாதனைக்கே பெருமை சேர்க்கும் பெருமை சச்சினுக்கே  உண்டு.
  • சச்சினை பார்த்து அந்த சாதனையே பொறமை கொள்கிறது.
  • தனது உயரத்தில்  சிறியவர் ஆனால் புகழின் சிகரத்தை தொட்டவர். 
  • அவர் விளையாடும் போட்டிகளில் எல்லாம் சாதனைகள் அவரை பின்தொடர்கின்றது. 
  • அவரின் விளையாட்டு நேர்த்தியும், லாபகமும், பொறுமையும், சகிப்புத்தன்மையும், இன்றுவரை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்துவருகின்றது.
  • இன்று நடந்த ஆஸ்த்ராலியாவுக்கு  எதிரான டெஸ்ட் போட்டியில் கூட பல சாதனைகளை அவர் படைத்திருக்கிறார்.
  • இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இவருடைய சாதனைகளை யாராலும் நெருங்க கூட முடியாது என்பது உறுதியாகிவிட்டது.
  • தானும் புகழ் பெற்று அதன் மூலம் தனது நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் இந்திய மண்ணின் மைந்தன் இன்னும் பல ஆண்டுகள் விளையாடி சாதனைகளுக்கு பெருமை சேர்க்க வேண்டுவோம். 
  • அவருடைய இன்றைய சாதனைகளில்  சில,
  • 14000  ரன்களை டெஸ்ட் போட்டிகளில் கடந்த ஒரே வீரர். 
  • ஒரே வருடத்தில் ஆறு சதங்கள் கண்ட முதல்  வீரர்.
  • ஆஸ்த்ரளியவிற்கு எதிராக 3000 ரன்களை கடந்த முதல் வீரர்.
  • 150 ரன்களை அதிகமுறை பெற்ற ஒரே வீரர்.
  • பெங்களுர் மைதானத்தில் அதிக ரன்களை கடந்த ஒரே வீரர்.
  • இவ்வளவு சாதனைகலயும் இன்று ஒரே நாளில் படைக்க அவர் ஒருவரால் மட்டுமே முடியும். 
  • இதெல்லாம் பத்தாதென்று தனது இரட்டை சதத்தையும் அடித்து நாளை சாதனை படைக்க இருக்கிறார் இந்த கிரிக்கெட் கடவுள். 

No comments:

Post a Comment