Monday, October 11, 2010

மன்னராட்சி?

      கலைஞர் கருணாநிதி நேற்று ஒரு பொதுகூட்டத்தில் பேசினார். அதனை பற்றியதுதான் இன்றைய தலைப்பு. 
     நேற்று அவர் பேசும்போது  அவருடைய உருக்கமான பாணியில் "என்னுடைய மறைவிற்கு பிறகு எனது மகன், எனது பேரன், எனது பேத்திகள் இந்த தமிழ்நாட்டினை ஆளுவார்கள்" என்று குறிபிட்டார்.
     தமிழ் நாடு என்னவோ அவருடைய குடும்ப  சொத்து மாதிரியும் இவர் சாக போவதற்கு முன்பு அந்த சொத்தில் எதுவும் வில்லங்கம் ஏற்பட்டு விடாமல் இருக்க இப்போதே பிரித்து கொடுப்பது போன்ற தோணியிலே அவர் பேசி இருக்கிறார். 
     மக்களுக்கு பொது சேவை செய்வேன் என்று கூறி அரசியலுக்கு வந்தவர் எப்படி பேசவேண்டும்?  எனக்கு பிறகு யார் இந்த நாட்டிற்க்கு முதலமைச்சராக வர வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அல்லவா கூற வேண்டும்.
     முதலமைச்சர் பதவி என்னவோ தனது குடும்ப சொத்து போலவும் அதை தனது மகன் ஸ்டாலினுக்கு எழுதி வைப்பது போலவும் பேசி இருக்கிறார். 
     விட்டால் தமிழ்நாட்டை தனித்தனியே பிரித்து அதனை தனது மனைவிகளுக்கும், மகன்களுக்கும், பேத்திகளுக்கும், பேரன்களுக்கும் எழுதி கொடுத்துவிடுவார் போலிருக்கிறது. 
     அவருக்கு இந்த தைரியம் இன்று எப்படி வந்தது?  பெரம்பலூர் தொகுதி மத்திய அமைச்சர் ராஜாவால் வந்தது. 
     அலைவரிசை ஒதுக்கீட்டில் தான் கொள்ளையடித்த பல ஆயுரம் கோடிகளை வைத்து, மக்களுக்கு பணத்தை அள்ளி வீசி எப்படியும் தான் வெற்றிபெற  முடியும் என்ற நம்பிக்கையில் அவர் பேசுகிறார்.  
     அமைச்சர் ராஜா தன்னை மத்திய மந்திரியாக தேர்ந்தெடுத்த பெரம்பலூர் தொகுதி மக்களுக்கு நல்லபெயர் வாங்கி கொடுத்திருகிறார். இந்திய வரலாற்றில் எந்த ஒரு அரசியல் வாதியும் ராஜாவை போல பல இலச்சம் கோடிகளை அடித்ததில்லை. கொள்ளை அடிபதிலே வரலாற்று சாதனை புரிந்திருக்கிறார் அமைச்சர் ராஜா. 
      அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்க கருணாநிதி சென்றிந்தாரம், அப்போது அதிபரின் மாளிகையை பார்த்து அசந்துபோன கருணாநிதி "மாளிகை மிகவும் பிரமாண்டமாக இருகிறதே எப்படி கட்டினீர்கள்? என்று கேட்டாராம், அதற்க்கு அதிபர் அதோ தெரிகிறதே ஒரு பாலம் அதில் அடித்த காசை வைத்துதான் கட்டினேன் என்றாராம்.   அதற்க்கு பிறகு ஒருநாள் கலைஞர் அவர்களை சந்திக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தாராம் கலைஞரின் வீட்டை பார்த்து அதிசயித்த அவர் "அடேங்கப்பா நான் அமெரிக்க அதிபராக இருக்கிறேன் என்னால் கூட இப்படி பிரமாண்டமான ஒரு மாளிகையை கட்ட முடியவில்லை எப்படி நீங்கள் கட்டினீர்கள் என்று கேட்டாராம், அதற்க்கு கலைஞர் அதோ தெரிகிறதே ஒரு பாலம் பாருங்கள் என்று அதிபரிடம் காட்டினாராம். அதிபரின் கண்களுக்கு எந்த பாலமும் தென்படவில்லை.  "அங்கே பாலம் எதுவும் இல்லையே என்று கூறினாராம், அதற்க்கு கலைஞர் "அங்கே பாலம் கட்டுவதாக கூறித்தான் இந்த மாளிகையை எனக்காக கட்டிகொண்டேன் என்று கூறினாராம். அமெரிக்க அதிபர் அசந்து போனாராம் .  இது எனக்கு வந்த ஒரு குறும்செய்தி. 
     இது கலைஞரின் அரசியல் வாழ்கையை பிரதிபலிக்கும் ஒரு செய்தியாகவும் அமைந்துவிட்டது.
      கடுமையான விலை ஏற்றதால் ஏராளமான தமிழர்கள் அவதிக்கு உள்ளாகி இருக்கிற இந்த காலகட்டத்தில் அவரின் குடும்பத்தின் சார்பாக 150 கொடிகள் செலவு செய்து  படம் எடுக்கின்றனர். தனது பெற்ற குழந்தைகள் எல்லாம் பட அதிபர்களாக மாறிவிட்டனர்.
    இளைஞ்சர்கள் இந்த விசயத்தில் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும் இவளவு பணம் அவர்களுக்கு எப்படி வந்தது? பரம்பரை சொத்தா? எதுவும் கிடையாது. இலவசம் என்ற பெயரில் தமிழ்நாடு மக்களை ஏமாற்றி சுரண்டிய பணம்தான் அது. நமது வரிபனத்தில் தனது பேரன்கள் படம் எடுத்து விளையாடி கொண்டிருக்கட்டும் என்று நினைக்கிறார். 
     தொழில்துறை, சினிமாத்துறை, கல்வித்துறை என்று அத்தனை துறைகளையும் தனது அடக்கு முறையால் கைக்குள் வைத்து கொண்டிருக்கிறார்.
     இவருடைய ஆட்சியில் ஆளும் கட்சியினருக்கு பாதுகாப்பு இல்லை, எதிர் கட்சியினருக்கு பாதுகாப்பில்லை ஏன் காவல்துறைக்கு கூட பாதுகாப்பு இல்லை!  இப்படி நடக்கிறது இவருடைய காமராஜர் ஆட்சி.
     தனகென்று ஒரு பைசா கூட சேர்த்து வைத்து கொள்ளாத காமராஜருடன் கோடியில் புரளும் இந்த செல்வ சீமான் எப்படி ஒப்பிட்டுக்கொள்ள மனது வருகிறது? 
     இலஞ்சர்களின் கையில்தான் உலகம் உள்ளது.  சற்று யோசித்து பாருங்கள் கலைஞரின் ஆட்சியை. இல்லையென்றால் தொலைத்து விடுவீர்கள்  உங்கள் வாழ்கையை. 

No comments:

Post a Comment