- வலைத்தளங்கள் தற்பொழுது சிறந்த ஒரு ஊடகமாக உருவெடுத்து வருகின்றன. கணிப்பொறி என்பது தொலைகாட்சி பெட்டியை போன்று முக்கியமான தேவை ஆகிவிட்டது.
- இப்போது நிறைய வலைபதிவர்கள் தங்களது வலைபக்கத்தை உருவாக்கி அவர்கள் மனதில் பட்டதை தைரியமாக பதிய ஆரம்பித்துவிட்டனர்.
- வலைப்பதிவை பார்க்கும் ரசிகர்கள் பெருகிவிட்டனர்.
- உண்மையில் வலைபதிவு என்பது ஒரு வரப்ரசாதமாக ஆகிவிட்டது. முன்பெல்லாம் மனதில் பட்டதை அவர்களுக்கு நெருங்கியவர்களிடம் மட்டுமே பரிமாறிக்கொள்ள முடியும் . ஆனால் இப்போது முன் அறிமுகம் இல்லாதவர்களை கூட நமது எழுத்தால் நண்பர்கள் ஆக்கிவிடமுடயும். அவர்களுடன் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள முடியும்.
- அவ்வாறு நம்மால் பதியப்படும் வலைபதிவுகள் எத்தனை பேருக்கு பயனுள்ளவையாக அமைந்திருகிறது என்பதை எண்ணி பார்துகொள்ளவேண்டும். வெறும் பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே பதிவதை விட்டுவிட்டு நமது கருத்துக்களை மற்றவர்களுக்கு எடுத்துசெல்லும் ஒரு ஊடகமாகவே இதனை கன்னுரவேண்டும்.
- வெறும் சினிமா, விளையாட்டு, என்று தனது பதிவை வீணாக்காமல் தனது வலைபக்கத்துக்கு வரும் வருகையாளர்களுக்கு அறிவுரை கூறும் வண்ணமாக அவர்களுக்கு உதவும் வண்ணமாக நமது பக்கத்தை அலங்கரிக்கவேண்டும்.
- இதனை ஒரு பேசும் கருவியாக பாவிக்கவேண்டும். இன்றைய நிலையில் பேசுவதற்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன! அரசியல் நிலை, சமுதாய சிக்கல்கள், நமது வளர்ச்சிக்கு ஏற்படும் தடைகள் என பேசுவதற்கு எவ்வளவு பிரச்சினைகள் உள்ளன?.
- எனவே வலைபக்கங்களை வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் பயன்படுத்துவதை விட்டுவிட்டு மற்றவர்களுக்கு பயன்பெறுமாறு அமைப்பதே நமது கடமை.
- தெரியாததை தெரிந்துகொள்வதற்கும், தெரிந்ததை பகிர்ந்துகொள்வதற்கும் நாம் இந்த வலைபக்கங்களை பயன்படுத்துவோம்.
- எனது வலைபக்கத்தில் வளதுகைபக்கம் பயன்பாடுமிக்க வலை பக்கங்களை குறிபிட்டுள்ளேன் அதற்கெல்லாம் ஒரு முறை சென்றுபாருங்கள். _அன்பு
Sunday, October 3, 2010
உங்கள் வலை பக்கத்தை பயன்னுள்ளதாக ஆக்குங்கள்
Labels:
others
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment