Sunday, October 3, 2010

சாதியை மிதிப்போம்! மனிதனை நினைப்போம்!



  1.       அந்த காலத்தில் நமது சமுதாயம் சமநிலை அற்று இருந்தது. ஒருசாரார் செல்வந்தர்களாகவும் மற்றோருசாரர் ஏழைகளாகவும் இருந்தனர்.  ஏழைகளாக இருந்த ஒருசாரரின் வாழ்கையை முன்னேற்ற அரசாங்கம் திட்டடங்கள் தீட்டவும் அவர்களை முன்னேற்றவும் அவர்கள் முன்னேறியவர்கள் , முன்னேருவோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், என பிரித்து அவர்களுக்கு தகுந்தர்ப்போல் திட்டங்கள் தீட்டி செயல்பட்டது.  அது ஒரு நல்ல காரியத்திற்காக செய்யப்பட்டது.  ஆனால் அதனை வைத்து மக்கள் தங்களுக்குள் பாகுபாடு பார்க்க தொடங்கிவிட்டனர்.  
  2.      மேலும் அந்த காலத்தில் ஒரு குறிப்பிட வகுப்பினர் தங்களது குடும்ப தொழிலாக குறிப்பிட்ட ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து அதனையே தங்கள் சந்ததியினரும் பின்பற்ற  வைத்தனர். பின்னர் அதுவே அவர்களது வாழ்கை ஆகி போனது.  அந்த காலத்தில் அதிக வேலைவாய்புகள் இல்லாததாள் அது அவர்களுக்கு பெரிதாக பாதிக்கவில்லை.  ஆனால் இன்றோ அனைத்தும் இயந்திரங்கள் மற்றும் கணினி உதவியுடன் செய்யபடுகிறது.  இதனால் அவர்கள் வேலைகளுக்கு மவுசு குறைந்துபோனது.  இந்த நிலையுளிலும் அவர்கள் அதே தொழிலை செய்வதென்பது இயலாதது.  
  3.      மேல்கண்ட இந்த இரண்டு விஷயங்களும்தான் சாதி என்னும் பேய் உருவாக முக்கிய காரணமாக விளங்கிவந்துள்ளது.  மேற்கண்ட இரண்டு விஷயங்களுமே அந்த காலகட்டத்திற்கு வேண்டுமானால் ஏற்றதாய் இருந்திருக்கலாம்.  இன்று அவற்றை அப்படியே தொடர வேண்டிய அவசியம் இல்லை.
  4.       தான்தான் சாதியில் வேரூன்றி போய்விட்டோம் என்றால் தனது  குழந்தைகளுக்கும் அவற்றை பதிய வைக்கின்றனர் பல பெற்றோர்கள். நம்ம ஜாதிக்காரன் கூடதான் பழகணும்!  அவன் வேறு ஜாதிக்காரன்!  அந்த ஜாதி மோசம் இந்த ஜாதி மோசம் என பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கின்றனர். இதனால் மக்களிடையே சமத்துவம் குன்றிவிடுகிறது.
  5.        என்னதான் பெரியார் இதற்காக தன வாழ்கை முழுவதும் போராடினாலும் ஒரு பகுதியினரைத்தான் திருத்த முடிந்ததே ஒழிய முழுவதுமாக முடியவில்லை.  
  6.        இன்று ஒரு சிலர் தங்களை தமிழின தலைவர் ,  தமிழர்களின் காவலன் என்று கூறிகொண்டாலும் இதற்கு எந்த முயற்சியும் எடுக்க முடியவில்லை.
  7.         சிலர் இதிலிருந்து விடுபட நினைக்கும் போதெல்லாம் ஜாதிகட்சிகள் அவர்களை துண்டிவிட்டு குளிர்காய நினைக்கின்றன .   
  8.          சாதி ஒழிகபடுகிறதோ இல்லையோ இம்மாதிரியான சாதிக்கட்சிகள் கண்டிப்பாக ஒழிக்கப்படவேண்டும்.  பின்னர் சாதி அதுவாகவே ஒழிந்துவிடும்.  
  9.          சாதிகட்சிகளை புறக்கணிக்கும்   பொறுப்பு நமக்குதான்  இருக்கவேண்டும்.  சாதி கட்சி தலைவர்கள் வளர்ந்திருகிரர்களே தவிர அவர்களால் எந்த சாதியும் முன்னேறியதாக சரித்திரம் இல்லை.  
  10.          மொழியின் பெயராலும்,  ஜாதியின் பெயராலும், இனத்தின் பெயராலும் மக்களை பிரித்துபார்பதை இனியாவது நிறுத்துங்கள். அவர்களும் மனிதர்களே என்பதை நினைத்துபாருங்கள்.  
  11.           இந்தியா பண அளவில் உலகின் வல்லரசாக மாறினால் மட்டும் போதாது.  மக்களின் மன அளவிலும் வல்லரசாக வேண்டுமென்பதே எனது ஆசை.  
  •           ஜாதி என்ற ஒரு சொல் தமிழிலேயே அதன் அகராதியிலேயே இல்லை என்பதே மறுக்கமுடியாத உண்மை.  இது நமது நலம் விரும்பதவர்களால் சேர்கப்பட்டது என்பதை நினைவில் கொண்டு இனியாவது சாதியை மிதிப்போம்! மனிதனை நினைப்போம்!    ஜெய் ஹிந்த்.       _அன்பு 

No comments:

Post a Comment