Wednesday, October 6, 2010

இலவசங்களின் தாத்தா!


  • நாம் நமக்குள் சிலநேரம் பேசும்போது "மச்சான் காசு இருந்தா எத வேணும்னாலும் சாதிகலாம்டா! என்று பேசுவது வழக்கம் . 
  • சிலநேரங்களில் இது வாழ்க்கைக்கு கூட ஒத்து போகலாம். ஆனால் இதனை அரசியலில் செய்து காட்டி இருக்கிறார் நம்ம முதலமைச்சர்.  
  • இலவசமா எதாவது கொடுத்தா தமிழ்நாட்டு மக்கள் கண்டிப்பா நமக்கு ஒட்டு போட்டுவிடுவார்கள் என்று நினைதுகொண்டிருகிறார். 
  • இலவசங்கள் எப்பவுமே கைகொடுக்கும் என்று நினைப்பது தவறு என்பதை அவர் கூடிய விரைவில் புரிந்துகொள்ளும் காலம் வந்துகொண்டிருகிறது. 
  • காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று கூறும் கருணாநிதி, காமராஜர் சாகும் வரை  சொத்து என்று தனக்காக எதையும் சேர்த்து வைத்துகொள்ளவில்லை என்பதை ஏனோ மறந்துவிட்டார்.  இவருக்கு இன்று எவளவு சொத்து இருக்கிறது என்பதை இந்த உலகமே அறியும்.  இவர் காமராஜருடன் தன்னை ஒப்பிடுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?  
  • இவர் எந்த நிலையில் சென்னை வந்தார், பிறகு எப்படியெல்லாம் சொத்து சேர்த்தார் எனபது இந்த உலகம் அறிந்த ஒன்று. 
  • இவர் எப்படி சொதுசெர்த்தார் என்பதை வெள்ளை அறிக்கை விடுவாரா? என்று பொதுமக்கள் கேட்கும் நேரம் நெருங்கிவிட்டது.   
  • மின்சாரத்திலும் ஊழல் பண்ண முடியும் என்பதை நிருபித்து இருக்கிறார் கலைஞர். 
  • இவருடைய அமைச்சர் ராஜா பண்ணிய ஊழல்தான் உலக சரித்திரத்தில் பெரிய ஊழலாம்!  இதிலெல்லாம் சாதனை படைக்க அவரால்தான்  முடியும். 
  • இந்த குற்றச்சாட்டு எழுந்து அது இன்று நிருபிக்கபடபோகிறது.  ஆனால் இன்றுவரை அவரை பதவியை விட்டு விரட்டவில்லை கருணாநிதி. 
  • இவளவு சுத்தமான அரசியல் நடத்துபவர் காமராஜரை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?
  • இவர் உயுருடன்  இருக்கும்போதே பதவிக்காக ஸ்டாலினும், அழகிரியும் அடிதுகொல்வதை பார்க்கும்போதே அவருக்குப்பின் தி.மு.க.வின் வளர்ச்சி தெரிகிறது.
  • கொலை புரிவோருக்கும், கொள்ளை அடிப்போருக்கும், ஊழல் செய்பவர்களுக்கும், சட்டத்தை ஏமாற்றுபவர்களுக்கும் பாதுகாப்பு அரணாக இந்த ஆட்சி அமைந்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. 
  • கலைஞரின் இந்த சாதனைகளை எல்லாம் எண்ணி பார்த்து அவருக்கு தக்க பதிலை வரும் தேர்தலில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம் .
  • எனவே இந்தமுறையும் அவருடைய இலவசங்களுக்கு நம்பி ஏமாறாமல் தமிழர்கள் புத்திசாலிகள் என்பதை நிருபிக்கும் வகையில் செயல்படுவோம்.   ஜெய் ஹிந்த்.

No comments:

Post a Comment