Tuesday, December 6, 2011

கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயரை நீக்குவேன்: கனிமொழி நம்பிக்கை


 ""2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு வழக்கை கோர்ட்டில் சரியான முறையில் எதிர்கொண்டு, எனக்கும், கட்சிக்கும் ஏற்பட்டுள்ள அவப்பெயரை நீக்குவேன்,'' என, தி.மு.க., ராஜ்ய சபா உறுப்பினர் கனிமொழி கூறினார்.
ஆறு மாத சிறைவாசத்துக்குப் பின், ஜாமினில் வெளிவந்துள்ள கனிமொழி நேற்று முன்தினம் சென்னை வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர், நேற்று
அவரைச் சந்தித்தனர். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கட்சித் தொண்டர்கள் எனக்கு அளித்த உற்சாக வரவேற்புக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். தொண்டர்கள் காட்டிய அன்பு என்னை நெகிழச் செய்வதாக இருந்தது. ஆறு மாதம் சிறையில் இருந்த போது, ஏற்பட்ட மன வலிக்கும் வருத்தத்துக்கும், அது நல்ல மருந்தாக இருந்தது. ஆறு மாதம் சிறையில் இருந்ததால் எனது உடலோ, மனதோ சோர்ந்து போய்விடவில்லை. உடல் நிலையும், மனநிலையும் நன்றாகவே உள் ளது. தி.மு.க., தலைவர் தான் என்னை அரசியலுக்கு அழைத்து வந்தார். அவர் எந்தளவு எதிர்பார்க்கிறாரோ, அந்தளவுக்கு எனது பணியைச் சிறப்பாக செய்வேன். என் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள, 2 ஜி வழக்கை, கோர்ட்டில் சரியான முறையில் சந்தித்து வருகிறோம். நான் நிரபராதி என நிரூபித்து கட்சிக்கும், எனக்கும் ஏற்பட்டுள்ள அவப்பெயரை நீக்கி, வழக்கில் இருந்து மீண்டு வருவேன். இவ்வாறு கனிமொழி கூறினார்.(THANKS DINAMALAR)

No comments:

Post a Comment