Friday, October 29, 2010

ஆங்கில மொழிக்கு கோயில் கட்டும் அதிசய ஊர்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்புர் கேரி மாவட்டதிலுள்ள பங்கா கிராமத்தில் தலித் மக்கள் இடையே ஆங்கில அறிவை வளர்க்கும் வகையில் ஆங்கிலத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் கோயில் கட்ட துவங்கினர். தற்போது பணிகள் முடிந்த நிலையில், நவம்பரில் கோயிலை திறக்க முடிவு செய்துள்ளனர்.
கோயில் கருவறையில் மூன்றடி உயர பெண் ஆங்கில கடவுளாக பேனா பிடித்திருப்பது போன்ற உருவம் அமைக்கப்பட்டுள்ளது. கவுன் மற்றும் தொப்பியால் இது அலங்கரிக்கப்பட்டுள்ளது. தேசிய மொழியாக எது இருக்க வேண்டும் என்ற வாதம் எழுந்தபோது, டாக்டர் அம்பேத்கர் ஆங்கில மொழிக்கு ஆதரவு தெரிவித்தார்.

தற்போது, இம்மொழி தெரியாதவர்கள் சமூகத்தில் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டனர். தலித் மக்களிடையே ஆங்கில அறிவை வளர்க்கும் நோக்கத்தில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது’ என்று இக் கோயிலை கட்ட மூலகாரணமாக இருந்த சந்திர பான் பிரசாத் தெரிவித்துள்ளார்.
thanks inneram.com

No comments:

Post a Comment