Monday, October 25, 2010

இரண்டு சிம்கார்டுகளுக்கு மேல் பயன்படுத்த தடை

தமிழகத்தில் குற்ற நடவடிக்கைகள் அதிகரிப்பை தொடர்ந்து, மொபைல் நிறுவனங்கள் சார்பில், ஏற்கனவே வழங்கப்பட்ட சிம்கார்டுகள் குறித்த ஆய்வு பணி நடக்கிறது.

மொபைல்போன் மூலம், கொலை, கொள்ளை, மாணவர்கள் சீரழிவு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள், சமீபகாலமாக அதிகரித்துள்ளன. மேலும், மொபைல்போன் நிறுவனங்களின் இடையேயான போட்டி காரணமாக, முகவரி சான்று இருந்தால் மட்டும் போதும். எத்தனை சிம்கார்டுகளை வேண்டுமானாலும் பெறலாம் என்ற நிலை உள்ளது.குற்ற நடவடிக்கைகள் அதிகரிப்பை தொடர்ந்து, ஒரே நிறுவனத்தை சேர்ந்த சிம்கார்டுகள், இரண்டுக்கும் மேல் பயன்படுத்த தடை விதித்துள்ளது. கடந்த வாரம், தனியார் மொபைல் நிறுவனங்கள், தங்களது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள எஸ்.எம்.எஸ்.,சில், புகைப்படத்துடன் கூடிய இருப்பிட சான்றிதழை எடுத்து வருமாறு தெரிவித்துள்ளன.

தனியார் மொபைல்போன் நிறுவன அதிகாரி கூறியதாவது:சிம்கார்டு பெற விரும்பும் நபர், புகைப்படம் மற்றும் முகவரி சான்றிதழை வழங்கி, ஒரே நிறுவனத்தில் தங்களின் தேவைக்கு ஏற்ப சிம்கார்டுகளை வாங்கி பயன்படுத்தினர்.  சிம்கார்டுகள் தொலைந்தால், சம்மந்தப்பட்ட நபர், மொபைல் நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்காமல், புதிய சிம்கார்டுகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவே அரசு சார்பில், "ஒருவருக்கு இரண்டு சிம்கார்டுகளுக்கு மேல், தனியார் மொபைல் நிறுவனங்கள் வழங்க கூடாது' என, அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பப்படுகிறது.இவ்வாறு அதிகாரி கூறினார். 

No comments:

Post a Comment