- போட்டி முக்கியம்தான் ஆனால் எதில் போட்டியிட வேண்டும் என்பது முக்கியம்.
- அண்டை நாட்டை கைப்பற்றுவதற்கும், அணு ஆயுதங்கள் தயாரிபதற்கும், பக்கத்துக்கு நாட்டிற்கு தீவிரவாதிகளை உருவாக்கி ஊடுருவவைபதற்கும் போட்டிஇடுகின்றன பல நாடுகள்.
- அணு ஆயுதங்கள் என்பது அவ்வளவு பாதுகாப்பானது இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். அனாலும் அதை ஒரு கௌரவமாக நினைக்கின்றன பல நாடுகள்.
- வாரத்திற்கு ஒரு ஏவுகணை சோதனை செய்து தனது பலத்தை நிருபிக்க வேண்டும் என்பதிலேயே கவனமாக கொண்டுள்ளனர்.
- ராக்கெட்டுகளை ஏவி புவியின் அமைதியை கெடுத்தது பத்தாதென்று, வானின் இயற்கை நிலையையும் மாற்றி வருகின்றனர்.
- நவீன தொழில் நுற்பம் என்று இவர்கள் தயாரிக்கும் பொருள்களினால் புவி வெட்பமயமாகி வருகின்றது.
- புவி வெட்பமாவதால் கடலில் உள்ள பனிக்கட்டிகள் உருக ஆரம்பித்துவிட்டன. இதனால் கடலின் பரப்பு அதிகமாகிறது. நிலத்தின் பரப்பளவு குறுக ஆரம்பித்துவிட்டது.
- மனிதனுக்குள் இயற்கையாகவே நிலவவேண்டிய சமாதானம், பொறுமை, நேர்மை என்று எல்லாமே குறைந்துவருகிறது.
- அணைத்து மக்களும் ஒன்றாக வாழ்வதுதான் நாடு. ஆனால் இன்று அனைவரும் சுயநலமாகவே சிந்திக்க தொடங்கிவிட்டனர் என்பது கவலை பட வேண்டிய விஷயம்.
- தொழில்நுட்பம், புதுமை, நவீன சாதனை என்ற பெயரில் இவர்கள் தயாரிக்கும் பொருள்கள் எல்லாம் இயற்கையை சீரழிக்காமல் பார்த்துகொல்வதில் கவனம் செலுத்தவேண்டும் .
- இனியாவது, செயற்கையை நேசிப்போம்! இயற்கையை சுவாசிப்போம்! -அன்பு
Thursday, October 7, 2010
அழிவை நோக்கி செல்லும் உலகம்!
Labels:
Photos
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment