Friday, May 25, 2012

பேஸ்புக்கில் நட்பு.. சென்னை பெண்களை 'வளைத்த' 2 வேலூர் வாலிபர்கள்..

 பேஸ்புக் மூலம் இரு பெண்களுடன் பழகி அவர்களை பலமுறை லாட்ஜுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்த இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உல்லாச நிலையில் இருந்ததை படம் எடுத்து வைத்து மிரட்டியே பலமுறை அந்தப் பெண்களை இந்த வாலிபர்கள் அனுபவித்துள்ளனர்.

வேலூர் மாவட்ட கூடுதல் எஸ்.பி. முருகேசனிடம் சென்னை திருவல்லிக்கேணி உலகப்பன் தெருவை சேர்ந்த சுஜித்ரா என்ற பெண் கொடுத்த புகாரில்,

நான் கடந்த 7 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். அங்கு வேலை செய்யும் காயத்ரி தேவிக்கு பேஸ்புக் மூலம் சதீஷ் ஜெயராம் என்பவர் பழக்கமானார். அதைத் தொடர்ந்து
சதீஷ் மற்றும் அவரது நண்பர் ஆனந்த்பாபு ஆகியோர் காயத்ரி மூலம் எனக்கு பழக்கமானார்கள்.

கடந்த ஜனவரி மாதம் சதீசும், ஆனந்த்பாபு சென்னை வந்து எங்களை வேலூரில் உள்ள கோவிலுக்கு செல்லலாம் என்று கூறி அழைத்துச் சென்றனர். ஆனால் கோவிலுக்கு போகவில்லை. வேலூரில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்றனர். அங்கு காயத்ரி, சதீஷ் ஒரு அறையிலும் நானும் ஆனந்தும் ஒரு அறையிலும் தங்கினோம்.

அப்போது ஆனந்த் என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி சத்தியம் செய்து என்னுடன் உல்லாசமாக இருந்தார். மறுநாள் நாங்கள் சென்னை வந்து விட்டோம்.

அதைத்தொடர்ந்து நாங்கள் தொலைபேசியில் பேசி வந்தோம். பிப்ரவரி மாதம் சதீஷ் மீண்டும் என்னைத் தொடர்பு கொண்டு ஆனந்தும் நானும் ஹோட்டலுக்கு வந்து விடுகிறோம். நீயும், காயத்திரியும் வந்துவிடுங்கள் என்றார்.

நாங்களும் சென்று அங்கு அவர்களுடன் 2 நாட்கள் உல்லாசமாக இருந்தோம். அதைத்தொடர்ந்து சில நாட்கள் ஆனந்த்பாபு தொலைபேசியில் பேசுவதை நிறுத்தினார். மார்ச் மாதம் மீண்டும் ஹோட்டலுக்கு வருமாறு கூறினார். நான் வர மறுத்து விட்டேன்.

அப்போது ஆனந்த்பாபு நாம் உல்லாசமாக இருந்ததை புகைப்படம் எடுத்து பதிவு செய்து உள்ளேன். நீ சம்மதிக்கவில்லை என்றால் இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என்று மிரட்டினார். அதனால் நான் பயந்து போய் மீண்டும் ஹோட்டலுக்கு சென்று ஆனந்த்பாபுவுடன் உல்லாசமாக இருந்தேன்.
இந்நிலையில் காயத்ரி தேவியை சதீஷ் ஏமாற்றி விட்டதாகவும், மேலும் அவர்கள் ஒரு கும்பலாக சேர்ந்து பல குற்றங்களில் ஈடுபடுவதாகவும் எனனை போல பலரை இப்படி ஏமாற்றியதும் தெரியவந்தது. எனவே ஆனந்த்பாபு மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சதீஷ், திலீப், லூயிஸ் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

அவருடன் காயத்ரி தேவியும் எஸ்.பி. அலுவலத்துக்கு வந்து புகார் தந்தார்.

இதையடுத்து போலீசார் விசாரணையில் இறங்கினர். போலீசார் கூறிய யோசனையின்படி மீண்டும் சுஜித்ராவும், காயத்ரி தேவியும் ஆனந்த்பாபு மற்றும் சதீஷிடம் பேசினர்.

அவர்களை ராணிப்பேட்டை விடுதி ஒன்றிற்கு வருமாறு அழைத்தனர். அதை நம்பி நேற்றிரவு 9 மணி அளவில் இருவரும் நிரோத் சகிதமாக அங்கு வந்தனர். இருவரையும் போலீசார் வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.

இவர்கள் இன்னும் எத்தனைப் பெண்களை ஏமாற்றியுள்ளனரோ தெரியவில்லை. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவர்களது மேலும் பல நண்பர்களுக்கும் பேஸ்புக் மோசடிகளில் தொடர்பிருக்கலாம் என்று தெரிகிறது. இதனால், அவர்களையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.(thatstamil)

No comments:

Post a Comment