Friday, October 29, 2010

உயிருக்கு ஆபத்து: லலித் மோடி இந்தியா திரும்பமாட்டார- வழக்கறிஞர் மெஹ்மூத் அப்த





மும்பை, அக்.28: ஐ.பி.எல். முன்னாள் ஆணையர் லலித் மோடியின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இந்த சூழ்நிலை மாறும் வரையிலும் அவர் இந்தியா திரும்பமாட்டார் என்றார் லலித் மோடியின் வழக்கறிஞர் மெஹ்மூத் அப்தி.
 இது குறித்து செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அப்தி தெரிவித்தது:
 லலித் மோடி இந்தியா திரும்பினால், இங்குள்ள சில விஷமிகளால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனால், அவர் இப்போதைக்கு இந்தியா வரமாட்டார். லலித் மோடி தலைமறைவாக உள்ளார் என்ற தகவல் தவறானது. மத்திய அமலாக்கத் துறை மற்றும் அதிகாரிகளை அவர் லண்டனிலிருந்து தொடர்புகொண்டு வருகிறார் என்றார் அப்தி.
 லலித் மோடியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்வது தொடர்பாக மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அக்டோபர் 10-ம் வெளியிட்ட நோட்டீஸில் விளக்கம் கேட்டுள்ளது. விளக்கம் அளிக்க 15 நாள் கெடுவும் விதித்திருந்தது. ஆனால் அந்த நோட்டீஸ் அக்டோபர் 15ம் தேதிதான் கிடைக்கப்பெற்றது.
 எனவே, விளக்கம் அளிப்பதற்கான இறுதி தேதி குறித்து தெளிவான விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையிலும் அதற்கு உரிய பதில் இல்லை.
 இதற்கிடையே, என்ன காரணத்துக்காக பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று லலித் மோடி கோரியுள்ளார். மத்திய அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டதன் பேரிலேயே அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்ய உள்ளதாக நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான உரிய காரணத்தை அவர்கள் தெரிவிக்க வேண்டும் என்று மேலும் தெரிவித்தார் அப்தி.
 ஐ.பி.எல். போட்டிகளில் அன்னிய செலாவணி விதி மீறல்களில் ஈடுபட்டதாக கூறி, லலித் மோடி மீது மத்திய அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. அவரின் நடவடிக்கைகளை கண்காணிக்க சர்வதேச "ப்ளு நோட்டீஸýம்' பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
thanks dinamani

No comments:

Post a Comment