Monday, October 25, 2010

என் கொள்ளுப்பேரன்கூட சினிமா தயாரிப்பான்! கருணாநிதி பேச்சு!!

Murattu kaalai movie audio launch news











ஆமாம்... என் கொள்ளுப்பேரன்கூட சினிமா தயாரிப்பான். அதிலே எந்தவிதமான ஆச்சரியப்படவும் தேவையில்லை. படத்தயாரிப்பு என்பது ஒன்றும் தவறான காரியமல்ல என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.சுந்தர் சி, சினேகா நடித்திருக்கும் புதிய படமான முரட்டுக்காளை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு இசையை வெளியிட, நடிகர் விக்ரம் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

முரட்டுக்காளை என்ற இந்தப்படத்தை தயாரித்திருப்பவர் என்னுடைய பேரன் குணாநிதி. அவரே ஒரு முரட்டுக்காளை வீட்டில்! முரட்டுக்காளையாக வளர்ந்து, இப்போது சாதுவான பசுவாக ஆகியிருக்கிறார். முரட்டுக்காளையாக இருந்த அவரை கொஞ்சம் கொஞ்சமா பயிற்றுவித்து, சாதுவான பசுவாக ஆக்கிய அந்தப்பெருமை அவனுடைய தந்தை தம்பி அமிர்தத்திற்கு சேரும் என்று அந்த பாராட்டை நான் தம்பி அமிர்தத்திற்கு சொல்லிக் கொள்கிறேன்.

இந்தப்படம் எத்தகைய வெற்றியை பெறும் என்பதை நான் இங்கே எடுத்துச்சொல்லாமலே திரையிடப்பட்ட இரண்டு பாடல்களோடு இணைந்த காட்சியை கண்டபோது, அந்த காட்சியிலே நான் கண்ட நடிக நண்பர்களுடைய, நடிகைகளுடைய நடிப்பை கண்டபோது நிச்சயமாக இந்தப்படம் வெற்றியடையும் என்ற நம்பிக்கையை நானும் பெற்றேன். நண்பர் சுமன் இங்கே பேசினார். அப்போதுதான் வைரமுத்துவிடம் கேட்டேன். சுமனை எனக்கு நன்றாக தெரியும். `இப்படி தமிழ் பேசுகிறாரே, அவர் என்ன தமிழ்நாட்டுக்காரரா என்று கேட்டேன். `இல்லை இல்லை, ஆந்திராக்காரர் என்று சொன்னார். வேடிக்கை என்னவென்றால், ஆந்திராக்காரர் பேசுகின்ற அளவிற்கு நம்முடைய தமிழ் நடிகர்கள் சில பேர் பேசுவதில்லையே என்ற வருத்தம் எனக்கு இருக்கின்றது.

சில பேருக்கு கோபாலபுரமே சினிமா உலகமாக ஆகி விடுமோ என்று சொல்லத் தோன்றியுள்ளது. ஆமாம். சினிமா உலகம் தான். சினிமா உலகத்திலேயிருந்து வந்தவர்கள்தான் பல பேர் இன்றைக்கு கோபாலபுரத்திலிருந்து தங்களுடைய புகழ் கொடியை நாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். நான் அதற்காக வெட்கப்படவில்லை. மருமகன் படம் எடுத்து படத்தயாரிப்பாளர், மகன் படத்தயாரிப்பாளர், பேரன் படத்தயாரிப்பாளர் என்றெல்லாம் இன்றைக்கு சில பேர் அரசியல் ரீதியாக கேலி பேசுகிறார்கள், கிண்டல் பேசுகிறார்கள். ஆமாம், என் பேரன் பட தயாரிப்பாளர் தான். இன்னும் கொஞ்ச நாளைக்கு பிறகு என்னுடைய கொள்ளுப்பேரன் கூட படத்தயாரிப்பாளராக ஆனால், அதிலே எந்தவிதமான ஆச்சரியப்படவும் தேவையில்லை. படத்தயாரிப்பு என்பது ஒன்றும் தவறான காரியமல்ல. படத்தயாரிப்பு என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தொழில்தான்.

No comments:

Post a Comment