Thursday, November 18, 2010

5 தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்: டிராய்


 ஐந்து தொலைத்தொடர்பு  நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 69 அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசிடம் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கூறியுள்ளது.
விடீயோகான், யூனினார் ஆகியவை இந்த 5 நிறுவனங்களில் அடங்கும். இவை அனைத்தும் கடந்த 2008-ல் வழங்கப்பட்ட உரிமங்கள் ஆகும்.
உரிம விதிமுறைகளை இந்த நிறுவனங்கள் மீறிவிட்டதாகத் தெரிகிறது.
எடிசாலட் நிறுவனத்தின் (முந்தைய பெயர் ஸ்வான்) அனைத்து 15 மண்டலங்கள், யூனினார் நிறுவனத்தின் 22 மண்டலங்கள், விடீயோகான் மற்றும் லூப் டெலிகாம் நிறுவனத்தின் 21 மண்டலங்களுக்கான உரிமங்களை ரத்து செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. மொத்தம் 69 உரிமங்களை ரத்து செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.
அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேட்டில்  1.76 லட்சம் கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக தலைமை கணக்குத் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் டிராய் இவ்வாறு கூறியுள்ளது.
இந்நிலையில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், துறை அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டினார். இதையடுத்து பல உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தெரிகிறது.
டிராயின் இந்த நடவடிக்கை ஏற்கெனவே பதவியை ராஜிநாமா செய்துள்ள ஆ.ராசாவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment