
"தமிழகத்திற்கு விடியலைக் காண்பதற்கு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சேலத்தில் மாநாடு நடத்தப்படும்' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தே.மு.தி.க., ஒரு தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உள்ளது. ஒரு கட்சியைத் துவங்கி நடத்தினால் மட்டும் போதாது. மக்களின் பேராதரவு கிடைத்தால் மட்டுமே அரசியலில் அந்த கட்சி தலை நிமிர்ந்து நிற்க முடியும். தமிழகமெங்கும் சிற்றூர்களிலும், குக்கிராமங்களிலம், மூலை முடுக்குகளிலும் சிதறிக் கிடக்கின்ற நாம் எல்லாரும் ஜாதி, மதம் என்ற வேறுபாடு பாராமல் நாம் அனைவரும் ஏற்றத்தாழ்வை மறந்து, ஒரே மாநாடாக கூட வேண்டும் என்பதே எனது ஆசை. ஆகவே தே.மு.தி.க., சார்பில் ஒரு மாநில மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளேன். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சேலம் பகுதியில் நடத்தலாம் என கருதுகிறேன்.தே.மு.தி.க.,வின் வளர்ச்சிப் பாதையில் இது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடியது என்பதால், இந்த மாநாட்டில் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். கடந்த 2005ம் ஆண்டு கட்சி துவங்க நாம் நடத்திய முதல் மாநாட்டில் எவ்வாறு நீங்கள் முழு வீச்சுடன் அர்ப்பணித்து கொண்டீர்களோ அதுபோல இப்பொழுதும் மாநாட்டுச் செய்தியை விளம்பரப்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வு, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள், மின்வெட்டு, குடிநீர் பற்றாக்குறை போன்றவற்றால் தமிழகம் பீடிக்கப்பட்டிருக்கிறது. இருளில் சிக்கித் தவிக்கும் தமிழகம் மாநாட்டின் மூலம் விடியலைக் காணட்டும்.இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.(dinamalar)
No comments:
Post a Comment