Thursday, November 18, 2010

இன்று வரை தி.மு.க., கூட்டணி; நாளை எப்படியோ: இளங்கோவன்



: ""தி.மு.க., கூட்டணியில் காங்கிரசாரை மதிப்பதில் லை. இன்று வரை தி.மு.க.,வுடன் கூட்டணி, நாளை என்ன என்று தெரியாது,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார்.

சேலத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து, மத்திய அமைச்சர் பதவியை ராஜா, ராஜினாமா செய்தார். அதேபோல், கர்நாடகாவில் 6,000 கோடி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பா.ஜ., முதல்வர் எடியூரப்பாவையும் ராஜினாமா செய்யச் சொல்வரா? ராஜா விவகாரத்தில் விசாரணை முடிந்தால் தான் குற்றவாளியா, இல்லையா என்பது தெரியும். தி.மு.க.,வை பொறுத்தவரை, மத்தியில் தேவையான பதவிகளை கேட்டு வாங்கிக் கொண்டனர்; ஆனால், தமிழகத்தில் காங்கிரசாருக்கு பதவி தர மறுக்கின்றனர். சுயஉதவி குழுவுக்கு கடனுதவி வழங்கும் துணை முதல்வர், மத்திய அரசு வங்கி மூலமே கடன் வழங்கப்படுகிறது என்பதை கூறுவதில்லை.

காங்கிரசுடன் கூட்டணி வைக்க ஜெயலலிதாவும், விஜயகாந்தும், சரத்குமாரும், பா.ம.க.,வும் விரும்புகின்றனர். தலைமை என்ன முடிவு எடுக்குமோ, அதன்படி தான் கூட்டணி. இன்று வரை தி.மு.க., வுடன் கூட்டணி, நாளை என்ன என்று தெரியாது. காங்கிரஸ் கூட்டணியை தான் எல்லாரும் விரும்புகின்றனர். மாற்றம் இருந்தால், ஆறு மாதத்துக்கு பிறகு சட்டசபை தேர்தலை தைரியமாக சந்திப்போம். தி.மு.க., கூட்டணியில் காங்கிரசாரை மதிப்பதில்லை; கசப்பும், இனிப்பும் கலந்த மருந்தாக கூட்டணியில் இருந்து வருகிறோம். இவ்வாறு இளங்கோவன் தெரிவித்தார். தொடர்ந்து, "தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி தான் நடக்கிறது என தங்கபாலு கூறியுள்ளாரே?' என்று கேட்டதற்கு, "இப்போது இருக்கும் தலைவரை பற்றி நான் கூற விரும்பவில்லை. அவர் சொந்த காரணங்களுக்காக அரசின் பி.ஆர்.ஓ.,வாக செயல்படுகிறார்' என்றார்.(dinamalar)

No comments:

Post a Comment