Wednesday, November 24, 2010

"விருதகிரி' இசை வெளியீட்டு விழா



 கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விஜயகாந்த் முதல்முறையாக இயக்கி நடித்துள்ள விருதகிரி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 இதில் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் பேசியது:
 இந்த விழாவுக்கு என்னை வாழ்த்த திரையுலகத்தினர் பலர் வந்திருக்கின்றனர். கவிஞர் வாலிக்கு எனது படத்தின் முதல் பாடலைக் கொடுத்தேன். அவரின் பாடலை வெகுவாக ரசித்தவன் நான்.
 இந்தப் படத்தை 25 சதவீதம் சென்னையிலும், 25 சதவீதம் வெளிநாடுகளிலும் எடுத்துள்ளேன். இந்தப் படத்துக்காகப் பல பிரச்னைகளை சந்தித்துள்ளேன்.   எனது முந்தைய படங்களான தருமபுரி, சுதேசி, சபரி உள்ளிட்ட படங்களை வெளியிட முடியாமல் பல பிரச்னைகளைச் சந்தித்துள்ளேன்.
 தந்தை பெரியாரின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட சமத்துவபுரங்களின் நிலை என்ன என்பது பற்றி பலருக்குத் தெரியும். ஒடுக்கப்பட்டவர்களின் குரல் என கூறிக் கொண்டு, நிறைய பேரை ஒடுக்கிவிட்டார்.ரூ.59 லட்சம் ஏழைகளுக்கு இலவச வீடுகள் கட்டித் தரப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
அப்படியானால் 1967-ல் ஆட்சிக்கு வந்தவர்களால், இன்னும் ஏழ்மையை ஒழிக்க முடியவில்லை என்றுதானே அர்த்தம்.
 காங்கிரûஸப் பற்றியோ அல்லது அதிமுகவைப் பற்றியோ விஜயகாந்த் விமர்சிக்கவில்லை என்று கூறுகிறார்கள். அப்படியானால் அவர்களுடன்தான் கூட்டணியா பேசிக் கொள்கிறார்கள். என் மடியில் கனம் இல்லை. அதனால் எனக்குப் பயமும் இல்லை. வறுமையை ஒழிப்பேன் என்கிறேன். அப்படியானால் தனி மனித வருமானத்தைப் பெருக்குவேன் என்றுதான் அர்த்தம்.
  பிச்சைக்காரர்கள் ஒழிப்புத் திட்டம், கண்ணொளி திட்டம் உள்ளிட்ட திட்டங்களால் பயனடைந்தவர்கள் யாரென்று காட்டுங்கள். நான் எங்கும் உண்மையையே பேசுகிறேன்.
 விருதகிரி படத்தை ரிலீஸ் செய்யவிடாமல்தானே தடை செய்கிறீர்கள். அதை எப்படி ரிலீஸ் செய்கிறேன் என்பதைப் பொறுத்திருந்துப் பாருங்கள் என்றார் விஜயகாந்த்.
 தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, லிங்குசாமி, எழில் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment