Saturday, December 4, 2010

அன்புள்ள கௌதம் தம்பிக்கு!


     என் அருமை கௌதம் தம்பிக்கு பாராட்டுகளுடன் வணக்கங்கள்.  (கௌதம் எப்படி எனக்கு தம்பி என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நான் அண்ணனாக இருக்கும்போது அவர் எனக்கு  தம்பி! அவர் தம்பியாக இருக்கும்போது நான் அவருக்கு அண்ணன்!) 
     முதலில் உனக்கு தோனியின் வயிற்றில் புலியை கரைக்க வைத்ததற்கு முதல் பாராட்டுகள்.  தோனியை விட்டால் வேறு ஆள் இல்லை என்று நினைத்திருந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வயிற்றில் பீரை வார்ததர்க்காக இரண்டாவது பாராட்டுகள்.  காப்டனாக போட்டால்தான் சதம் அடிப்பேன் என்று நீ நிரூபித்ததற்கு மூன்றாவது பாராட்டுகள்.  தொடர்ந்து அடித்த இரண்டு சத்தத்தை வைத்துகொண்டு இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் இந்திய அணியில் நீங்காமல் இடம் பிடிக்க போகிறாயே அதற்க்கு அடுத்த பாராட்டுகள். 
     என்னதான் ஒரு நாள் முதல்வர் போல ஒரே ஒரே தொடரில் மட்டும் நீ காப்டனாக இருந்தாலும் நீ பெற்ற வெற்றி சரித்திரத்தில் நிலைத்திருக்கும்.  எதுக்கும் கோஹ்ளியிடம் சற்று கவனமாக இரு.  அடுத்த காப்டனாக கோஹ்லி வரக்கூடும் என்று பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் சொன்னதை மனதில் வைத்துகொள்.  இப்போது அசால்ட்டாக விட்டுவிட்டு பிறகு "அவனா நீ?" என்று நோந்துகொல்வதில் பயனில்லை.  இதை யுவராஜ் சிங்க் உன்னிடம்  சொள்ளசொன்னார்.  
     மேலும் அடிக்கடி கோவிலுக்கு சென்று வந்து உன்னுடைய ராசியை கூட்டிக்கொள்ள முயற்சி செய். அப்போதுதான் தோனி போன்று சிறந்த காப்டனாக வர முடியும்.  தோனி காப்டனாக விளையாண்ட முக்கால்வாசி போட்டிகளில் இந்தியா ராசியினால் வெற்றிபெற்றாலும் சிறந்த கேப்டன் தோனிதான் என்ற பெயர் நிலவுகிறதே அதனால்தான் கூறினேன். 
     இந்த உண்மையை டோனியிடம் போட்டுகொடுதுவிடாதே.  அடுத்து வரும் இரண்டு போட்டிகளிலும் அதிரடியாக வெற்றிபெற்றுவிடாமல் கஷ்டப்பட்டு விளையாடி வெற்றிபெற வாழ்த்துகள்.  பாக்குறதுக்கு போர் அடிக்குதப்பா!  எப்ப பார்த்தாலும் இந்தியா ஜெயிசிக்கிட்டே இருந்தா எப்படி.  தோனியோட மூளை உனக்கு இல்லை.  
     அப்புறம் இன்னொரு விஷயம், திறமை இருந்தாலும் எப்ப பார்த்தாலும் வேடிக்கை மட்டுமே பார்க்க வைத்திருக்கும் திவாரி தம்பியையும் கொஞ்சம் விளையாட விடப்பா! பாவம் அவனுக்கு விளையாட்டே மறந்துவிடும் போல இருக்கு என்று என்ன்கிட்ட புலம்பிதல்லுறான்.  அப்படி அவன் உங்களுக்கு என்னதான் பாவம் செஞ்சான்.  வேணும்னா அவன்கிட்ட சொல்லி உனக்கு ஒரு பீர் வாங்கிதரசொல்றேன்.  
      என்ன தம்பி சொன்னதெல்லாம் நினைவில வச்சுக்க.  பாத்து சூதானமா நடந்துக்க.அடுத்த கடிதத்துல சந்திக்கிறேன்.   

No comments:

Post a Comment