Saturday, December 4, 2010

தெரிந்துகொள்வோம் 4 (கருணாநிதி 4 )


    1957 தேர்தலில் தி.மு.கழகம் முதன் முதலாக சட்டசபை தேர்தலில் ஈடுபட்டது.  குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு கருணாநிதி வெற்றிபெற்றார்.  கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் 1963 இல் மறைந்தார்.  தி.மு.க நடத்திய  போராட்டங்களில் கருணாநிதியின் பங்கு முக்கியமானது.  1965 இல் இந்தி எதிர்ப்பு போர்ராட்டதை தொடர்ந்து பாதுகாப்பு சட்ட போராட்டத்தை  தொடர்ந்து பாதுகாப்பு சட்டத்தின் கீழ கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை  தனிமை சிறையில் அடைக்கப்பட்டார்.
     1967 பொதுத்தேர்தல் தமிழக அரசியலில் ஒரே பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.  20 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த காங்கிரஸ்  தோல்வி அடைந்து,  தி.மு.கழகம் ஆட்சி பீடம் ஏறியது.  அண்ணா முதல்வரானார்.  கருணாநிதி பொதுபணிதுறை அம்மைச்சரானார்.  
பின்னர் போக்குவரத்து துறைக்கும் பொறுப்பேற்றார்.  அப்போது பேருந்துகளை அரசுடமையாக்கும் திட்டத்தை கொண்டுவந்தார்.  
     ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கூட முடியாத நிலையில் 1969 பிப்ரவரி 2 இல் நள்ளிரவு அண்ணா மறைந்தார்.  பின்னர் சட்டமன்ற தி.மு.கழக கட்சி கூட்டத்தில்  கருணாநிதி முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படார்.
     கருணாநிதி தயாளு அம்மாள் தம்பதிகளுக்கு மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு என்ற மூன்று மகன்களும், செல்வி என்ற மகளும் உள்ளனர்.
     கலை துறையிலும், கட்சி பணியிலும்  கருணாநிதியுடன் இணைந்து பணியாற்றி, பின்னர் வாழ்கையுளும் இணைந்த ராஜாதி அம்மாளின் ஒரே மகள் கனிமொழி.   
(தொடரும்.....)

No comments:

Post a Comment