Friday, March 11, 2011

இங்கிலாந்துக்கு மீண்டும் அவமானம்

உலக கோப்பை பரபரப்பான லீக் போட்டியில் வங்கதேச அணி, இங்கிலாந்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஒரு கட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்த போதும், "டெயிலெண்டரான ஷபியுல் இஸ்லாம் அதிரடியாக ஆடி, வங்கதேசத்தின் வெற்றியை <உறுதி செய்தார். ஏற்கனவே "கத்துக்குட்டி
அயர்லாந்திடம் வீழந்த இங்கிலாந்து அணி, தற்போது பலம்குன்றிய வங்கதேசத்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்து, இன்னொரு அவமானத்தை சந்தித்துள்ளது.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று சிட்டகாங்கில் நடந்த "பி பிரிவு லீக் போட்டியில் இங்கிலாந்து, வங்கதேச அணிகள் மோதின. வங்கதேச அணியில் அஷ்ரபுல் நீக்கப்பட்டு, மகமதுல்லா வாய்ப்பு பெற்றார். இங்கிலாந்து அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. மைக்கேல் யார்டி, ஸ்டூவர்ட் பிராட், பீட்டர்சனுக்கு பதில் முறையே கோலிங்வுட், அஜ்மல் ஷெசாத், மார்கன் இடம் பெற்றனர். டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் சாகிப் அல் ஹசன், "பீல்டிங் தேர்வு செய்தார்.
துவக்கம் மோசம்:
இங்கிலாந்து அணி திணறல் துவக்கம் கண்டது. அப்துர் ரசாக் "வைடாக வீசிய பந்தில் வங்கதேச கீப்பர் முஷ்பிகுர் ரகிமின் துல்லிய "ஸ்டம்பிங்கில் மாட் பிரயார்(15) வீணாக அவுட்டானார். நயீம் இஸ்லாம் வலையில் கேப்டன் ஸ்டிராஸ்(18) சிக்கினார். மகமதுல்லா சுழலில் இயான் பெல்(5) காலியானார். அப்போது 16.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
விவேக ஆட்டம்:
இதற்கு பின் ஜோனதான் டிராட், மார்கன் இணைந்து பொறுப்பாக ஆடினர். விவேகமாக "பேட்டிங் செய்த இவர்கள் ஒன்று, இரண்டு ரன்களாக எடுத்து, அணியின் ஸ்கோரை நகர்த்தினர். 4வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் சேர்த்த நிலையில், மார்கன் 63 ரன்களுக்கு அவுட்டானார். சிறிது நேரத்தில் அரைசதம் கடந்த டிராட்(67), சாகிப் அல் ஹசன் பந்தில் வெளியேற, மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. அடுத்து வந்த ரவி போபரா(16), சுவான்(12), கோலிங்வுட்(14), பிரஸ்னன்(2) போன்றவர்கள் ஏனோ தானோ என ஆடினர். கடைசி 6 விக்கெட்டுகள் வெறும் 63 ரன்களுக்கு வீழ்ந்தன. இதையடுத்து இங்கிலாந்து அணி 49.4 ஓவரில் 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சுலப இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால், இம்ருல் கைஸ் இணைந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்த நிலையில், பிரஸ்னன் வேகத்தில் தமிம் இக்பால்(38) வெளியேறினார். சித்திக்(12) ரன் அவுட்டானார். ரகிபுல் ஹசன்(0) ஏமாற்றினார்.
இம்ருல் அபாரம்:
பின் இம்ருல் கைஸ், கேப்டன் சாகில் அல் ஹசன் சேர்ந்து, அணியை சரிவிலிருந்து மீட்டனர். சொந்த மண்ணில் அசத்திய இம்ருல் கைஸ், ஒரு நாள் போட்டிகளில் தனது 7வது அரைசதம் அடித்தார். இவர் 60 ரன்களுக்கு பரிதாபமாக ரன் அவுட்டானார். இந்த நேரத்தில் பந்துவீச வந்த ஷெசாத் திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது வேகத்தில் முஷ்பிகுர் ரகிம்(6), நயீம் இஸ்லாம்(0) அவுட்டாகினர். சுவான் சுழலில் சாகிப் அல் ஹசன்(32), அப்துர் ரசாகர் வெளியேற, வங்கதேச அணி 8 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்து தவித்தது.
ஷபியுல் அதிரடி:
கடைசி கட்டத்தில் மகமதுல்லா, ஷபியுல் இஸ்லாம் சேர்ந்து துணிச்சலாக போராடினர். சுவான் வீசிய போட்டியின் 42வது ஓவரில் மகமதுல்லா ஒரு பவுண்டரி மற்றும் ஷபியுல் ஒரு பவுண்டரி, சிக்சர் அடிக்க, ஆட்டத்தில் சூடு பிடித்தது. 46வது ஓவரில், ஆண்டர்சன் "வைடுகளாக வாரி வழங்க, வங்கதேசத்துக்கு 11 ரன்கள் கிடைத்தன. இது போட்டியில் திருப்புமுனை ஏற்படுத்தியது. பிரஸ்னன் வீசிய அடுத்த ஓவரில் ஷபியுல் இரண்டு பவுண்டரி அடித்தார். பின் பரஸ்னன் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மகமதுல்லா வெற்றியை உறுதி செய்தார். இப்படி, "வால் ஆடியதால் தலைநிமிர்ந்த வங்கதேச அணி 49 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்து "திரில் வெற்றி பெற்றது. மகமதுல்லா(21), ஷபியுல்(24) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை இம்ருல் கைஸ் வென்றார்.
இம்ருல் "1000

இங்கிலாந்துக்கு எதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இம்ருல் கைஸ் 60 ரன்கள் எடுத்தார். இதில் இவர், 58வது ரன்னை கடந்த போது, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ஆயிரம் ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இதுவரை இவர் 34 போட்டியில் பங்கேற்று 1005 ரன்கள் (ஒரு சதம், 7 அரைசதம்) எடுத்துள்ளார். இதன்மூலம் ஆயிரம் ரன்களை எட்டிய 17வது வங்கதேச வீரர் என்ற பெருமை பெற்றார்.
---
காலிறுதி வாய்ப்பு எப்படி?
பத்தாவது உலக கோப்பை தொடரில், இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் இங்கிலாந்து அணி 2 வெற்றி, 2 தோல்வி, ஒரு "டை உட்பட 5 புள்ளிகள் பெற்றுள்ளது. சென்னையில் வரும் 17ம் தேதி நடக்கவுள்ள கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீசை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே காலிறுதிக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
* இதுவரை விளையாடிய நான்கு லீக் போட்டிகளில் வங்கதேச அணி 2 வெற்றி, 2 தோல்வி உட்பட 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அடுத்து வரும் போட்டிகளில் நெதர்லாந்து (மார்ச் 14, சிட்டகாங்), தென் ஆப்ரிக்கா (மார்ச் 19, மிர்புர்) அணிகளை சந்திக்க உள்ள வங்கதேச அணி, இரண்டிலும் வெற்றி பெறும் பட்சத்தில் காலிறுதிக்கு சுலமாக முன்னேறலாம். ஒருவேளை ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெறும் பட்சத்தில், "பி பிரிவில் உள்ள இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட மற்ற அணிகள் விளையாடும் போட்டிகளில் முடிவைப் பொறுத்து காலிறுதி வாய்ப்பு நிர்ணயிக்கப்படும்.
------
ஸ்கோர்போர்டு
இங்கிலாந்து
ஸ்டிராஸ்(கே)ஜுனாய்டு(ப)நயீம்    18(31)
பிரையர்(ஸ்டம்)முஷ்பிகுர்(ப)அப்துர்    15(20)
டிராட்(கே)ஜுனாய்டு(ப)சாகிப்    67(99)
பெல்(கே)நயீம்(ப)மகமதுல்லா    5(23)
மார்கன்(கே)இம்ருல்(ப)நயீம்    63(72)
போபரா(கே)நயீம்(ப)அப்துர்    16(22)
சுவான்(கே)+(ப)சாகிப்    12(8)
கோலிங்வுட்-ரன்அவுட்(மகமதுல்லா)    14(13)
பிரஸ்னன்(கே)ஷபியுல்(ப)ருபெல்    2(2)
செஷாத்(ப)ஷபியுல்    1(3)
ஆண்டர்சன்-அவுட் இல்லை-    2(5)
உதிரிகள்    10   
மொத்தம் (49.4 ஓவரில், "ஆல்-அவுட்)    225
விக்கெட் வீழ்ச்சி: 1-32(பிரையர்), 2-39(ஸ்டிராஸ்), 3-53(பெல்), 4-162(மார்கன்), 5-182(டிராட்), 6-195(போபரா), 7-209(சுவான்), 8-215(பிரஸ்னன்), 9-217(செஷாத்), 10-225(கோலிங்வுட்)
பந்துவீச்சு: ஷபியுல் 8-0-43-1, ருபெல் 8.4-0-40-1, நயீம் 8-0-29-2, அப்துர் 10-2-32-2, மகமதுல்லா 5-0-30-1, சாகிப் 10-0-49-2.
வங்கதேசம்
தமிம்(ப)பிரஸ்னன்    38(26)
இம்ருல்-ரன்அவுட்-(செஷாத்/பிரையர்)    60(100)
ஜுனாய்டு-ரன்அவுட்-(ஆண்டர்சன்)    12(12)
ரகிபுல்(ப)செஷாத்    0(2)
சாகிப்(ப)சுவான்    32(58)
முஷ்பிகுர்(கே)பிரையர்(ப)செஷாத்    6(20)
மகமதுல்லா-அவுட் இல்லை-    21(42)
நயீம்(ப)செஷாத்    0(5)
அப்துர்(கே)பிரஸ்னன்(ப)சுவான்    1(5)
ஷபியுல்-அவுட் இல்லை-    24(24)
உதிரிகள்    33   
மொத்தம் (49 ஓவரில், 8 விக்.,)    227   
விக்கெட் வீழ்ச்சி: 1-56(தமிம்), 2-70(ஜுனாய்டு), 3-73(ரகிபுல்), 4-155(இம்ருல்), 5-162(சாகிப்), 6-166(முஷ்பிகுர்), 7-166(நயீம்), 8-169(அப்துர்),
பந்து வீச்சு: ஆண்டர்சன் 9-0-54-0, செஷாத் 10-0-43-3, பிரஸ்னன் 10-1-35-1, சுவான் 10-1-42-2, போபரா 3-0-19-0, கோலிங்வுட் 7-0-24-0(dinamalar)

No comments:

Post a Comment