Saturday, April 23, 2011

சென்னை சொதப்பல் கிங்ஸ்!


ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி மீண்டும் ஒரு முறை சொதப்பியது. நேற்று நடந்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. ஐந்து விக்கெட் வீழ்த்திய ஹர்பஜன், மும்பை அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார். சென்னை சார்பில் பத்ரிநாத்தின் ஆட்டம்
வீணானது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று மும்பையில் நடந்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை அணியில் ஜகாதி, சவுத்தி நீக்கப்பட்டு ரந்திவ், ஜோகிந்தர் சர்மா வாய்ப்பு பெற்றனர். மும்பை அணியில் அலி முர்டசாவுக்கு பதிலாக மீண்டும் ஹர்பஜன் இடம் பெற்றார். "டாஸ்' வென்ற சென்னை அணியின் கேப்டன் "பீல்டிங்' தேர்வு செய்தார்.
மும்பை அணிக்கு எடுத்த எடுப்பிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆல்பி மார்கல் பந்தில் சதிஷ் "டக்' அவுட்டானார். கேப்டன் சச்சின்(5), போலிஞ்சர் வேகத்தில் வெளியேற, மும்பை ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
ரோகித் அதிரடி:பின் அம்பதி ராயுடு, ரோகித் சர்மா இணைந்து அசத்தினர். ரந்திவ் சுழலில் ராயுடு(27) வீழ்ந்தார். அடுத்து வந்த சைமண்ட்ஸ் "கம்பெனி' கொடுக்க, தனது வாணவேடிக்கையை தொடர்ந்தார் ரோகித். ரந்திவ் பந்தில் ஒரு சிக்சர் அடித்த இவர், அரைசதம் கடந்தார். ஜோகிந்தர் வீசிய போட்டியின் 16வது ஓவரில் சைமண்ட்ஸ் ஒரு சிக்சர், ரோகித் 2 பவுண்டரி அடித்து, ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினர். அஷ்வின் பந்திலும் சிக்சர் விளாசினார் சைமண்ட்ஸ். மறுபக்கம் ரெய்னா ஓவரில் ரோகித் 2 சிக்சர் அடித்தார். போலிஞ்சர் பந்தில் ரோகித்(87) அவுட்டானார். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது. சைமண்ட்ஸ்(31) அவுட்டாகாமல் இருந்தார்.
திணறல் ஆட்டம்:
எட்டக் கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணி திணறல் துவக்கம் கண்டது. அகமது ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்த முரளி விஜய்(12) அதிக நேரம் நீடிக்கவில்லை. அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா(5), ஹர்பஜன் சுழலில் வீழ்ந்தார்.
 இதற்கு பின் மைக்கேல் ஹசி, தமிழக வீரர் பத்ரிநாத் சேர்ந்து போராடினர். ரோகித் சர்மா ஓவரில் பத்ரிநாத் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து நம்பிக்கை தந்தார். சதிஷ் ஓவரில் ஹசி 2 பவுண்டரி அடித்தார்.
அசத்தல் பீல்டிங்:
இந்த நேரத்தில் மீண்டும் பந்துவீச வந்த மலிங்கா திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது வேகத்தில் போலார்டின் சூப்பர் "கேட்ச்சில்' ஹசி(41) அவுட்டானார். அடுத்து போலார்டு பந்தில் ரோகித் சர்மாவின் அருமையான "கேட்ச்சில்' கேப்டன் தோனி(3) வெளியேற, சிக்கல் ஆரம்பமானது. போலார்டு உள்ளிட்ட மும்பை வீரர்கள் துடிப்பாக பீல்டிங் செய்ய, ரன் வறட்சி ஏற்பட்டது.
ஹர்பஜன் கலக்கல்:இதற்கு பின் ஹர்பஜன் சுழலில் சென்னை வீரர்கள் வரிசையாக சிக்கினர். இவர் வீசிய போட்டியின் 18வது ஓவரில் ஆல்பி மார்கல்(3), அஷ்வின்(0), ஜோகிந்தர்(0) அவுட்டாகினர். இதன் மூலம் ஐ.பி.எல்., அரங்கில் முதல் முறையாக 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டன. முனாப் கட்டுக்கோப்பாக பந்துவீசினார். பத்ரிநாத் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தும் பலன் கிடைக்கவில்லை. சென்னை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 156 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. போராடிய பத்ரிநாத்(71) அவுட்டாகாமல் இருந்தார்.
இவ்வவெற்றியின் மூலம் கடந்த முறை பைனலில் சென்னை அணியிடம் சந்தித்த தோல்விக்கு மும்பை அணி பழிதீர்த்தது.
ஆட்ட நாயகன் விருதை ஹர்பஜன் தட்டிச் சென்றார்.


ஸ்கோர் போர்டு
மும்பை இந்தியன்ஸ்
சதிஷ்(கே)அனிருதா(ப)மார்கல் 0(7)
சச்சின்(கே)ஹசி(ப)போலிஞ்சர் 5(8)
ராயுடு(ஸ்டம்)தோனி(ப)ரந்திவ் 27(29)
ரோகித்(கே)ஹசி(ப)போலிஞ்சர் 87(48)
சைமண்ட்ஸ்-அவுட் இல்லை- 31(26)
போலார்டு-அவுட் இல்லை- 0(2)
உதிரிகள் 14
மொத்தம்(20 ஓவரில் 4 விக்.,) 164
விக்கெட் வீழ்ச்சி: 1-9(சதிஷ்), 2-13(சச்சின்), 3-74(ராயுடு), 4-161(ரோகித்).
பந்துவீச்சு: மார்கல் 4-1-19-1, போலிஞ்சர் 4-0-30-2, ஜோகிந்தர் 3-0-34-0, அஷ்வின் 4-0-26-0, ரந்திவ் 3-0-31-1, ரெய்னா 2-0-22-0.
சென்னை சூப்பர் கிங்ஸ்ஹசி(கே)போலார்டு(ப)மலிங்கா 41(33)
விஜய்(கே)ரோகித்(ப)முனாப் 12(9)
ரெய்னா(கே)+(ப)ஹர்பஜன் 5(4)
பத்ரிநாத்--அவுட் இல்லை- 71(48)
தோனி(கே)ரோகித்(ப)போலார்டு 3(6)
அனிருதா(கே)சதிஷ்(ப)ஹர்பஜன் 9(9)
மார்கல்(ப)ஹர்பஜன் 3(4)
அஷ்வின்(கே)போலார்டு(ப)ஹர்பஜன் 0(2)
ஜோகிந்தர்(கே)+(ப)ஹர்பஜன் 0(1)
ரந்திவ்(கே)சதிஷ்(ப)மலிங்கா 2(4)
போலிஞ்சர்-அவுட் இல்லை- 0(1)
உதிரிகள் 10
மொத்தம்(20 ஓவரில் 9 விக்.,) 156
விக்கெட் வீழ்ச்சி: 1-31(விஜய்), 2-38(ரெய்னா), 3-98(ஹசி), 4-101(தோனி), 5-123(அனிருதா), 6-136(மார்கல்), 7-136(அஷ்வின்), 8-137(ஜோகிந்தர்), 9-140(ரந்திவ்).
பந்துவீச்சு: முனாப் 4-0-40-1, மலிங்கா 4-0-20-2, அகமது 2-0-19-0, ஹர்பஜன் 4-0-18-5, ரோகித் 1-0-15-0, போலார்டு 4-0-30-1, சதிஷ் 1-0-13-0.

No comments:

Post a Comment