Saturday, May 7, 2011

கனிமொழி கைது ‌இல்லை: நாள்தோறும் ஆஜராக வேண்டும்; ஜாமின் உத்தரவு நிறுத்தி வைப்பு


ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடர்புடைய கருணாநிதி மகள் கனிமொழிசார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு மீதான உத்தரவை வரும் 14 ம் பிறப்பிப்பதாகவும், அதுவரை நாள்தோறும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும்
நீதிபதி சைனி இன்று அறிவித்தார். இதனையடுத்து உடனடியாக, கோர்‌ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கனிமொழி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனு‌‌வை நீதிபதி நிராகரித்து விட்டார்.

முன்னதாக சி.பி.ஐ., வக்கீல் யு.யு.,லலித் தனது வாதத்தி்ல் , சிறையில் இருக்கும் மாஜி அமைச்சர் ராஜாவுடன் கனிமொழி நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்றும் , சரத்குமார் கலைஞர் த‌ொலைக்காட்சியின் நிர்வாக மூளையாக இருந்தாலும் , கனிமொழி இந்த தொலைக்காட்சியின் அனைத்து விஷயங்களையும், தனது கட்டுக்குள் வைத்து பின்னணியில் இருந்து செயல்பட்டார் என்றும், இவருக்கு ஜாமின் வழங்க கூடாது என்றும் எடுத்துரைத்தார்.

சி.பி.ஐ., சார்பில் ஆஜரான வக்கீல் யு.யு.,லலித் மேலும் வாதிடுகையில் கூறியதாவது ; கலைஞர் தொலைக்காட்சியின் அன்றாட பணிகள் அனைத்தும் கனிமொழிக்கு தெரியும் . கலைஞர் டி.வி., துவங்கும் நேரத்தில் ராஜாவுடன் நெருக்கமாக , கனிமொழி் இருந்தார். இதில் இருவரது பங்கும் இருந்தது , ராஜாவுடன் நெருங்கமாக இருந்ததால் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் பணம் கலைஞர் டி.வி., க்கு பரிமாற்றம் நடந்திருக்கிறது.

கனிமொழியும் இந்த சதியில் பங்கு கொண்டவர் இதில் இவருக்கும் பொறுப்பு உள்ளது. இவர் கலைஞர் டி.வி.,யின் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். டி.பி.,ரியாலிட்டி நிர்வாக இயக்குனரிடம் இருந்து பெறப்பட்ட 214 கோடி ரூபாய் ராசாவிடம் விசாரணை துவங்கிய பின்னர் திருப்பி செலுத்தப்பட்டது. மேலும் பண பரிமாற்றம், திரும்ப அளித்தல் உள்ளிட்டவைகளில் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

பணம் பரிவர்த்தனை நேர்மையாக நடந்தது என்பது நம்ப முடியாதது. எனவே கனிமொழியை ஜாமினில் விட முடியாது என்றார். கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார், பாவ்லா , கோயங்காவுக்கும் இதில் பங்கு உண்டு இவ்வாறு சி.பி.ஐ.,வக்கீல் கூறினார்.நேற்று ஆஜராகி வாதாடிய பிரபல வக்கீல் ஜெத்மலானி வாதிடுகையில் இதற்கு நேர்மாறாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு தரப்பு வாதங்கள் முடிந்து கனிமொழியை ஜாமினில் விடுவதா அல்லது கஸ்டடிக்கு அனுப்புவதா என்பது தொடர்பான விஷயத்தில் வரும் 14 ம் தேதிக்குள் தீர்ப்பு அளிப்பதாக நீதிபதி சைனி கூறியுள்ளார். அது வரை கனிமொழியும், சரத்குமாரும் நாள்தோறும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் இருந்து விலக்கு அளிக்ககோரும் மனு கனிமொழி சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனு மீது நீதிபதி எவ்வித உத்தரவும் பிறப்பிக்காமல் இருந்தார். மாலை 4 மணியளவில் இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

No comments:

Post a Comment